Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்ப காலத்தில் முலைக்காம்புகளில் அரிப்பு ஏற்படுகிறதா? இதோ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க..!
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் வரும் மிக முக்கியமான காலமாகும்... இந்த நேரத்தில் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணம். ஆனல் இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் சங்கடமானவை. இது தாய்க்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் அனுபவிக்கக்கூடிய மிகவும் சங்கடமான மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று அரிப்புதான்.. அதிலும் அந்த அரிப்பு என்பது அதிகமாக மார்பின் முலைக்காம்பில்தான் ஏற்படும்.. அது எதனால் ஏற்படுகிறது..?அதனை எப்படி வீட்டு வைத்தியங்களை வைத்து சரிச்செய்ய முடியும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம வாங்க...

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாகவே 5 மாதங்கள் முடியும்போது மார்பக வலி, அரிப்பு ஆகியவை ஏற்படும்... கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இது போன்ர அசெளகரியங்கள் ஏற்படுவது சகஜம்தான்.. ஆனால் மார்பில் முலைக்காம்புகளில் அரிப்பு ஏற்படுவது, கர்ப்பிணிகளுக்கு சற்று சங்கடமாகவும் கடினமான காலமாகவும் இருக்கும்.. இது இயற்கையான விஷயம்தான் என்றாலும் எப்படியாவது சரிச் செய்ய வேண்டும். இதோ அதற்கான வீட்டு வைத்தியங்கள்..
1.ஐஸ் கட்டி
ஐஸ் கட்டிகள் அரிப்பு உள்ள இடத்தில் சிவத்தல் அல்லது வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.. அதனால் அரிப்பு உள்ள பகுதிகளில் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துங்கள். இப்படி தினமும் ஐஸ் கட்டி தடவினால் எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கிவிடும்..
2. கற்றாழை
கற்றாழை ஜெல் முலைக்காம்புகளில் ஏற்படும் அரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எரிச்சல் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவ வேண்டும். இந்த ஜெல் அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.மேலும் ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாக்க உதவுகிறது. இது சரும பாதிப்புகளையும் தடுக்கிறது.
3. சாமந்தி எண்ணெய்
இந்த எண்னெய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. அதனால் முலைக்காம்புகளில் ஏற்படும் அரிப்புகளை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். சீம சாமந்தியை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் அரிப்பு மற்றும் வறட்சி குறைகிறது. அடோபிக் தோல் பிரச்சனைகளில் ஹைட்ரோகார்டிசோன் கிரீமை விட சீமா சாமந்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. ஜொஜோபா எண்ணெய்
ஜோஜோபா எண்ணெயும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது மார்பகம் மற்றும் முலைக்காம்புகளை ஈரமாக வைத்திருக்கும். அதனுடன் மார்பகத்தின் தோலும் வறண்டு இருக்காது. கர்ப்ப காலத்தில் ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் கிருமி நாசினிகள் போன்ற எந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை.
5. பெட்ரோலியம் ஜெல்லி
கர்ப்ப காலத்தில் முலைக்காம்புகளில் அரிப்பு ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. இந்த நேரத்தில், மார்பக வளர்ச்சியின் காரணமாக முலைக்காம்புகள் அரிப்பு மற்றும் வறண்டு போகக்கூடும்.. ஹார்மோன் மாற்றங்களால் தோல் உலர்ந்துவிடுகிரது.. முலைக்காம்புகள் மற்றும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது அரிப்பு பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
6. புதினா இலைகள்
குழந்தை பிறந்த பிறகு, தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் போது முலைக்காம்புகளில் அரிப்பு ஏற்படும். முலைக்காம்புகள் அரிப்பு மற்றும் வறண்டு போகும். இது பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். வெதுவெதுப்பான பெப்பர்மின்ட் டீயை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் முலைக்காம்பு வெடிப்பு மற்றும் அரிப்பு போன்றவை குறையும்.
7. அதிகமாக தண்ணீர் குடித்தல்
அதிகமாக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்..லோஷனை இரவில் மார்பகம் மற்றும் முலைக்காம்புகளில் மசாஜ் செய்தால் மறுநாள் காலை மென்மையாக இருக்கும். குளித்த பிறகும் சருமம் வறண்டு காணப்படும். அதனால் எப்போதுமே ஈரபதமாக முலைக்கம்புகளை வைத்திருக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்..
8. நல்லெண்ணய்
நல்லெண்ணெய் கர்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க சிறந்தது. மார்பகம் மற்றும் முலைக்காம்புகளில் இந்த எண்ணெயை தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது முலைக்காம்புகளை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமின்றி மென்மையாகவும் இருக்கும். கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் அரிப்புக்கு சிறந்த வீட்டு வைத்தியம் நல்லெண்னெய்தான் என்று கூறலாம். குளிப்பதற்கு முன் இந்த எண்ணெயயை தடவவும். பெண்கள் வெதுவெதுப்பான நல்லெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தோல் பராமரிப்பு பொருட்கள் கூட அரிப்பு ஏற்படுத்தும். கடுமையான சோப்புகள் மற்றும் வாசனை திரவியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் முலைக்காம்புகளில் ஏற்படும் அரிப்புகளை குறைக்க இதுபோல வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்கள்.. எந்தவிதமான பக்க விளைவுகளும் வராது..



Click it and Unblock the Notifications