நாம் செய்யும் தவறுகள் நம் நகங்களை பாதிக்கும் என்பது தெரியுமா?

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

பெண்களைப் பொருத்த வரை தலையில் இருந்து கால் வரை அனைத்தையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். இதற்கென்று பல செயல்களை அவர்கள் மேற்கொள்ளுவதும் உண்டு. அவற்றில் ஒன்று தான் கை மற்றும் கால்களில் இருக்கும் நகங்களை அழகுப் படுத்துவது

அழகு நிலையத்திற்கு சென்று கை கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வதை பெண்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிக பணம் செலவு செய்து இத்தனை அக்கறை நமது நகங்களின் மீது எடுத்துக் கொண்டாலும் நமது சில செயல்கள் அதன் அனைத்து பலனையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுமட்டுமல்லாது நாம் தினமும் செய்யும் ஒரு சில செயல்களும் நம் நகங்களை பாதிக்கக் கூடும்.

நமக்கே தெரியாமல் செய்யும் செயல்கள் தான் நம் நகங்களை பெரிதும் பாதிக்கிறது. இங்கே குறிபிடப்பட்டுள்ள செயல்களை நீங்கள் செய்யாமல் இருந்தால் தான் உங்கள் நகங்களை பாதுகாக்க முடியும்.

இந்தக் கட்டுரையில் நாம் இப்போது நகங்களை பாதிக்கும் நமது சில செயல்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 முதல் கோட்டிங் :

முதல் கோட்டிங் :

நெயில் பாலிஷை நேரடியாக நகத்திற்கு போடுவீர்களா நீங்கள்? நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பேஸ் கோட்டிங்கை கண்டிப்பாக போட வேண்டும். அதை செய்யாமல் விட்டால் அது உங்கள் நகத்தை முற்றிலுமாக கெடுத்துவிடும். பேஸ் கோட்டிங் போடாமல் விட்டால் நெயில் பாலிஷில் உள்ள இரசாயனங்கள் நகத்தின் ஈரபதத்தை பாதித்துவிடும்.

நெயில் பாலிஷ் :

நெயில் பாலிஷ் :

நெயில் பாலிஷ் போடாமல் இருப்பது மிகவும் தவறான செயல். இந்த காலக்கட்டத்தில் இருக்கும் இயற்கை சூழ்நிலை நம் நகங்களை பாதிக்கத் தான் செய்யும்.

இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் கட்டாயம் நெயில் பாலிஷ் போட்டே ஆக வேண்டும். அதுவும் நல்ல தரமான நெயில் பாலிஷாக பார்த்து உபயோகப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் வெளிகாரணங்களால் நகமானது பாதிப்படையாது.

 அதிகமான நெயில் பாலிஷ் அல்லது நெயில் பாலிஷை நீக்குவது

அதிகமான நெயில் பாலிஷ் அல்லது நெயில் பாலிஷை நீக்குவது

அதிகமாக நெயில் பாலிஷ் உபயோகிப்பது அல்லது கையில் போட்டிருக்கும் நெயில் பாலிஷை நீக்குவது ஆகியவைக் கூட நகத்தை பாதிக்கச் செய்யும். நகத்தை நீக்கும் திரவத்தில் அசிட்டோக் உள்ளது. இது நகத்தை வறட்சி அடையச் செய்து பெரிதும் பாதித்துவிடும்.

க்யூடிக்கில் கேர்

க்யூடிக்கில் கேர்

உங்கள் நகங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்கள் கைகளின் மேல் தோலை பராமரிக்க வேண்டும்.

அதனை நீங்கள் பராமரிக்காமல் விட்டால் அது நகத்தைப் பெரிதும் பாதித்து விடும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று போன்றவற்றை நகங்களைச் சுற்றியுள்ள தோல் பகுதியில் ஏற்படுத்தக் கூடும்.

தவறான நெயில் பாலிஷ்

தவறான நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். நல்ல தரமான நெயில் பாலிஷை தேர்ந்தேடுப்பது மிக முக்கியம்.

அப்படி செய்தால் தான் நகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விலை அதிகமாக உள்ளது என்று பயந்து குறைவான விலையில் தரம் குறைந்த நெயில் பாலிஷை உபயோகித்தால் அதில் உள்ள ஃபார்மால்டிஹைடு நகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகமான ஜெல் மேனிக்யூர்

அதிகமான ஜெல் மேனிக்யூர்

ஜெல் மேனிக்யூர் நகங்களை பராமரிக்கும் முறைகளில் மிகச் சிறந்தது. ஆனால், அதையே நாம் அதிகமாக செய்யும் போது நம் நகத்தை அழித்துவிடும்.

வல்லுனர்களும் ஜெல் மெனிக்யூரை பாதுகாப்பானது என்று தான் கூறுகிறார்கள். ஆனால், அதுவும் அளவுக்கு மீறிப் போகும் போது ஆபத்தை தான் உண்டு செய்யும். இதனை அதிகமாக செய்வதால் நகங்கள் மெல்லியதாகும். அதனால் நகங்கள் உடையக்கூடும்.

குறைவான ஈரப்பதம்

குறைவான ஈரப்பதம்

நமது சருமம் போன்றே நகத்திற்கு ஈரப்பதம் முக்கியம் தான். இல்லையென்றால் அவையும் வறண்டு உடைய தான் செய்யும். தினமும் நகத்திற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டியது அவசியம். ஈரப்பதம் மிக்க எண்ணெய் எப்போழுதும் ஆரோக்கியமானது. நகத்தில் வறட்சி ஏற்பட்டால் நகத்தின் நிறம் மாறக்கூட வாய்ப்புள்ளது.

வீட்டு வேலை செய்வது

வீட்டு வேலை செய்வது

பெண்கள் தினமும் மேற்கொள்ளும் வீட்டு வேலைகளான துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவை கூட கையின் நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெறும் கைகளில் இந்த வேலைகளை செய்யும் போது நாம் உபயோகிக்கும் சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்கள் கை நகங்களை பாதிக்கும். இதற்கு தீர்வு கைகளுக்கு உறை அணிந்து வேலை செய்வது தான்.

நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது

நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது

கைக்கு ஒரு நெயில் பாலிஷ் வைக்கிறோம் என்றால் அதற்கென்று சில கால அவகாசம் உள்ளது. நன்றாக இருக்கின்றது என்பதற்காக அதனை நீண்ட நாட்களுக்கு அப்படியே வைத்துவிட்டால் அது பாதிப்புக்களை தான் ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி நெயில் பாலிஷை மாற்ற வேண்டியதும் அவசியம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everyday things that are ruining your nails

Everyday things that are ruining your nails
Story first published: Friday, April 21, 2017, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter