பார்லரே போகாம கலராகணுமா?... நாங்க சொல்றத கேளுங்க... தகதகன்னு ஜொலிப்பீங்க...

Posted By: Vijaya Kumar
Subscribe to Boldsky

கருப்பாக இருக்கும் யாருக்குத்தான் தான் கலராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. அப்படி கலராவதற்காக மாச பட்ஜெட்டில் சில ஆயிரங்களை ஒதுக்கி பார்லருக்குப் போனாலும் எந்த பலனும் இல்லாமல் இருந்தது தான் மிச்சம். ஆனால் அதேசமயம், இயற்கை பொருட்களை பயன்படுத்தி எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல், வீட்டிலேயே வெள்ளை ஆகலாம்.

beauty tips

அதிகம் வெயிலில் வெளியில் செல்வது தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. முதலில், தற்போது உள்ள நிறத்தில் ஒருந்து ஒன்று இரண்டு ஷேட்கள் தான் நம் நிறம் வெள்ளையாக மாறும் என என்பதை புரிந்துகொண்டு முதலில் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மாநிறமாக இருப்பதும், கருப்பாக இருப்பதும் கூட அழகு தான் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எலுமிச்சை சாறு

1. எலுமிச்சை சாறு

பல்லாயிரனம் ஆண்டுகளாக எலுமிச்சை சாறு பூசுவது தோலின் நிறத்தை

வென்மையாக்கும் வழிமுறையாக இருந்து வருகிறது. எலுமிச்சையில் இருக்கும்

அமிலத்தன்மை, தோலின் மேல் புறத்தில் இருக்கும் செல்களை உதிர செய்வதோடு,

உள்ளிருக்கும் செல்களுக்கு சிறு வண்ணப்பூச்சு அளிப்பதாகவும் செயல்படுகிறது.

எலுமிச்சை சாற்றை அப்படியே முகத்தில் பூசுவது சிறிதளவு எரிச்சல் கொடுக்கலாம்,

அதனால் எலுமிச்சை சாற்றின் சரியளவில் தண்ணீரை கலந்துகொள்ள வேண்டும்.

பஞ்சை பந்துபோல் செய்து கொண்டு, தண்ணீர் கலக்கப்பட்ட எலுமிச்சை சாற்றில்

தொட்டு முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, மிதமான சூட்டில்

உள்ள் நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று

முறைக்கு மேல் இதனை செய்தால் தோலில் எரிச்சல் ஏற்படலாம்.

2. மாய்ச்சரைஸர்

2. மாய்ச்சரைஸர்

முகம் கழுவியவுடன் ஈரப்பதம் அளிக்கும் கிரீம் ஏதாவது பயன்படுத்துவது நல்லது. ஏனெனில்

எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை தோலில் உள்ள ஈரப்பதம் மற்றும்

எண்ணெய்களை முற்றிலுமாக அகற்றி விடும். மூன்று நான்கு வாரங்களில் முகம் நல்ல

பொழிவை பெரும். இயற்கையாக வெள்ளையாகும் முறைகளில் மிகவும் சிறந்த முறை

இதுவாகும். எலுமிச்சை சாறுருடன் வெயிலில் சென்றால், அலர்ஜி ஏற்படலாம்

என்பதால் எலுமிச்சை சாறு பூசி, முகத்தை கழுவும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

3. எலுமிச்சை பால் கலவை

3. எலுமிச்சை பால் கலவை

வீட்டில் டப் பயன்படுத்தி குளிப்பவராக இருந்தால், டப் நிறைய தண்ணீரை முதலில்

நிரப்பிவிடவும். பின்னர் அதில் விடவும் கொழுப்பு அகற்றப்படாத பால் ஒரு கப்

ஊற்றி, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு முழுவதுமாக நீரில் கலக்கவும். நன்கு கலந்த

பின் அந்த நீரில் 20 நிமிடங்கள் இறங்கவும். பின்னர் நல்ல தண்ணீரில்

குளித்துவிடவும். பாலில் உள்ள என்சைம்கள் (நொதிகள்) தோலை

வெளிறச்செய்வதோடு, தோலின் ஈரத்தன்மையையும் கூட்டுகிறது. வாரம் ஒரு முறை

இந்த வழிமுறையை கடைபிடித்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

4. தயிர் தேன் கலவை

4. தயிர் தேன் கலவை

பாலை போலவே தயிரிலும் தோலை வென்மையாக்க நிறைய என்சைம்கள் உள்ளன.

ஈரத்தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் அளிக்கும் மருந்தாக தேன்

விலங்குகிறது. எனவே சரியான அளவு தயிரையும், தேனையும் கலந்து முகத்தில்

மாஸ்க் (mask) போல் போட்டுக்கொள்ளவும். 15 நிமிடங்களில் மிதமான

சூட்டில் உள்ள நீரில் குளித்துவிடவும்.

5. மஞ்சள் (அ) கடலை மாவு பேஸ்ட்

5. மஞ்சள் (அ) கடலை மாவு பேஸ்ட்

அதிகப்படியான பலன்களை எளிதில் பெற, திடமான பேஸ்ட்களை செய்து முகத்தில்

மாஸ்க் போல் போட்டுக்கொள்ளவும். ஒரு கப்பில் கால்வாசி அளவு கடலை மாவு

எடுத்துக்கொண்டு எலுமிச்சை அல்லது பாலில் கலந்து பேஸ்ட் தயாரிக்கலாம்.

இன்னொரு வழியில், ஒரு டீ ஸ்பூன் மஞ்சல் பொடியை எடுத்து அதில், எலுமிச்சை சாறு அல்லது பாலை கலந்து பேஸ்ட் தயாரிக்கலாம். இந்த பேஸ்டை முதலில் முகத்தை நன்கு கழுவிய பின்பு, மாஸ்க் போல போட்டுக்கொண்டு 15 நிமிடங்கள் இருந்து பின்னர் மிதமான

சூட்டில் உள்ள நீரில் கழுவி விடவேண்டும்.

6. டோனர்

6. டோனர்

தோலின் ஈரப்பதம் பாதுகாக்க வேண்டும். தோல் ஈரத்தன்மை உடையதாக இருந்தால் அவை இறந்த செல்களை படிய விடாது. ஈரத்தன்மையை தோலுக்கு அளிக்கும் கிரீம்களை தினசரி குளித்த பின் பயன்படுத்தவும். இதில் மது கலக்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். ஏனெனில் மது தோலின் ஈரத்தன்மையை வெகுவாக உரிஞ்சிவிடும். குளித்து முடித்த பின் உடம்பில் ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய்

எண்ணெய்யை தேய்துக்கொள்ளவும்.

எதை செய்யக்கூடாது...?

எதை செய்யக்கூடாது...?

எதையெல்லாம் செய்யலாம் என்று சொன்னுாமோ அதைவிட அதிகமாக நாம் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் சருமம் இயற்கையான அழகால் மிளிர வேண்டுமானால் கட்டாயம் கீழ்வரும் விஷயங்களைச் செய்யாதீர்கள். அப்படி செய்தால் தேவையில்லாத பக்க விளைவுகள் உண்டாகி, சருமத்தில் இருக்கிற அழகும் கெட்டுவிடும்.

கெமிக்கல் பிளீச்

கெமிக்கல் பிளீச்

கடினமான வேதிப்பொருட்களை கொண்ட ப்ளீச், அம்மோனியா மற்றும் இதர

சுத்தப்படுத்தும் பொருட்களை முகத்தில் பயன்படுத்த வேண்டாம். இவற்றை

முகத்தை வென்மையாக்க பயன்படுத்தலாம் என தவறான செய்தி

பரவிவருகிறது. இந்த கெமிக்கல்களில் தோலை பாதிக்கக்கூடிய ஏராளமான

நச்சு பொருட்கள் உள்ளதால் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும்

பாதிக்கப்பட்ட தோல் கருமையாக காட்சியளிக்கும் என்பதால் இவை

வென்மையாக்குவதற்கு பதிலாக அதன் நேர் எதிர் திசையில் பயணித்து விடும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அளவுகடந்த எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொள்ள வேண்டாம். அனைத்து

நிறங்களும் அழகு தான் என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்

நிறத்தில் இருந்து சிறிதளவு தான் வெள்ளையாக முடியும் என எதார்த்தத்தை

புரிந்து கொண்டு செயல்படவும். நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள் என்றால்

அதன் அழகை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உலகில் பல நாடுகளில் கருப்பு

அழகாக இருக்கிறது என்றும் தான் கருப்பாக வேண்டும் என்றும் பெரும் பணம்

செலவு செய்கின்றனர். நல்ல சருமத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்,

நல்ல சத்தான உணவை உட்கொள்தல் வேண்டும். அதிக நீரை

எடுத்துக்கொள்ள வேண்டும், தோலின் ஈரப்பதம் வெளியேராமல்

பார்த்துக்கொள்ள வேண்டும்.

தோல் தளர்த்தல்

தோல் தளர்த்தல்

உடலில் இறந்த தோலின் செல்கள் படிந்து கிடக்கும். இவை தோலை பொழிவற்றதாக

காட்சிப்படுத்தும். எனவே தோலின் மேற்புறத்தை தளர்த்துதல் மிகவும் அவசியம்.

அதற்கு ஒரு எளிய வழிமுறை என்னவென்றால் சர்க்கரை அல்லது உப்பு ஸ்கிரப்பரை

(scrubber) கொண்டு உடலை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். உடலை முழுமையாக

நனைத்த பிறகு, இந்த ஸ்கிரப்பரை வைத்து (தேய்ப்பான்) உடலில் முழுவதுமாக

தேய்க்கவும். முகத்தில் பயன்படுத்த சற்று மெல்லிய ஸ்கிரப்பர்களை பயன்படுத்தவும்.

வெயிலை தவிர்க்கவும்

வெயிலை தவிர்க்கவும்

முடிந்த அளவு வெளியில் செல்வதை தவிர்க்கவும். தினசரி வாழ்வில் சூரிய ஓளியில் படாமல் இருப்பது கடினம் தான். ஆனால் இதனால் தோல் கருமையடையவே செய்கின்றன. அதற்காக வீட்டிலேயே தங்காமல், வெளியில் செல்ல நேரும் போது சன் ஸ்கிரீன்கள் போன்ற

பொருட்களை பயன்படுத்தவும். இந்த கிரீம்களில் 30 SPFகளுக்கு மேல் உள்ளதாக பார்த்துக்கொள்ளவும். மேலும் முகத்தில் வெயில் படாதவாறு அகலமான தொப்பிகளை அணிந்து செல்லவும். நீளமான ஸ்லீவ் வைத்த மேலாடைகள் மற்றும் பேண்டுகளை

பயன்படுத்துவதோடு, குளுமையாக உணரும் துணிகளை மட்டுமே வெயிலில் செல்லும் போது பயன்படுத்தவும். நம் உடம்பிற்கு, எலும்பு வலுவாக இருப்பதற்கு வைட்டமின் டி யும் தேவைப்படுவதால் முழுமையாக சூரியனை தவிர்த்துவிடவும் வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty tips
English summary

How to Naturally Whiten Skin at Home

Dark and dull skin can be caused by overexposure to the sun, environmental pollution, a medical condition, dry skin, stress, poor lifestyle choices, and prolonged use of chemical-based cosmetic products.