Latest Updates
-
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஆண்களே! கொத்து கொத்தா முடி கொட்டுதா? வழுக்கை விழாம இருக்க உடனே இத சாப்பிட ஆரம்பிங்க..
Hair Fall Solution In Tamil: தற்போது தலைமுடி உதிரும் பிரச்சனையால் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுவாக தலைமுடியை சீவும் போது தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். ஆனால் அந்த தலைமுடி கையில் கொத்து கொத்தாக வரும் போது, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஏனெனில் இப்படி தலைமுடி கொத்தாக உதிர்வதை கவனித்து அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்காமல் போனால், அதன் விளைவாக தலையில் வழுக்கை விழுவதோடு, முடி எலிவால் போன்று மாறிவிடும். ஒருவருக்கு தலைமுடி பல காரணங்களால் உதிரலாம். அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், மரபணுக்கள், ஆரோக்கிய பிரச்சனைகள் அல்லது ஊட்டச்ச்தது குறைபாடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஒருவரது தலைமுடியானது அந்நபருக்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதைத் தவிர, தன்னம்பிக்கையையும் தருகிறது. குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் விரைவில் வழுக்கைத் தலையை பெறுகிறார்கள். எனவே ஆண்கள் தலைமுடி அதிகம் உதிர்வதை உணர்ந்தால், அதைத் தடுக்க தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்களைக் கொண்ட பொருட்களால் பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
அதோடு, மருத்துவரை அணுகி தலைமுடி உதிர்வதைக் குறைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இப்போது தலைமுடி உதிர்வை அதிகம் சந்திக்கும் ஆண்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த எந்த மாதிரியான சப்ளிமெண்ட்டுகளை எடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. பயோடின்
தலைமுடி உடைவதைக் குறைக்கவும், புதிய தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் மயிர்கால்களை வலுவாக்கவும் வைட்டமின் பி7 என்னும் பயோடின் உதவுகிறது. இந்த பயோடின் சப்ளிமெண்ட்டை தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுபவர்கள் எடுத்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.
2. ஜிங்க்
ஜிங்க் சத்து தலைமுடி அதிகமாக உதிர்வதைத் தடுக்க உதவுவதோடு, மயிர்கால்களைச் சுற்றியுள்ள எண்ணெய் சுரப்பிகளை பராமரிக்கவும் உதவுகிறது. இந்த ஜிங்க் சத்து ஆண்களின் உடலில் குறைவாக இருந்தால், அது தலைமுடியை அதிகம் உதிரச் செய்துவிடும். எனவே தலைமுடி வழக்கத்தை விட அதிகமாக உதிர்வதை சந்திக்கும் ஆண்கள் ஜிங்க் சப்ளிமெண்ட்டை தினமும் எடுத்து வர, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
3. வைட்டமின் டி
வைட்டமின் டி மயிர்கால்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் டி உடலில் குறைவாக இருந்தால், அது தலைமுடி உதிர்வதை அதிகமாக்கி, அலோபீசியாவுக்கு வழிவகுக்கும். எனவே தலைமுடியை அதிகம் சந்திக்கும் வேளையில், வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகளை தினமும் எடுத்து வந்தால், முடியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுவதோடு, தலைமுடியின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
4. இரும்புச்சத்து
இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தாலும், அது தலைமுடி உதிர்தலை அதிகரிக்கும். ஏனெனில் இரும்புச்சத்து மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கவும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே அதிகமாக தலைமுடி உதிர்வை சந்திக்கும் வேளையில் இரும்புச்சத்து உள்ள உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளை தினமும் உட்கொள்ளுங்கள்.
5. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஸ்கால்ப்பை வளமாக வைத்துக் கொள்வதிலும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகம் காணப்படுகின்றன. இது தவிர மீன் எண்ணெய் மாத்திரை வடிவிலும் மருந்தகங்களில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தினமும் எடுத்து வந்தால், அது தலைமுடி செழிப்பாக வளரத் தேவையான சூழலை உருவாக்கித் தரும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்துமே ஒருவரது உடலில் கட்டாயம் போதுமான அளவில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான சத்துக்களாகும். இந்த சத்துக்களில் குறைபாடு ஏற்பட்டால், அதன் விளைவாக அதிகப்படியான தலைமுடி உதிர்வை சந்திப்பதோடு, வழுக்கைத் தலையையும் பெறக்கூடும். எனவே வழுக்கை தலை வரக்கூடாதெனில், தலைமுடி அதிகம் உதிர்வதை உணரும் போதே இந்த சத்து நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications