For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நகம் இவ்ளோ வீக்கா இருக்கா?... எப்படி செலவில்லாம ஸ்டிராங் ஆக்கலாம்?

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம் அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம் மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம்

By Manikandan Navaneethan
|

நாம் வெளியில் செல்லும் பொழுது, வேலைக்கு செல்லும் போது, பார்ட்டிக்கு செல்லும் போது நிறைய மனிதர்களை சந்திக்கிறோம் அந்த நேரங்களில் நாம் முதலில் நீட்டுவது நமது கைகளைத்தான், முக்கியமாக செல்ஃபீ எடுக்கும் பொது என நாம் கைகளை உயர்த்தி காட்டுகிறோம்.

beauty

என்னதான் கைகளை நீட்டினாலும் உயர்த்தினாலும் நகங்கள் தான் அதன் அழகை கூட்டுகின்றன. அவ்வாறாக நம் அழகை, உறுதியை, வெற்றியை பிரதிபலிக்கும் நகங்களை நாம் பேணி காப்பது மிக அவசியம் அது மட்டும் அல்ல நகங்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை காட்டும் ஒரு பிம்பம் என்று கூட சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம். மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று என அடுக்கி கொண்டே போகலாம். எத்தனை பல காரணங்கள் இருந்தாலும் நகங்கள் உடைவது மனதுக்கு வேதனை தரக்கூடிய விஷயம். நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை உங்களுக்காகவே நாங்கள் 20 எளிய வழிகளில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பலமற்ற மற்றும் எளிதில் உடைய கூடிய நகங்களை எவ்வாறு சரி செய்வது என தொகுத்துள்ளோம் தொடர்ந்து படியுங்கள்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

ஈரப்பதம் குறைபாடு காரணமாக நகங்கள் அடிக்கடி பலவீனமடைகின்றன. இப்பிரச்சினைக்கு வைட்டமின் ஈ எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் நகங்களை தேவையான அளவு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இது உங்கள் நகங்களை ஊட்டப்படுத்தி உறுதிப்படுத்துகிறது. நீங்கள் வைட்டமின் ஈ மாத்திரைகளில் இருந்து எண்ணெயயை தனியாக பிரித்தெடுத்து நகங்களின் மீது மெதுவாக மசாஜ் செய்யுங்கள் இதனால் நகங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவ்வாறு இரண்டு முதல் மூன்று வாரங்கள் தினமும் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறலாம். அல்லது வைட்டமின் ஈ மாத்திரைகளை வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பு - மேற்சொன்ன வழிமுறையை தூங்குவதற்கு முன் பின்பற்றுவது அதிக பலனை தரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

நகங்களை வலுப்படுத்த தேங்காய் எண்ணெய் சிறந்த வீட்டு வைத்திய பொருளாகும். இதில் உள்ள கொழுப்பு சத்து உங்கள் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மேலும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் 5 நிமிடங்களுக்கு நகங்களின் மீது நேரடியாக மசாஜ் செய்யலாம் இதன் மூலம் நகங்களுக்கு அடியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்யலாம்.

மாற்றாக, கால் கப் சூடான தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து தூங்க செல்வதற்கு முன் 10 நிமிடங்களுக்கு உங்கள் நகங்களை ஊறச் செய்யவும். அதுமட்டும் இல்லாமல் இரவில் கையுறைகள் அணிந்துகொண்டு தூங்குங்குள். இவ்வழிமுறையை வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து செய்யுங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகர் (ஏசிவி)

ஆப்பிள் சிடர் வினிகர் (ஏசிவி)

ஏசிவி மற்றொரு சிறந்த இயற்கை நிவாரணி. இதிலுள்ள இரும்பு, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் பலவீனமான நகங்களுக்கு உறுதி அளிக்கும். மேலும் இதிலுள்ள ஆசிடிக் மற்றும் மாலிக் அமிலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். சுத்தமான ஏசிவியுடன் சமஅளவு தண்ணீர் கலந்து, அதில் ஒரு சில நிமிடங்களுக்கு உங்கள் நகங்களை ஊற விடுங்கள். அதன் பின்னர் உடனடியாக மெதுவாக நகத்தின் ஆரம்ப பகுதியினை (ஃக்யுடிசல்ஸ்) உள்ளே அழுத்தி விடவும். வலுவான நகங்களைப் பெற சில தினங்களுக்கு ஒரு முறை இதை செய்யுங்கள்.

கடல் உப்பு:

கடல் உப்பு:

உடைந்த நகங்களை குணப்படுத்த கடல் உப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அது உங்கள் நகங்களுக்கு பளபளப்பு மற்றும் உறுதி தன்மையை கொடுக்கிறது. கடல் உப்பை நேரடியாக பயன்படுத்தாமல் கீழ் சொன்ன வழிமுறையை பின் பற்றுங்கள், ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் 2 தேக்கரண்டி கடல் உப்பை சேர்க்கவும் பின்பு ஃபிராங்கின்சென்ஸ், கோதுமை விதை எண்ணெய், எலுமிச்சை மற்றும் மிர் எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும் (எல்லாம் இரு துளிகள் மட்டும்). இந்த கலவையில் 10-15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் பின்பு வெதுவெதுப்பான நீரில் நகங்களை கழுவவும். நகங்கள் காய்ந்த பின்பு நகங்களின் மீது சிறிது மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்வது உங்களுக்கு உறுதியான நகங்களை தரும்.

பீர்:

பீர்:

பீர் கூட வலுவான நகங்களை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த மருந்து. தவறாக என்ன வேண்டாம் நாங்கள் உங்களை பீர் குடிக்க சொல்லவில்லை, பீரை கொண்டு செய்யப்படும் மருந்து உங்களுக்கு உதவும் என்றுதான் கூறுகிறோம். இதற்கு முதலில் 1/4 கப் ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடாக்கவும் அதனுடன் 1/4 கப் ஏசிவி மற்றும் 1/2 கப் பீர் சேர்க்கவும். இக்கலவையில் 10-15 நிமிடங்களுக்கு உங்கள் நகங்களை முழுமையாக நனைக்கவும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம் நல்ல மாற்றம் தரும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உங்கள் நகங்களை வலுப்படுத்துதல் மற்றும் பளபளப்பு என இரண்டு விதங்களில் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை மிதமான அளவு சூடேற்றவும். பின்பு பருத்தி பஞ்சினால் மெதுவாக நகங்களின் மீது அப்ளை செய்யவும். அதன் பிறகு இரவில் கையுறைகளை அணியுங்கள் இவ்வாறு செய்யும் பொழுது உடைந்து போன நகங்களை ஒரே இரவில் குணப்படுத்த முடியும்.

மேல் சொன்ன முறைக்கு மாற்றாக, எலுமிச்சை சாறு மற்றும் அர்கான் எண்ணெய் ஆகியவற்றை சம அளவுகளில் கலந்து கொள்ளவும். அதில் உங்கள் நகங்களை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த இரண்டு முறைகளில் ஒன்றை 2-3 வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து செய்யவும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயில்:

சற்று சூடான எண்ணெய் உங்கள் நகங்களின் தரம் மற்றும் அழகை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். சம அளவு ஜோஜபா ஆயில், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை கையினால் தொடும் அளவு சூடேற்றவும். இப்பொழுது சிறிய பருத்தி துணியை பயன்படுத்தி உங்கள் நகங்களின் மீது அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் ஊறாவிட்டால் போதுமானது, எண்ணெய் உங்களின் நகங்களின் வழியே ஊடுருவி அவற்றை குணப்படுத்தும்.

முட்டையின் மஞ்சள் கரு:

முட்டையின் மஞ்சள் கரு:

உங்கள் நகங்கள் வறட்சி காரணமாக பலவீனமாக இருந்தால், இது உங்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியம். பால் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு கொண்டு கலவையை தயார் செய்யவும். இதைக்கொண்டு ஒரு சில நிமிடங்கள் உங்கள் நகங்களை மசாஜ் செய்யுங்கள். பின்பு சுத்தமான நீரில் கழுவுவம் இது உங்கள் நகங்களுக்கு தேவைப்படும் ஈரப்பதத்தை வழங்கும்.

காய்கறி எண்ணெய்:

காய்கறி எண்ணெய்:

உங்களின் வேலை நீண்ட நேரம் நகங்கள் தண்ணீரில் படும்படி இருக்குமேயானால் இந்த தீர்வு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிறிது காய்கறி எண்ணெய் எடுத்து, உங்கள் நகங்களின் மீது பருத்தி பஞ்சினால் ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஆரோக்கியமான நகங்களைப் பெற ஒவ்வொரு நாளும் 3-4 முறை செய்யுங்கள்.

ஆரஞ்சு சாறு:

ஆரஞ்சு சாறு:

ஆரஞ்சு சாற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது நகங்களின் வளர்ச்சிக்கு அவசியம். ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாற்றில் 10 நிமிடங்களுக்கு உங்கள் நகங்களை ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் நகங்களை கழுவுவம். நகங்கள் உலர்ந்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். வலுவான நகங்கள் பெற தினசரி பின்பற்றுங்கள்.

தக்காளி:

தக்காளி:

தக்காளியில் அதிக அளவு பயோட்டின் நிறைந்துள்ளது. இது நகங்கள் தடிமனாகவும் வலிமையாகவும் உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஊற்றவும் அதில் அரை கப் தக்காளிசாறை கலக்கவும். இக்கலவையில் உங்கள் நகங்களை 10 நிமிடங்கள் ஊறவிடவும். தினசரி தொடர்ந்து செய்வது நிறைந்த பலனை கொடுக்கும்.

ஷியா வெண்ணெய்:

ஷியா வெண்ணெய்:

ஷியா வெண்ணெய் ஒரு அற்புதமான மாய்ஸ்சரைசர். உங்கள் நகம் விரலுடன் சேர்ந்துள்ள இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஷியா வெண்ணெய் கொண்டு 20 நிமிடங்கள் தேய்த்து விட வேண்டும். இது நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு அவற்றை வலுவாகவும் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு செய்வது சேதமடைந்த நகங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் இருந்தால் கூட குணப்படுத்தும்.

ஆளி விதைகள்:

ஆளி விதைகள்:

ஆளி விதையில் ஒமேஹா-3 கொழுப்பு அமிலங்களுடன் சேர்த்து, வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற நுண்ணோட்டப் பொருட்கள் அதிகம் இருக்கின்றன இவைகள் உங்கள் நகங்களின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். ஆளி விதை எண்ணையை நேரடியாக நகங்களின் மீது பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பு சில நிமிடங்களுக்கு ஆளி விதை எண்ணையை கொண்டு மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்பு இரவில் கையுறைகளை அணிந்து தூங்குங்கள். அல்லது, உங்கள் அன்றாட உணவில் இரண்டு தேக்கரண்டி ஆளி விதைகளை சேர்த்து கொள்ளலாம்.

ஆமணக்கு எண்ணெய்:

ஆமணக்கு எண்ணெய்:

ஆமணக்கு எண்ணெய் உங்கள் நகங்களை வலுவூட்டுகிறது, மேலும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணையுடன் ஒரு சில சொட்டு புதினா எண்ணையை சேர்க்கவும் அதில் சிறிது எப்சாம் உப்பைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் இந்த கலவையில் உங்கள் விரல்களை நனைக்கவும் பின்பு கைகளை சாதாரண நீரில் கழுவுங்கள். இது பலவீனமான நகங்களை சீரமைக்க வீட்டிலேயே தயார் செய்ய கூடிய சிறந்த மூலிகை மருந்து ஆகும்.

 தேயிலை மர எண்ணெய்:

தேயிலை மர எண்ணெய்:

பூஞ்சை தொற்று காரணத்தினால் ஏற்படும் நகம் உடைதல் பிரச்சினைகளை குணப்படுத்த தேயிலை மர எண்ணெய் ஒரு சிறந்த மருந்து. ஒரு சில துளிகள் தேயிலை மர எண்ணெயுடன் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்க்கவும். இந்த எண்ணெய் கலவையை சில நிமிடங்கள் உங்கள் நகங்களின் மீது மசாஜ் செய்யவும் பின்பு அரை மணி நேரம் கழித்து மிதமான சூடு கொண்ட தண்ணீரில் கழுவவும். நன்கு காய்ந்த பிறகு நகங்களின் மீது மாய்ஸ்சரைசர் கொண்டு தேய்த்து விடவும். இவ்வாறு தினம் இரு முறை என ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.

ஹார்ஸ்டெய்ல்:

ஹார்ஸ்டெய்ல்:

வலுவான நகங்களுக்கு தேவையான முக்கியமான மற்றுமொரு முக்கியமான கனிமம் சிலிக்கா, இது ஹார்ஸ்டெய்லில் அதிகமாக உள்ளது. இது உங்கள் நகங்கலின் மீது உள்ள வெள்ளை புள்ளிகள் நீங்க உதவுகிறது. ஒரு கப் சூடான நீரில் 2 உலர்த்த ஹார்ஸ்டெய்ல் மூலிகை இலைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைத்துவிடுங்கள். சூடு குறைந்த பின்பு 20 நிமிடங்கள் வரை உங்கள் நகங்களை ஊற விடுங்கள். அடுத்ததாக கைகளை உலர்த்திய பிறகு உங்கள் நகங்களில் சிறிது ஆலிவ் எண்ணெயை தேய்க்கவும். தூங்கும் பொழுது இரவில் கையுறைகளை அணியுங்கள். இவ்வாறு வாரம் 3 முதல் 4 முறை செய்யுங்கள் நல்ல அழகான நகங்களை பெறலாம்.

காமெமைல் மற்றும் புதினா:

காமெமைல் மற்றும் புதினா:

இந்த மூலிகை தேநீர் கலவை உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வளர்ப்பதுடன், அவற்றிற்கு வாசனையும் தருகிறது. ஒரு கோப்பை சூடான நீருடன் ஒரு தேக்கரண்டி காமெமைல் மற்றும் புதினா தேநீரை சேர்க்கவும். 2 மணிநேரத்திற்கு பின்பு இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் கோதுமை மாவு 2 தேக்கரண்டி சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். இந்த பசையை நகங்களின் மீது அப்ளை செய்யவும். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்பு சாதாரண தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு வாரம் ஓன்று அல்லது இரண்டு முறை அதை செய்யுங்கள்.

க்ரீன் டீ:

க்ரீன் டீ:

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உங்கள் நகங்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. ஒரு கப் சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு சில க்ரீன் டீ இலைகளை சேர்க்கவும், சிறிது நேரம் அதன் சாறு நீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். நீர் குளிர்ந்த பின்பு 10-15 நிமிடங்களுக்கு இந்த தேநீரில் உங்கள் நகங்களை ஊறச் செய்யவும். ஒரு வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள். மாற்றாக, ஒரு சில சொட்டு க்ரீன் டீயுடன் கோதுமை விதை எண்ணெய் மற்றும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து. 5 நிமிடங்களுக்கு அதில் உங்கள் நகங்களை ஊற வைக்கவும். பின்பு உலர்ந்த துணியைப் பயன்படுத்தி நகங்களை மெதுவாக துடைக்கவும். வாரம் ஓன்று அல்லது இரண்டு முறை செய்யவும். மற்றொரு வழி, ஒரு சில துளிகள் க்ரீன் டீ இலையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையுடன் தேங்காய் எண்ணெய் அல்லது அலோ வேரா ஜெல் சேர்த்து வாரம் இருமுறை உங்கள் நகங்களை மசாஜ் செய்யவும்.

நெட்டில் தேயிலை

நெட்டில் தேயிலை

இதில் உள்ள சிலிக்கா சத்தின் காரணமாக நகங்கள் உடையாமல் தடுக்க படுகிறது. சூடான நீரை ஒரு கப்பில் எடுத்து, 2-3 தேக்கரண்டி உலர்ந்த நெட்டில் தேயிலைகளை சேர்க்க வேண்டும். அதை மூடி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும். பிறகு சாற்றை மட்டும் வடிகட்டி அதில் சில துளிகள் தேன் சேர்க்கவும். இவ்வாறு செய்த தேனீரை தினமும் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.

திராட்சை விதை எண்ணெய்

திராட்சை விதை எண்ணெய்

இது உங்கள் பலவீனமான நகங்களை ஈரப்படுத்தி பிளவுபட்ட நகங்களை குணப்படுத்துகிறது. உங்கள் நகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளின் மீது சிறிது திராட்சை விதை எண்ணெய் தேய்க்க வேண்டும். ஒரு சில வாரங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை தொடர்ந்து செய்யுங்கள். இது உங்கள் வெடிப்புற்ற நகங்களை குணப்படுத்தும்.

செய்ய வேண்டியது

செய்ய வேண்டியது

1. பயோட்டின் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், முட்டை, தக்காளி, பாதாம், காலிஃபிளவர், பருப்புகள், ஸ்ட்ராபெர்ரி, சோயாபான்ஸ், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். தேவைபட்டால் உங்கள் மருத்துவரைப கலந்தாலோசித்து பிறகு பயோட்டின் உணவுகளை உண்ணலாம்.

2. பயோட்டின் நிறைந்த உணவுகள் மட்டும் அல்லது ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், பால் பொருட்கள், இறைச்சி, விதைகள் மற்றும் கொட்டைகள், கீரை மற்றும் காய்கறிகள் என ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

3. தினமும் வாசலின் கொண்டு நகங்களை மசாஜ் செய்யுங்கள்.

4. தினமும் உடற்பயிற்ச்சி செய்யுங்கள், இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும்.

5. குறிப்பிட்ட இடைவேளையில் நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்

6. சிறந்த தயாரிப்பு மற்றும் தரமான நக பூச்சுகளை பயன்படுத்துங்கள்

7. நகங்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டுங்கள் தன்னால் வைட்டமின் டி நகங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

8. நிறைய தண்ணீர் குடியுங்கள்

9. ஃக்யுடிசெல்சை வெட்டி எடுக்காமல் உள்ள தள்ளி விடுவது நோய் தொற்றை குறைக்கும்

10. ஃக்யுடிசெல்சை ஈரப்பதத்துடன் வைத்திருக்க அதற்கான கிரீம் உபயோக படுத்துங்கள்.

11. நகங்களை மேல் பகுதியை தேய்த்து சுத்தமாக வையுங்கள், இதனால் நகம் உடைவதை தடுக்கலாம்.

12. வெளியில் செல்லும் போது, அதிக நேரம் நீரை கையாளும் பொழுது, ரசாயன பொருட்களை தொடும் பொழுது கையுறைகளை பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

1. அதிக நேரம் நீரை கையாளுதல் மற்றும் ரசாயன பொருட்களை கையாளுதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.

2. அசிட்டோன் மற்றும் பார்மால்டிஹைடு போன்ற ரசாயனம் கொண்ட நக பூச்சுகளை தவிருங்கள்.

3. செயற்கையான நகங்கள் உபயோகிப்பதை தவிருங்கள்

4. ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர் நகங்களின் ஈரப்பதத்தை எடுத்துவிடும் எனவே அவற்றை தவிருங்கள்.

5. நக பூச்சு நீக்கிகளை அதிகமாக உபயோகபடுத்த வேண்டாம் .

6. கடைசியாக, நகங்களை கடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், இது உங்கள் நகங்களுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் தீங்கானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Simple Home Remedies for Strengthening Weak Nails

Beautiful nails are an add-on to your charm. Many of us are really fond of styling nails by nail-art or other means
Story first published: Monday, April 16, 2018, 16:45 [IST]
Desktop Bottom Promotion