மஞ்சள் கரை படிந்த அசிங்கமான பற்களா? உடனடி வெண்மைக்கு இந்த ஒரு பொருள் போதும்!

Written By:
Subscribe to Boldsky

கரித்தூளில் எண்ணிலடங்காத அளவிற்கு நன்மைகள் உள்ளன. ஆக்டிவேடேட் கரித்தூளானது பல அழகு சம்பந்தப்பட்ட நன்மைகளை தருகிறது. நம்மை அழகுப்படுத்திக்கொள்ள உதவும் முக்கிய பொருள்களில் இந்த கரித்தூளும் ஒரு முக்கிய இடத்தை பிடித்து வைத்துள்ளது. தற்போது நாம் மறந்து போன இந்த கரித்தூள் மிக பிரபலமடைந்து வருகிறது. கரித்தூள் உங்களது பற்களை பளபளக்க செய்யும் மிக முக்கியமான பொருள்களில் ஒன்றாகும்.

activated charcoal capsules for teeth whitening

டூத் பேஸ்டுகளில் அத்தியாவசிய பொருளாக இந்த கரித்தூள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பலரும் இந்த கரித்தூளை பயன்படுத்தி தங்களது பற்களை வெண்மையாகவும், பிரகாசமாகவும் மாற்றி வருகின்றனர்.

அழகான தனது கூந்தலை வெட்டிக்கொண்டு கம்பீரமாக திகழும் பிரபலங்கள்!

இன்று பிரபலமான பல டூத் பேஸ்டுகளில் கரித்தூள் முக்கிய பொருளாக உள்ளது. ஆனால் இதனை கொண்டு தான் நம் முன்னோர்கள் பல் துலக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறிவரும் நாகரிக உலகிற்கு ஏற்ப நாம் தான் டூத் பேஸ்ட் பயன்படுத்தி வருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரித்தூளின் மகத்துவம்

கரித்தூளின் மகத்துவம்

கரித்தூள் என்று நாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. இந்த கரித்தூள் தன்னூள் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. இந்த கரித்தூள் தான், நீண்ட காலமாக கெமிக்கல்களில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவி வருகிறது. இது போதை பொருள்கள், பாம்பு கடி போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது.

தண்ணீரை சுத்தம் செய்ய..

தண்ணீரை சுத்தம் செய்ய..

தண்ணீரை பில்டர் செய்து, சுத்தமான தண்ணீரை பெற இந்த கரித்தூள் உதவியாக உள்ளது. இது முன்னர் மட்டுமல்ல, தற்போதும் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பற்கள் பளிச்சிட வேண்டுமா?

பற்கள் பளிச்சிட வேண்டுமா?

பளிச்சிடும் பற்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? இந்த டீ, காபி, புகைப்பிடித்தல் போன்றவற்றை செய்வதால் உங்களது பற்களில் மஞ்சள் கரை படிய கூடும். இந்த மஞ்சள் கரை படிந்த பற்கள் பார்க்க நன்றாகவா இருக்கும்? நிச்சயம் இல்லை தானே? இதற்கு தான் தினமும் காலையில் ஒரு முறை இந்த கரியை கொண்டு பல் துலக்க வேண்டும்.

கரிக்கு எங்கே போவது?

கரிக்கு எங்கே போவது?

நாங்களே நகரத்தில் இருக்கிறோம். கரிக்கு நாங்கள் எங்கே போவது என்று கேள்வி கேட்கலாம். கரித்தூள் பெரும்பாலும் மருந்து கடைகளில் கிடைக்க கூடியது தான். இது கேப்சூல், மாத்திரை, அல்லது பௌடராகவும் கிடைக்கிறது. இதில் ஆக்டிவேடேட் கரித்தூள் கேப்சூல் (activated charcoal capsules) உபயோக்கிக்கவும், பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும் எளிமையானது.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

1. உங்களது பற்களை வெறும் தண்ணீரில் அலசிக்கொள்ள வேண்டும்.

2. கேப்சூலில் இருக்கும் கரித்தூளை நீங்கள் நேரடியாக உங்களது பற்களில் தடவலாம். அல்லது பிரஸில் கொட்டியும் பல் துலக்கலாம்.

3. நீங்கள் பிரஸை கொண்டு, வட்ட வடிவத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை ஸ்கிரப் போல பயன்படுத்த கூடாது.

4. இதனை நீங்கள் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் பயன்படுத்த வேண்டும். ஆமாம் இது உங்களது பற்களை பளபளக்க செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொள்ள தான் செய்யும்.

5. நன்றாக வாயை கொப்பளிக்கவும்.

பளபளக்கும் பற்கள்

பளபளக்கும் பற்கள்

இதனை பயன்படுத்தி உடனடியாக பலனை பெறலாம். இதனால் பற்கள் வெண்மையாக தெரியும். இது நாள் முழுவதும் நீடிக்கும். இதனை பயன்படுத்த தொடங்கிவிட்டால் நீங்கள் நிச்சயமாக பற்களை வெண்மையாக்க இந்த வழியை தான் தேர்ந்தெடுப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

activated charcoal capsules for teeth whitening

activated charcoal capsules for teeth whitening