For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தழும்பை மறைய வைக்கனுமா? இந்த ஒரு பொருள் எடுத்துக்கோங்க!!

பலருக்கும் பிடித்தமான உருளைக்கிழங்கை கொண்டு செய்யக்கூடிய சில ப்யூட்டி டிப்ஸ்

|

பலருக்கும் பிடித்த காய்களில் ஒன்று உருளைக்கிழங்கு, இதனை உணவாக எடுத்துக் கொள்வதைப் போல் உருளைக்கிழங்கை பயன்படுத்தி நம் அழகை மெருகூட்ட முடியும்.

Beauty Facts of potato

உருளைக்கிழங்கில் அதிகப்படியான ஸ்டார்ச் இருக்கிறது என்பதை காரணம் காட்டி பலரும் பிடித்திருந்தாலும் சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவர்.உருளைக்கிழங்கால் முடி, சருமம் போன்றவற்றை எப்படி பராமரிக்கலாம் என்று சூப்பர் டிப்ஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தழும்புகள் :

தழும்புகள் :

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள்.

சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும்.

இயற்கை ப்ளீச் :

இயற்கை ப்ளீச் :

உருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பூசினால் இயற்கை ப்ளீச் தயார்.

இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம்.

பரு :

பரு :

முகத்தில் தோன்றும் பரு அல்லது பருத் தழும்புகள் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

சன் டேன் :

சன் டேன் :

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படம் நிற மாற்றத்தை சரி செய்திடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்.

சுருக்கங்கள் :

சுருக்கங்கள் :

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, உருளைக்கிழங்கு பேஸ் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்திடுங்கள் பின்னர் அதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கருவளையம் :

கருவளையம் :

கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம்.

இவை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

டோனர் :

டோனர் :

உருளைக்கிழங்கு அத்துடன் வெள்ளரி இரண்டு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை டோனர் போல செயல்படும். இதை வாரம் இரண்டு முறை செய்திடலாம். சரும பொலிவிற்கும் இது வழி வகுக்கும்.

தலைமுடி :

தலைமுடி :

உருளைக்கிழங்கின் தோலை தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், பின்னர் அந்த தோலை எடுத்து விட்டு அந்த நீரைக்கொண்டு தலைமுடியை அலசினால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Facts of potato

Beauty Facts of potato to eat, Here some of the beauty secrets using potatoes
Story first published: Friday, July 28, 2017, 17:55 [IST]
Desktop Bottom Promotion