For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா?... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...

|

முகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். - செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் - மார்கஸ் டூலியஸ் சிசரோ
மேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் கண்களின் முக்கியத்துவத்தை கூறுகின்றன. சமீப காலங்களில், நாம் பார்க்கும் நபர் பற்றி ஏழு நொடிகளில் கணிக்கப்படும் போது, நமக்கு இளம் மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பராமரிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமாக மாறிவிட்டது.

உங்கள் கண்கள் கீழ், கரு வளையத்துடன் நீங்கள் ஒரு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒன்று நீங்கள் ஒரு இனிமையான உரையாடலை செய்ய இயலாது அல்லது பலரும் உங்களை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அனைவராலும் கூறப்படுவதை பார்க்க முடியும்.
இந்த கட்டுரையில் கண்கள் கீழ் உள்ள கரு வளையங்களில் இருந்து வீட்டு வைத்தியம் மூலம் நிவாரண பெற முடியும் மூலம் என்ற எளிய முறைகளை காணலாம்.

இந்த எளிய வியாதிக்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் (பெண்களில் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் அல்லது கர்ப்பம்), தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை மரபணுக்கள் மற்றும் பல. இதை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் முகத்தில் ஒரு மந்தமான தோற்றத்தை தோற்றுவிக்கும் மற்றும் இது "கண் பைகள்" போன்ற இரண்டாம் நிலை சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த கட்டுரையில், நம் வாசகர்களுக்கு கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்கு நான்கு முக்கிய எளிய வழிகளை பட்டியலிடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவளையங்கள்

கருவளையங்கள்

ஆரம்ப கட்டங்களில், கண்கள் கீழே இருக்கும் தோல் சாம்பல் நிறமாக மாறும் மற்றும் நீங்கள் எரிச்சல் மற்றும் கண் வலி உண்டாகும்.

பாரம்பரியம் காரணமாக, இந்த நோய் வயதானவுடன் மோசமடைகிறது. தோல் மெல்லியதாகிவிடும், கொழுப்பு (தோலழற்சி) இழக்கப்படும். காலப்போக்கில், தோல் கீழே இரத்த நாளங்கள் வெளிப்படும்.

கண் பகுதியில் உள்ள கரு வளையங்கள் உருவாக்கும் முக்கிய காரணிகள் அதிகப்படியான குடி, புகை பிடித்தல், சுற்றுப்புற மாசுபாடு மற்றும் ஒவ்வாமை.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

இது குளிரூட்டும் தன்மையை கொண்டது மற்றும் தோல் மென்மையாக்கும் மருத்துவ கூறுகளைக் கொண்டுள்ளது. கூடுதல் நன்மைகள் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண் வீக்கத்தை குறைக்கும்.

1. ஒரு வெள்ளரி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

2. குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் துண்டுகளை வைக்கவும்.

3. பத்து பதினைந்து நிமிடங்கள் கண்கலாய் சுற்றி துண்டுகளை வைக்கவும். பிறகு மிதமான சூடான நீரில் கழுவவும்.

நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை கிடைக்கும் வரை செயல்முறையை தொடரவும்.

இதில் மிக அதிக அளவு வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிலிக்கா ஆரோக்கியமான தோல் மற்றும் கொலாஜன் உருவாக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்களில் நீர் தேக்கத்தை குறைக்கிறது. இது குக்குர்பிடிசின்கள் மற்றும் குக்குமேரின் போன்ற பைட்டோ- நியூட்ரின்களையும் கொண்டுள்ளது.

கிரீன் டீ பைகள்

கிரீன் டீ பைகள்

தேயிலை மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டவை.

1. இரண்டு பச்சை தேயிலை பைகள் எடுத்து அவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும்.

2. தேநீர் பைகள் குளிர்ந்த உடன், முப்பது நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

3. திருப்திகரமான முடிவுகள் வரும் வரை கண்களின் மேல் தேநீர் பைகள் வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை நடைமுறையைத் தொடரலாம், காலையில் மற்றும் படுக்கைக்குப் போகும் முன்.

பச்சை தேயிலை டானின்கள் (பாலிபினால்கள்) நிறைந்தவை இவை தொழில் உள்ள கெட்ட திசுக்களை குறைக்கும். இந்த மருத்துவ பொருள் தொழில் உள்ள கருமை தன்மை மற்றும் வீக்கத்தை குறைகின்றன. மற்றொரு முக்கியமான பொருளான Epicatechin (EC), அவை உடலில் உள்ள நச்சு தன்மையை குறைக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

இது கண்கள் கீழ் எளிதாக செய்ய கூடிய இயற்கை வைத்தியம். பாதாம் எண்ணெய் கண்களின் கீழே பூசி தோலை மென்மையாக ஆக்க முடியும்.

1. நீங்கள் ஆட்காட்டி மற்றும் சுட்டிக்காட்டு விரல் இரண்டிலும் இரண்டு துளி பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளவும்.

2. படுக்கைக்குச் செல்லும் முன் மெதுவாக கண்கள் கீழ் பகுதிகளில் மசாஜ் செய்யவும்.

படுக்கைக்குச் செல்லும் முன் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

பாதாம் எண்ணெய் கனிமங்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. இது மென்மையான தோலை உண்டாக்கி மற்றும் புத்துணர்ச்சியடையா வைப்பதோடு தேவையான ஈரப்பதத்தை தருகிறது, இதனால் தோலுக்கு ஒளி சேர்கிறது. வெள்ளரிக்காயைப் போலவே, பாதாம் எண்ணெய், வைட்டமின் கே வளமான வளங்களை கொண்டுள்ளது.

பாதாம் எண்ணெய் ஒவ்வாமை உண்டு என்றல் கண்களில் எண்ணெய் படுவதை தவிர்க்கவும்.

தக்காளி

தக்காளி

ஒவ்வொரு வீட்டு சமையலறையிலிருந்தும் பயனுள்ள வீட்டு வைத்தியம்.

1. ஒரு தக்காளியை எடுத்து துண்டாக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும்

2. அதில், எலுமிச்சை சாறு ஒரு அரை டீஸ்பூன், அதே அளவு மஞ்சள் பவுடர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்க வேண்டும்.

3. இந்த கலவையை கண்களை சுற்றி பூசவும் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

ஒரு மாதத்திற்கு நடைமுறை தொடரலாம், இது உங்கள் தோலை மென்மையாக்குவதுடன் கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும்.

இந்த மருத்துவ கலவையில் உள்ள லிகோபீன் தோலை மிருதுவக்க உதவும். மற்ற சாதகமான சேர்மங்கள் சோலின், லுயூட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகும். தக்காளி உள்ள வைட்டமின் சி பழைய தோல் புத்துயிர் மற்றும் ஒரு ஆரோக்கியமான பளபளப்பு போன்றவற்றை தருகிறது. சருமத்தின் அமில அளவு (பி.ஹெச்) பராமரிக்கப்பட்டு, தோல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. தோல் எண்ணெய் அளவு குறைந்து, லைகோபீன் சூரிய ஒளியில் பாதுகாக்க உதவுகிறது.

கண்களின் கீழ் கருப்பு வட்டங்களின் உருவாக்கத்தை எவ்வாறு தடுப்பது

காரணிகள்

காரணிகள்

வாழ்க்கை பாணியில் எளிய மாற்றங்கள் இந்த வியாதிகளை தடுக்கும். இந்த பிரச்சனை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறிய அல்லது தற்காலிகமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் அதிக அளவு தூக்கம் இருக்க வேண்டும். அதிகப் படியான குறைபாட்டைக் குறைப்பதற்காக, கண் கண்ணாடி அணியலாம் இது சூரியன் கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவும். மதுபானம் புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள். காய்ச்சல் போன்ற ஒவ்வாமைகள், குறிப்பிட்ட பகுதிகளில் தோல் நிறமிழப்புக்கான ஒரு காரணியாகும்.

க்ளுட்டன் சகிப்புத்தன்மை இல்லாமை மற்றும் அடைந்த மூக்கு இவை கூட கரு வளையங்களை ஏற்படுத்தும். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒரு தொழில்முறை மருத்துவரின் வழிகாட்டுதலை நாடுங்கள்.

ஊட்டச்சத்து உணவு

ஊட்டச்சத்து உணவு

வைட்டமின்கள் நிறைந்த ஒரு சீரான ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் கே மற்றும் பி 12 இன் குறைபாடு காரணமாக கண்களில் இந்த பாதிப்பு உண்டாகலாம். உணவில் அதிக உப்பு இருந்தால், கவனமாக இருங்கள். அதிக உப்பு மிகுந்த அசாதாரணமான இடங்களில் தண்ணீரைத் தக்க வைக்கும், இது கண்களுக்குக் கீழே உண்டாகிறது.

ஒரே ஒரு கண், வீக்கம் மற்றும் நிறமாற்றம் என்றால் நிலை மிகவும் மோசமாகிவிடும், ஒரு தோல் மருத்துவரை நடுவது நல்லது. பொதுவாக கரு வளையம் பெரிய உடல் பாதிப்புகளை உண்டாக்காது. இதை சாதாரண வீட்டு வைத்தியம் அல்லது மேல்-எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படலாம்.

ஆங்கில மருத்துவம்

ஆங்கில மருத்துவம்

ஹைப்பர்-பிக்மென்டேஷன் என்பது கரு வளையத்தின் காரணமாக இருந்தால், உங்களுக்கு ட்ரி-லுமா (கூறு - ஹைட்ரோகினோன்) என்ற கிரீம்கள் பரிந்துரைக்கப்படலாம். இரத்த நாளங்கள் வெளியில் தெரியும் நிலை எனில், கடுமையான துடிப்பு ஒளி சிகிச்சை வேண்டும். சில கிரீம்கள் கருப்பு நிற வட்டங்களை மென்மையாக்கலாம் அவற்றில் சில பெயர்கள்: RevaleSkin Eye Replenishing Cream, Olay Definity Eye Illuminator மற்றும் SkinCeuticals கண் ஜெல்.

தோல் மெல்லியதாகி விட்டால், ஹைலூரோனிக் அமிலத்துடன் கூடிய உட்செலுத்தக்கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், விளைவுகள் தற்காலிகமாக இருக்கும். கொழுப்பு ஊசி அல்லது கொழுப்பு பரிமாற்றம் இந்த நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட வேண்டும் என்றால், பின்னர் கண்ணிமை அறுவை சிகிச்சை (blepharoplasty) தேவைப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective Ways To Get Rid of Dark Circles Under Eyes

these five Home Remedies to Get Rid of Dark Circles. try these remedies.
Story first published: Wednesday, August 1, 2018, 16:40 [IST]