For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு ஏற்ற சரியான ஃபேஸ் வாஷை தேர்வு செய்வது எப்படி?

சரியான ஃபேஸ் வாஷை தேர்வு செய்வது எப்படி

By Lakshmi
|

நீங்கள் முகத்திற்கு சோப் பயன்படுத்துவதை தவிர்த்து, ஃபேஸ் வாஷ் பயன்படுத்துபவராக இருக்கலாம். நீங்கள் என்ன தான் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தினாலும் கூட, அது உங்களது சருமத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் யூஸ் செய்யும் ஃபேஸ் வாஷ் உங்களது முகத்திற்கு ஏற்றது தானா என்பதை கண்டறிய இந்த பகுதியில் சில யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பருக்கள்

வெள்ளை பருக்கள்

தினமும் காலையில் எழும் போது முகத்தில் வெள்ளைப்பருக்கள் ஹார்மோன் மாற்றங்களால் இல்லாமல், தோன்றினால், நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தாமல், பென்சோயில் பெராக்சைடு உள்ள பேஷ் வாஷ்களை பயன்படுத்துங்கள்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம்

முகத்தை கழுவிய பின்னர் உங்களது முகம் மிகவும் இருக்கமாக உள்ளது போல உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் ஆனது உங்களது முகத்தை டிரை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஹையலூரோனிக் ஆசிட் (Hyaluronic acid) உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்தினால், உங்களது முகத்தில் உள்ள ஈரத்தன்மை நிலையானதாக இருக்கும்.

சிவந்த தன்மை

சிவந்த தன்மை

நீங்கள் முகத்தை கழுவியதும், உங்களது முகம் சிவந்து காணப்பட்டால், நீங்கள் தவறான ஒரு ஃபேஸ் வாஷை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது உங்களது மூக்கு மற்றும் கன்னப்பகுதிகளில் சிவந்த நிறத்தை ஏற்படுத்தும். எரிச்சலை தவிர்க்க வாசனை இல்லாத பார்முலா கொண்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துங்கள். அதில் க்ளிசரின் மற்றும் ஹையலூரோனிக் அமிலம் (hyaluronic acid) உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

எரிச்சல்

எரிச்சல்

நீங்கள் முகத்திற்கு கடுமையான க்ளின்சரை உபயோகப்படுத்தினால், உங்களுக்கு முகத்தை கழுவிய உடன் அல்லது வெளியில் செல்லும் போது முகத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இயற்கை பொருட்களால் ஆன ஃபேஸ் வாஷ் மற்றும் சல்பேட் இல்லாத பேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது.

பளபளப்பான முகம்

பளபளப்பான முகம்

உங்களது முகம் எண்ணெய் பசையானதாக உள்ளது என நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான ஒரு ஃபேஸ் வாஷை உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் எண்ணெய் பசையை உறிஞ்சும் தன்மை கொண்டவற்றை பயன்படுத்துங்கள். சாலிசிலிக் அமிலம் மற்றும் க்ளே (salicylic acid and clay) பார்முலா உள்ள பேஸ்வாஷை உபயோகப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to choose best face wash for your skin

How to choose best face wash for your skin
Story first published: Thursday, September 14, 2017, 18:04 [IST]
Desktop Bottom Promotion