Latest Updates
-
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
ஹேர் ஸ்ட்ரெய்டனிங் Vs ஹேர் ஸ்மூத்திங் - இவற்றில் எது சிறந்தது?
Hair Straightening Vs. Hair Smoothing: இன்றைய பேஷன் உலகில் பெண்கள் தங்கள் கூந்தலை அழகுபடுத்திக் கொள்ள மிகவும் விரும்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது நிறைய பெண்கள் தங்கள் கூந்தலை நேராக்குவதற்கு பியூட்டி பார்லரை நாடுவது உண்டு.
அதே மாதிரி பல பெண்கள் தங்கள் கரடுமுரடான கூந்தலை மென்மையாக்க பியூட்டி பார்லரை நாடுகின்றனர். கூந்தலை நேராக்குவதும், கூந்தலை மென்மையாக்குவதும் ஒன்று கிடையாது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

கூந்தலை மென்மையாக்கும் போது நீங்கள் நல்ல பளபளப்பை பெறலாம். அதே மாதிரி கூந்தலை நேராக்குவது கூந்தலை சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது. இந்த இரண்டுமே உங்கள் கூந்தலுக்கு சிறந்தது என்றாலும், இவற்றில் எது உங்கள் கூந்தலுக்கு ஏற்றது மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
கூந்தலை நேராக்கும் செயல்முறை:
கூந்தலை நேராக்கும் செயல்முறையானது கூந்தலை மென்மையாக்கும் செயல்முறைக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. ஹேர் ஸ்ட்ரெய்டனிங் என்பது முதன் முதலில் ஆப்பிரிக்க தலைமுடியில் செய்யப்பட்டது. இந்த சிகிச்சை முறையானது கூந்தல் உடையவர்களுக்காக உருவாக்கப்பட்டது. பின்பு எல்லோரும் இதை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
முடியை நேராக்குவதில் இரண்டு வகையான சிகிச்சைகள் உள்ளன. அவை நிரந்தர மற்றும் தற்காலிக சிகிச்சை முறைகளாகும். சூடான இரும்புகள் அல்லது சூடான சீப்புகள் போன்ற ஸ்டைலிங் கருவியைக் கொண்டு தற்காலிகமாக கூந்தலை நேராக்குதல் செய்யப்படுகிறது. இந்த நேராக்குதல் தற்காலிகம் என்பதால் கூந்தலை அலசிய பிறகு உங்கள் கூந்தல் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இதுவே நிரந்தர முடி நேராக்குதல் என்பது உங்கள் முடியின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் செயல்முறையாகும். இந்த செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் இராசயன ரிலாக்சர்சி முடித் தண்டில் உள்ள பிணைப்புகளை நிரந்தரமாக உடைக்கிறது. பிறகு உங்கள் கூந்தலை மறுகட்டமைக்க வெப்பம் பயன்படுத்தப்படுகிறது.
கூந்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட பிணைப்புகளை மூட அதிக இராசயனங்கள் தேவைப்படுகிறது. கெமிக்கல் ரிலாக்சரில் உள்ள அல்கலைன் ஏஜென்ட் என்ற பொருள் சுருள் அல்லது அலை அலையான கூந்தலில் உள்ள கெரட்டின் பிணைப்புகளை நீட்டி நேராக்குகிறது. இது உங்கள் கூந்தலுக்கு நிரந்தர முடி நேராக்குதலை தருகிறது.
அல்கலைன் ஸ்ட்ரெய்டனிங் முறை
அல்கலைன் ஸ்ட்ரெய்ட்னர்களில் 1-10% சோடியம் ஹைட்ராக்சைடு (லை-ரிலாக்சர்), லித்தியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு போன்ற பொருட்களின் கலவை உள்ளது.
இந்த இரசாயனங்களில் உள்ள உயர் pH, க்யூட்டிகல் செதில்களைத் திறந்து முடி இழைகளுக்குள் ஊடுருவ உதவுகிறது. இந்த இராசயனங்கள் கார்டெக்சியுடன் தொடர்பு கொள்ளும்போது அவை கெரட்டினுடன் வினைபுரிந்து, டிசல்பைட் கட்டமைப்பை உடைத்து மறுசீரமைத்து, கூந்தலை நீட்டுகின்றன.
ஆனால் இந்த இராசயன செயல்முறை கூந்தலை மென்மையாக்குவதை விட அதிக முடி சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சுருள் நிறைந்த முடியை நேராக்குகிறது மற்றும் நிரந்தரமானது. இப்படி நிரந்தர முடியை நேராக்குவது 'ஜப்பானீஸ் ஸ்ட்ரைட்டனிங்' என்றும் அழைக்கப்படுகிறது.
கூந்தலை மென்மையாக்கும் செயல்முறை
கூந்தலை மென்மையாக்கும் செயல்முறையானது பிரேசிலியன் கெரட்டின் சிகிச்சை அல்லது பிரேசிலிய ஊதுகுழல் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. கூந்தலை மென்மையாக்கும் செயல்முறையானது 2003 இல் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஒரு தற்காலிக செயல்முறையாகும். இந்த செயல்முறையின் போது உங்கள் தலைமுடியை ஃபார்மால்டிஹைட் கரைசலில் நனைத்து , அதை உலர்த்தி, தட்டையான அயர்னிங் சீப்பை பயன்படுத்தி உங்கள் முடியை நேராக்குவார்கள். இருப்பினும் முடியை நேராக்குவதில் பயன்படுத்தப்படும் இராசயனங்களை விட இந்த இராசயனங்கள் உங்களுக்கு குறைந்த பக்க விளைவையே ஏற்படுத்துகிறது. இருப்பினும் முடியை மென்மையாக்குவது அனைத்து முடி வகைக்கும் ஏற்றது அல்ல.
இந்த ஹேர் ஸ்ட்ரெய்டனிங் முறையை எப்போது தேர்வு செய்ய வேண்டும்?
ஹேர் ஸ்ட்ரெய்டனிங் கருவிகள் அலை அலையான முடி முதல் சுருள் முடி வரை வேலை செய்கிறது. உங்கள் முடி அமைப்பை பொருத்து இந்த செயல்முறையானது ஒவ்வொரு 8-12 வாரங்களுக்கும் ஒரு முறை என செய்ய வேண்டும். இதுவே கூந்தலை நிரந்தரமாக நேராக்க ஹைட்ராக்சைடுகள் அல்லது தியோகிளைகோலேட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
ஹேர் ஸ்ட்ரெய்டனிங்னின் பக்க விளைவுகள்
* ஹேர் ஸ்ட்ரெய்டனிங்யை எக்காரணம் கொண்டும் உச்சந்தலையில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை உங்கள் சருமத்தை எரிய வைக்க வாய்ப்பு உள்ளது. அதனால்தான் தீக்காயங்களைத் தடுக்க ரிலாக்சரைப் பயன்படுத்துவதற்கு முன் கூந்தல் மற்றும் காதுகளில் சிறிது பெட்ரோலேட்டத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
* ஹேர் ஸ்ட்ரெய்டனிங்கை தவறாக செய்தால் உச்சந்தலையில் தீக்காயங்கள் மற்றும் கூந்தல் உடைதல் போன்றவை ஏற்படும்.
* முடி நார்களில் வீக்கம் மற்றும் க்யூட்டிகல் செதில்களின் திறப்பு போன்றவை முடியை உராய்வுக்கு ஆளாக்குகிறது.
* ஹேர் ஸ்ட்ரெய்டனிங்கில் ஏற்படும் தவறுகளால் முடி உதிர்தல், பொடுகு, முடி மெலிந்து போதல், முடி நரைத்தல், முடி வலுவிழந்து போதல் மற்றும் பிளவுபட்ட முடிகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
