Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
உங்கள் மேக்கப் பொருட்கள் சேதமடைந்து விட்டதா? கவலைய விடுங்க அதை எளிதாக சரி செய்து விடலாம்...!
எல்லாருக்கும் பியூட்டி பொருட்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதற்காக நாம் ஒரு பெரிய ஷாப்பிங்கே செய்வது உண்டு. ஆனால் அப்படி வாங்கும் ரோஸ் பவுடர், க்ரீம்கள், ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்ற பொருட்கள் உடைந்து விட்டால் என்னவாகும்.
நம்மால் திரும்ப பயன்படுத்த முடியாமல் போய் விடும். சிலர் அந்த உடைந்த லிப்ஸ்டிக்கை கொண்டு கஷ்டப்பட்டு பயன்படுத்துவதும் உண்டு. இனி அந்த கவலையில்லை. உங்கள் மேக்கப் பொருட்கள் உடைந்து விட்டால், அதை எளிதாக நம்மால் சரி செய்ய முடியும். அதை எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

மேக்கப் பொருட்கள் உடைந்தால் அதை பழைய நிலைக்கு கொண்டு வர வழிகள்
மேக்கப் பவுடர் உடைந்து விட்டால் சரி செய்ய வழிகள்
டிப்ஸ் 1:
நீங்கள் வாங்கின மேக்கப் பவுடர் உடைந்து விட்டால் அதை எளிதாக சரி செய்து விடலாம். சில சமயங்களில் மேக்கப் பவுடர் கீழே விழுந்து நொறுங்கி போய் விடும். அதை சரி செய்ய நொறுங்கிய எல்லா பவுடரையும் ஒரு பாத்திரத்தில் போடுங்கள். இப்பொழுது அதிலுள்ள பெரிய துண்டுகளை ஒரு கரண்டியால் அழுத்தி தூள் தூளாக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது அதனுடன் சிறுதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இப்பொழுது அதனை மேக்கப் பவுடர் டப்பாவில் போட்டு ஒரு துணியால் ஒரே மாதிரி பரப்ப வேண்டும். பிறகு லேசாக உலர வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மேக்கப் பவுடர் உடைந்தது தெரியாமல் புதிய பவுடர் போல் மாறி விடும்.
டிப்ஸ் 2:
இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் உடைந்த மேக்கப் பவுடர்கள் அனைத்தையும் கொட்டுங்கள். இப்பொழுது 2-3 டீ ஸ்பூன் ஆல்கஹால் எடுத்து அதில் சேர்க்க வேண்டும். பிறகு மேக்கப் பவுடர் டப்பாவில் போட்டு ஒரே மாதிரி பரப்ப வேண்டும். உங்கள் உடைந்த மேக்கப் பவுடர் புதிது போல் மாறி விடும்.
உடைந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்துதல் :
டிப்ஸ் 1 :
லிப்ஸ்டிக் பலருக்கும் பிடித்த ஒரு பொருளாகும். இருப்பினும் நாம் ஆசையாக வாங்கின லிப்ஸ்டிக் உடைந்து போவதுண்டு. உடைந்த லிப்ஸ்டிக்கை சரி செய்ய ஒரு பேப்பரை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைந்த லிப்ஸ்டிக்கை அதன் மேல் வையுங்கள்.
இப்பொழுது லைட்டரைக் கொண்டு 2-3 அங்குல தொலைவில் தீயை காட்டி உடைந்த பக்கத்தை தீயில் உருக்குங்கள். லிப்ஸ்டிக் உருகியவுடன் மற்ற பக்கத்தை அதனுடன் சேர்த்து ஒட்டிக் கொள்ளுங்கள். சூடு போனதும் அதை கொஞ்ச நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருங்கள். இப்பொழுது உங்கள் உடைந்த லிப்ஸ்டிக் புதிது போல் மாறி விடும்.
டிப்ஸ் 2:
உங்கள் உடைந்த லிப்ஸ்டிக்கை கொண்டு ஒரு லிப்பாம்யை உங்களால் உருவாக்க முடியும். உடைந்த லிப்ஸ்டிக்கை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது லைட்டரைக் கொண்டு அந்த லிப்ஸ்டிக்கை உருக்குங்கள். அது ஒரு மென்மையான பேஸ்ட்டாக்கி விடும். இந்த பேஸ்ட்டை ஒரு லிம் பாம் டப்பாவில் வைத்து ஒரே மாதிரி அழுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு புதிய லிப் பாம் கிடைத்து விடும்.
ஜெல் டைப் ஐ லைனர் :
நாம் பயன்படுத்தும் மஸ்காரா மற்றும் ஐ லைனர் போன்றவை எளிதில் சேதமடைந்து விடுகின்றன. நீங்கள் பயன்படுத்தும் ஜெல் ஐ லைனர் விரிசல் காரணமாக பாழாகிப் போனால் 15 விநாடிகளுக்கு மைக்ரோவேவ் செய்ய வேண்டும். நீங்கள் சூடுபடுத்தும் போது ஐ லைனர் உருகி மென்மையாகும். பிறகு மீண்டும் அதை நீங்கள் எப்பொழுதும் போல் பயன்படுத்தி வரலாம்.
மஸ்காரா :
சிலர் லிக்யூட் வகை மஸ்காராவை பயன்படுத்துவார்கள். அது சில சமயங்களில் காய்ந்து போய் உடைய ஆரம்பித்து விடும். அதில் சில கண் சொட்டு மருந்து சேர்த்து வந்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம். உங்கள் கண்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.
குறிப்பு :
நாம் அதிகமாக காம்பேக்ட் ஆன சிறிய வடிவ மேக்கப் பொருட்களை வாங்குவோம். இந்த சிறிய வடிவ மேக்கப் பொருட்கள் சீக்கிரம் உடைந்து போகக் கூடும். மேலும் இவை விலை உயர்ந்ததாகவும் உள்ளது. எனவே காம்பேக்ட் கண்சீலர், ஐ ஷேடோ கிட் போன்ற மேக்கப் பொருட்களை தினமும் வாங்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications

