Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
கருப்பாக உள்ள உதட்டை சிவப்பாக மாற்றணுமா? அப்ப இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க... செர்ரி பழம் மாதிரி மாறிரும்...!
Skin Care Tips: பொதுவாகவே நமது உதட்டின் மேற்பகுதியின் நிறம் கீழ் உதட்டை விட சற்று நிறம் குறைவாக காணப்படும். பெரும்பாலும் பெண்கள் தங்கள் சரும பொலிவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதட்டின் நிறத்திற்கு தருவதில்லை. அதற்கும் காரணம் லிப்ஸ்டிக், லிப் க்ளாஸ் என செயற்கை வண்ணங்களை பயன்படுத்தி நிறத்தை மிகை படுத்துவதும் ஒரு காரணம்.
இந்த செயற்கை நிறமூட்டிகளில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் நாம் சாப்பிடும் போது உணவு பொருட்களுடன் சேர்த்து நமது உடலுக்குள் செல்வதால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் இயற்கையான முறையில் எப்படி உதட்டின் கருமை நீக்குவது என பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சர்க்கரையில் நனைக்கவும். பின் அதை உங்கள் உதட்டின் மீது மென்மையாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.
சர்க்கரை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுதோடு அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டராக அறியப்படுகிறது.
உருளைக்கிழங்கு சாறு
புதியதாக இருக்கும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சாறு எடுத்து கொள்ளவும். சுத்தமாக பஞ்சை இந்த சாறில் நனைத்து உதட்டின் மீது இரவு படுக்க செல்லும் முன் தடவவும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் குறைந்தது ஐந்து வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.
உருளைக்கிழங்கு சாற்றில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி இருப்பதால் உதட்டின் கருமையை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. உருளைக்கிழங்கு சாறு கருமையான அடர் நிறத்திற்கு சிகிச்சை அளித்து உதட்டின் நிறத்தை பாதுகாக்கிறது.
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சாறு எடுத்து கொள்ளவும். இரவில் படுக்க செல்லும் முன் இந்த சாற்றை உதட்டின் மீது தடவவும். தினசரி இதை தொடர்ந்து செய்து வர ஒரு மாதத்தில் மென்மையான மிளர கூடிய உதட்டை நீங்கள் பெறுவது உறுதி.
இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்க செய்யும் பண்பு பீட்ரூட் சாறில் இருக்கிறது. இது உதட்டின் மீது இருக்கும் அடர்நிறத்தை குறைத்து உதட்டின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆரஞ்சு பழத் தோல்
ஆரஞ்சு பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து எடுத்து கொள்ளவும். இந்த பொடியை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது பூசி காய்ந்ததும் கழுவி விடவும். இதை வாரம் இருமுறை செய்து வர மூன்று வாரங்களில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்களின் தோலில் இயற்கையாகவே சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் உள்ளன. இது உதட்டின் மேற்பகுதியின் அடர்நிறத்தை குறைத்து பட்டு போன்ற உதடுகளை பெற செய்கிறது.
மஞ்சள் மாஸ்க்
தக்காளி மற்றும் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும். இதை வாரம் மூன்று முறை செய்து நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது என்பது நாம் அறிந்ததே. அதனுடன் நிறத்தை அதிகரிக்க கூடிய எலுமிச்சை மற்றும் சுருக்கத்தை தடுக்க பயன்படும் தக்காளியை சேர்க்கும் போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு மென்மையான ரோஜா இதழ் உதடுகளை பெற செய்யும்.



Click it and Unblock the Notifications

