மென்மையான பளபளக்கும் மார்பகத்தை பெற இத தடவினாலே போதுமாம்...

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக எல்லா பெண்களுக்குமே தங்களுடைய மார்பகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு இப்போது நவீன சிகிச்சைகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் அதில் எல்லாம் உயிர் போகும் அளவுக்கு ஏராளமான பக்க விளைவுகள் உண்டு. அதனால் அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் இயற்கையான முறைகளைப் பின்பற்றுவதே மிகச்சிறந்த வழி. அந்த வகையில் பெண்கள் தாங்கள் விரும்பும் பளபளப்பான, மென்மையான மார்பகத்தைப் பெறுவதற்கு என்ன மாதிரியான இயற்கை வழிகளைக் கடைபிடிக்கலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தளர்ந்த மார்பகங்கள்

தளர்ந்த மார்பகங்கள்

சில பெண்களுக்கு பொதுவாக மார்பகங்கள் தளர்ந்து தொங்க ஆரம்பித்துவிடும். சிலருக்கோ மார்புப் பகுதியில் அதிக சதைப்பிடிப்பு இருந்தால், தளர்வாக இருப்பது போன்றும் பெரிதாகவும் தெரியும். சில பெண்களுக்கு அவர்களுடைய உருவத்துக்கும் மார்பக அளவுக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு அளவு மிக்பபெரிதாக இருக்கும். அளவு எப்படி இருந்தாலும் பார்க்க பளபளப்புடன் மென்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்.

கவர்ச்சிப் பிரதேசம்

கவர்ச்சிப் பிரதேசம்

பொதுவாக மார்புப்பகுதி என்பது கவர்ச்சிப் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஆண்கள் பெண்களைப் பார்க்கும்போது முதலில் அவர்களுடைய கண்கள் பெண்களின் மார்பகப் பகுதியையே நோட்டமிடும். அதன்பின் தான் கண்ணைப் பார்த்துப் பேச ஆரம்பிப்பது எல்லாம். அதுமட்டுமில்லை. பெண்களுக்கே தங்களுடைய மார்பகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பல பெண்கள் தங்களுடைய மார்பகங்களைத் தாங்களே ரசித்துக் கொள்வதும் உண்டு. அப்படிப்பட்ட மார்பகத்தை மென்மையாக வைத்திருக்க இயற்கையான முறையில் எனன் செய்யலாம்.

 தினமும் மசாஜ்

தினமும் மசாஜ்

தினமும் சில நிமிடங்கள் இறுக்கமாக இருக்கிற மார்பகங்களை மசாஜ் செய்துவிட வேண்டும். ஐஸ் கட்டிகள் கொண்டும் மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மார்பகங்களின் மயிர் துளைகளுக்குள் இருக்கிற தூசிகள், அழுக்குகள் வெளியேறும். எப்போதும் நீங்கள் மார்பகங்களை ஆடைகளின் மூலம் மூடியே வைத்திருப்பதால் இறந்த செல்கள் வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிட வாய்ப்புகள் உண்டு. அதனால் இரவு நேரங்களில் பிரா அணிவதை தவிர்த்திடுங்கள்.

பேசியல் கிரீம்

பேசியல் கிரீம்

பேசியல் கிரீம் என்பது முகத்திற்கு தடவக்கூடியது. அதை வேறு எங்கும் தடவக்கூடாது என்று நாம் மிகவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். பேசியல் கிரீமை மார்பகங்களிலும் தடவலாம். அது எப்போதும் உங்களுடைய மார்பகங்களை பளபளப்பாக, மென்மையாக வைத்திருக்க உதவும். அதோடு மட்டுமல்ல சருமத்துக்கு பொலிவைத் தந்து மார்பக சருமம் சுருக்கமடையாமலும் ஆனு்டி ஏஜிங் ஏஜெண்ட்டாகவும் செயல்படும்.

மல்லாக்க படுங்கள்

மல்லாக்க படுங்கள்

ஆண்கள் பெரும்பாலும் மல்லாந்து அல்லது ஒருக்களித்துப் படுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் பெண்கள் சிறிது நேரம் கூட ஒரே மாதிரி படுத்திருப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் நல்ல தூக்கத்தில் இருக்கும்போது குப்புறப் படுத்துத் தூஞ்குகிறார்கள். அதில் ஏதோ சுகம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் குப்புறப் படுத்தால் மார்பகங்கள் தொங்க ஆரம்பித்துவிடும். அதன் அழகு கெட்டுவிடும்.

மாய்ச்சரைஸர்

மாய்ச்சரைஸர்

நம்முடைய முகம், கை, கால் சருமத்துக்கு எப்படி மாய்ச்சரைஸர் தேவையுா அதேபோலத் தான் மார்பகங்களின் மீதுள்ள சருமத்துக்கும் மாய்ச்சரைஸரும் நீர்ச்சத்தும் தேவை. அதனால் தினமும் கட்டாயம் மார்பக சருமத்துக்கு மாய்ச்சரைஸர் பயன்படுத்துங்கள். அது உங்க்ள மார்பகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

பொதுவாக மார்பகத்தை துணியால் மறைத்துதான் வைத்திருப்போம். ஆனாலும் வெளியில் செல்லும்போது மார்பகங்களுக்கு சன் ஸ்கிரீன் தடவாமல் செல்லாதீர்கள். எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்க சன்ஸ்கிரீன் மிக அவசியம்.

டயட்

டயட்

டயட் மூலமும் நம்முடைய மார்பகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அதிக அளவு புரோட்டீனும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடும் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்வதால் அதிக அளவிலான நீர்ச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும். அதேபோல் பீன்ஸ், முட்டை மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவர்

மருத்துவர்

சரும பராமரிப்பு மருத்துவரை சில குறிப்பிட்ட நாட்களக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுடைய மார்பகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, மார்பகப் புற்றுநோய், பூஞ்சைத்தொற்றுகள் ஆகியவை ஏற்படாமல் இருக்கவும் உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Ways To Keep Your Breast Soft and Smooth

Every woman out there desires to have smooth and firm breasts, but not every one of us is blessed with the same.
Story first published: Thursday, April 12, 2018, 18:00 [IST]