முகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்!

Written By:
Subscribe to Boldsky

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி முகத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே, இந்த கரும்புள்ளிகளும், முகத்தில் உள்ள குட்டிக்குட்டி முடிகளும் தான். இவை மட்டும் இல்லாமல் இருந்தாலே போதும் உங்களது முகம் பளிச்சென்று பிரகாசமாக நீங்களே நம்ப முடியாத அளவிற்கு மாறிவிடும்.

how to remove facial hair and blackheads using egg

நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த கரும்புள்ளிகள் மட்டும் போகவே போகாது. இதனால் உங்களது முகம் திட்டுத்திட்டாகவும், சோர்வடைந்தும் இருக்கும். அப்போ இது போகவே போகாதா என்று எல்லாம் நீங்கள் கவலைபடத் தேவையில்லை.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒரே ஒரு முறையாவது, முட்டையை இந்த வழிமுறையில் உங்களது முகத்திற்கு ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்கு உண்மையிலேயே திருப்தி இருந்தால் அடிக்கடி செய்து பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை செய்யும் மாயம்

முட்டை செய்யும் மாயம்

முட்டை அழகை சீரமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது முகத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சருமத்தில் உள்ள பெரிய ஓட்டைகளை அடைக்க உதவுகிறது. மேலும், முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கும் வல்லமை இதற்கு உள்ளது. முட்டையில் உள்ள புரோட்டின், உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தின் தோற்றத்தை மெருகூட்டுகிறது.

தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

  1. முட்டை - 1
  2. டிஸ்யூ பேப்பர் - தேவையான அளவு
  3. மேக்கப் பிரஷ் - 1
பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

க்ளீனிங் :

உங்களது முகத்தை முதலில் ரோஸ் வாட்டர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் மேக்கப் அனைத்தும் சுத்தமாக போனால் தான் முழு பலனையும் பெற முடியும்.

முட்டை :

முட்டை :

ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து, நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை பிரஷை கொண்டு முகம் முழுவதும் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். இதனை அப்ளை செய்த உடன் உங்களது முகம் குளுமையாக இருக்கும். முடிந்தவரை அடர்த்தியாக இதனை அப்ளை செய்துகொள்ளுங்கள்.

டிஸ்யூ பேப்பர்

டிஸ்யூ பேப்பர்

முட்டையை முகம் முழுவதும் அப்ளை செய்தவுடன், டிஸ்யூ பேப்பரை முகத்தில் போட்டு கவர் செய்து கொள்ளவும். முட்டையின் ஈரப்பதத்தினால் பேப்பர் நன்றாக முகத்தில் ஒட்டிக்கொள்ளும். பின்னர் மீண்டும் முட்டையின் வெள்ளைக்கருவை டிஸ்யூ பேப்பரின் மீது அப்ளை செய்து கொள்ளுங்கள். 40 நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிடுங்கள்.

மாஸ்க்கை பிரிக்கவும் :

மாஸ்க்கை பிரிக்கவும் :

40 நிமிடங்கள் கழித்து, இந்த மாஸ்கை கீழிருந்து மேலாக பிரித்து எடுக்க வேண்டும். இது மிகவும் இறுக்கமாக இருக்கும் எனவே மெதுவாக பிரித்து எடுக்க வேண்டியது அவசியம். பின்னர் முகத்தை மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவ வேண்டும்.

சூப்பரான முகம்

சூப்பரான முகம்

நீங்களே கண்டு வியக்கும் அளவிற்கு உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சிறிய முடிகள் என அனைத்தும் நீங்கிவிடும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். மூன்றே வாரங்களில் உங்களது முகத்தில் உள்ள அனைத்து முடிகளும் நீங்கி முகம் வளவளப்பாக அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to remove facial hair and blackheads using egg

how to remove facial hair and blackheads using egg
Story first published: Thursday, October 5, 2017, 13:55 [IST]