For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்

உதடுகளில் ஏற்படக்கூடிய பருக்களை எளிதாக தீர்க்க சில வீட்டுக்குறிப்புகள்

By Kripa.saravanan
|

முகத்தில் எந்த இடத்திலும் பருக்கள் தோன்றலாம். ஆனாலும் இந்த பருக்கள், உதடு போன்ற இடங்களில் தோன்றும்போது, அது ஒரு வித எரிச்சலையும் வலியையும் கூடுதலாக தருகின்றன. உதட்டில் உண்டாகும் பருக்களுக்கு சரியான சிகிச்சையை கொடுக்காமல் இருக்கும்போது அது பல இடங்களுக்கு பரவும் தன்மை உண்டாகிறது.

மேலும் ஒரு அசௌகரியத்தை கொடுக்கிறது . ஹார்மோன் மாற்றம், தொற்று போன்றவை இத்தகைய பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றன. பார்ப்பதற்கு அருவருப்பாக தோன்றும் பருக்களை முழுவதும் போக்குவது என்பது கடினமான ஒரு காரியம். ஆனால் அவற்றை போக்க சில எளிய வீட்டு குறிப்புகள் உண்டு. இவற்றை பயன்படுத்துவதால், பருக்கள் நீங்குகிறது, பருக்களை உண்டாக்கும் தொற்றுகள் தடுக்கப்பட்டு, மேலும் அவை பரவாமல் தடுக்கபடுகின்றன

easy and effective remedies to get rid of lip pimple

இன்று நம்முடைய பதிவில், உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் இதற்கான மூலபொருட்களில் கிருமிகளை எதிர்த்து போராடும், அழற்சியை எதிர்த்து போராடும் தன்மைகள் உள்ளன.

ஆகவே உங்களுக்கு இனி உதட்டில் பருக்கள் ஏற்படும்போது, இந்த எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி சிறந்த தீர்வை காணலாம். வாருங்கள் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் தூள் :

மஞ்சள் தூள் :

இந்த பாரம்பரிய வீட்டு வைத்திய மூலப் பொருள், அழற்சியை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள். உங்கள் உதட்டில் உண்டாகும் பருக்களுக்கான சிறந்த தீர்வை மஞ்சள் தருகிறது .

எப்படி பயன்படுத்துவது ?

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் பருவில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு ஈர துணியால் அதனை அகற்றி விடுங்கள். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். '

கேரட் எண்ணெய் :

கேரட் எண்ணெய் :

கேரட் எண்ணெய்யில் கிருமிகளை போக்கும் தன்மை உண்டு. ஆகவே இதனை பயன்படுத்தி பருக்களை விரைவில் குணமாக்கலாம் .

எப்படி பயன்படுத்துவது :

3 துளி கேரட் எண்ணெயுடன் , 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் சுத்தம் செய்யவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வருவதால் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.

மோர் :

மோர் :

மோர் பயன்படுத்துவதால் உடல் பாகங்களுக்கு ஒரு வித குளிர்ச்சி தன்மை பரவுகிறது. இது பருக்களால் உண்டாகும் அசௌகரியத்தை குறைக்கின்றது.

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல் :

உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க ஒரு சிறந்த வழி கற்றாழை ஜெல். இது பருக்களை உடனடியாக அகற்றுவதோடு மட்டுமில்லாமல், மேலும் தொற்றுகள் பரவாமல் தடுக்கின்றது.

எப்படி பயன்படுத்துவது ?

கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போடவும். அதில் சிறிதளவு பஞ்சை முக்கி எடுத்து, பருக்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். ஒரு நாளில் 4 முதல் 5 தடவை இப்படி செய்வதால் விரைவில் உதட்டு பருக்கள் மறையும்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

அழகு சம்மந்தமான பாதிப்புகளை குறைக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவுகிறது. இந்த விளக்கெண்ணெய் உதட்டு பருக்களுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது. விளக்கெண்ணெய் , கிருமிகளுடன் எதிர்த்து போராடி, வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை குறைக்கிறது.

எப்படி பயன்படுத்துவது ?

விளகேன்னியில் பஞ்சை நனைத்து பருக்களில் மீது தடவவும். 20-25 நிமிடங்கள் கழித்து ஈர துணியால் எண்ணெய்யை அகற்றி, குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை பயன்படுத்துவதால், விரைவில் பருக்கள் குணமாகும்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகரில் அல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் அதிகம் உள்ளது. இந்த அமிலம், வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.

எப்படி பயன்படுத்துவது ?

திரவமாக்கபட்ட ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவலாம். ஒரு நாளில் 2 அல்லது 3 முறை இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

வேப்பிலை :

வேப்பிலை :

சிறந்த கிருமி நாசினியான வேப்பிலை, உதட்டில் பருக்களை போக்க பெரிதும் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது :

வேப்பிலையை ஒரு கை நிறைய எடுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும். அந்த விழுதுடன், பன்னீரை சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து வருவதால் விரைவில் உதட்டில் உள்ள பருக்கள் போகும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

இந்த பதிவில் இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள தீர்வு க்ரீன் டீ . சக்திமிக்க அன்டி ஆக்ஸ்சிடென்ட் நிறைந்த ஒரு பொருள் க்ரீ டீ. இந்த இயற்கை தீர்வு ,தோற்று மற்றும் அழற்சியை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

இனிப்பு சேர்க்கப்படாத க்ரீன் டீயில் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வந்தால் விரைந்த நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

easy and effective remedies to get rid of lip pimple

easy and effective remedies to get rid of lip pimple
Story first published: Thursday, January 25, 2018, 16:14 [IST]
Desktop Bottom Promotion