Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டிலேயே டைமண்ட் ஃபேஷியல் செய்யலாம் .. எப்படி தெரியுமா?
தங்கள் அழகை எல்லோரும் பராமரிக்க ட்ரை பண்ணிட்டேதான் இருக்கோம்.. அதற்கு பல வழிகளை தேடுக்கிறோம்.. பலர் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து பார்க்கிறார்கள். சிலர் வீட்டிலேயே செய்து பார்க்கிறார்கள்..
அதில் பார்லர்களில் செய்யப்படும் ஃபேஷியல்களில் டைமண்ட் ஃபேஷியல் மிகவும் விலை உயர்ந்தது. இந்த நன்மை பயக்கும் ஃபேஷியலை வீட்டிலேயே செய்யலாம். மிக எளிமையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

டைமண்ட் ஃபேஷியலுக்கு தேவையானது தயிர். தயிர் ஆரோக்கிய நன்மைகளை மட்டுமல்ல, அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசரை வழங்குவதில் இது மிகவும் நல்லது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கீறல்களைத் தடுக்க இது நல்லது. சருமத்தை வெண்மையாக்குவதற்கும் இது நல்லது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நன்மையை அளிக்கிறது. இதற்கு சிறிது புளிப்பு தயிர் தேவை. தயிர் அனைத்து நிலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்க்ரப்பர்
ஃபேசியலுக்கு முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.. இதற்கு தயிர் பயன்படுகிறது. தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இதை சிறிது நேரம் செய்து 5 நிமிடம் கழித்து கழுவவும். அடுத்தது ஸ்க்ரப்பிங் பேக் பேட வேண்டும்.. இதற்கும் மிக முக்கியமான மூலப்பொருள் தயிர்தான். இந்த பேக் எந்த வகையான சருமத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.
சர்க்கரை
தயிரில் சிறிது சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்கரப் செய்யவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை போக்க இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது. மூக்கின் ஓரங்கள் முதலியவற்றை நன்கு தேய்க்க வேண்டும். இப்படி செய்வதால் முகம் மென்மையாக மாறும். அதை கழுவ வேண்டும்.
தக்காளி
தக்காளி கூழ் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இதை 10-15 நிமிடங்கள் செய்யவும். சருமத்தை பொலிவாக்க இது மிகவும் நல்லது. தக்காளியும் சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளி சருமத்தை வெண்மையாக்க மிகவும் நல்லது. சருமத்திற்கு நிறத்தையும் பொலிவையும் தர இது மிகவும் நல்லது. 20 நிமிடம் கழித்து கழுவவும்.
வைட்டமின் ஈ மாத்திரைகள்
முகம் பளபளப்பதற்காக வைட்டமின் ஈ மாத்திரைகளை முகத்தில் அபளை செய்யுங்கள். சிறிது நெரம் கழித்து அதனை கழுவி விட வேண்டும்..



Click it and Unblock the Notifications