Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வெயிலால் சருமம் சிவந்து போவதோடு, அரிப்புக்களையும் ஏற்படுத்துதா? உடனடி நிவாரணம் பெற இத யூஸ் பண்ணுங்க..
Heatwave In Tamil: தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இப்படி வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கும் மேல் கொளுத்துவதால், வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காலத்தில் ஒருவர் வெயிலில் ஒரு மணிநேரம் சுற்றினாலே, சருமம் சிவந்து போவதோடு, சருமம் வறண்டு போய் கடுமையான அரிப்புக்களை உண்டாக்கும். இப்படி வெயிலால் சிவந்து போகும் சருமத்திற்கும், சரும அரிப்புகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மிகுந்த வேதனையை அளிக்கும்.

இதற்கு சிகிச்சை அளிக்கும் பல ஆயின்டெமெண்ட்டுகள் உள்ளன மற்றும் வெயிலால் வெந்து போன சருமத்தை இதமாக்கும் பல ஆயுர்வேத வழிகளும் உள்ளன. இந்த வழிகளை வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, சருமமும் சேதமடையாமல் இருக்கும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை செடி அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு மருத்துவ குணம் வாய்ந்த செடி. இந்த கற்றாழை சருமத்திற்கும், தலைமுடிக்கும் ஏராளமான நன்மைகளை வழங்கும். அதுவும் கோடைக்காலத்தில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். அதிகப்படியான வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவினால், சூரியக்கதிர்களால் சேதமடைந்த சரும செல்கள் சரியாகும்.
முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், வெயிலால் சந்திக்கும் அரிப்புக்களில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெற இவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கு முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டு.
புதினா எண்ணெய்
புதினா எண்ணெய் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதோடு, சருமத்திற்கு நல்ல இதத்தை அளிக்கும். எனவே நீங்கள் வேலை காரணமாக வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தில் இந்த புதினா எண்ணெயை தடவினால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
பழங்காலம் முதலாக சருமத்தில் எந்த பிரச்சனை வந்தாலும், அதை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொதுவான பொருள் தான் தேங்காய் எண்ணெய். குறிப்பாக வெயிலால் சந்திக்கும் அரிப்புக்கள் மற்றும் சிவந்த சருமத்தை இதமாக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவி புரியும். இதற்கு இவற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும், சருமத்தை இதமாக்கும் பண்புகளும் தான் காரணம். எனவே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் சாறு
நற்பதமான வெள்ளரிக்காய் கோடையில் சருமத்தை இதமாக வைத்துக் கொள்ள பெரிதுவும் உதவி புரிகிறது. நிபுணர்கள் கூட சருமத்தை குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள வெள்ளரிக்காய் சாற்றினை சருமத்தில் தடவ பரிந்துரைக்கின்றனர். எனவே உங்கள் வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால், வெயிலால் சிவந்து போன சருமத்தில் இதன் சாற்றினைத் தடவுங்கள் அல்லது வெள்ளரிக்காய ஃப்ரீசரில் உறைய வைத்து, அவற்றை பாதிக்கப்பட்ட சருமத்தின் மேல் வையுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்துமே வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவை என்பதால், நீங்கள் வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் இந்த வழிகளை முயற்சி செய்து நன்மை பெறுங்கள். முடிந்தவரை, வெப்ப அலை காலத்தல் காலை 10 மணி முதல் மதியம் 3 வரை வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்கள். இதனால் வெப்ப அலையால் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications