Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
சின்ன வயசுல உங்க அம்மா இதெல்லாம் செஞ்சிருந்தாங்கனா... இப்ப முடி கொட்டுற பிரச்சனை இருக்காதாம்...!
உண்மையில், நாம் தினமும் முடியை இழக்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்த இடங்களில் புதிய முடிகள் வளர்கின்றன. அதனால்தான் முடி உதிர்வதை நாம் அரிதாகவே உணர்கிறோம்.
பெரும்பாலான மக்களுக்கு கவலையளிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக முடி உதிர்தல் இருக்கிறது. முடி உதிர்வதைப் பற்றி எல்லாரும் கவலைப்படுவார்கள். அதிலும், இளம் வயதிலேயே முடி உதிர்வது என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இது உங்கள் அழகை சிதைக்கிறது. உங்கள் அழகான தோற்றத்தை மாற்றுகிறது. நாம் அனைவரும் எப்போதாவது இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம் என்பதால், முடி உதிர்தலுக்கான காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உண்மையில், நாம் தினமும் முடியை இழக்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்த இடங்களில் புதிய முடிகள் வளர்கின்றன. அதனால்தான் முடி உதிர்வதை நாம் அரிதாகவே உணர்கிறோம்.

ஆனால் வளரும் முடியை விட உதிர்ந்த முடி அதிகமாகும் போது ஒரு இடைவெளி உருவாகிறது, அப்போதுதான் முடி உதிர்தல் என்ற பயங்கரமான உண்மையை நாம் உணர்கிறோம். முடி உதிர்வை யாராலும் தடுக்க முடியுமா? சரி, ஓரளவிற்கு, நம்மால் முடியும் ஆனால் ஒரு வரம்பை தாண்டி, நம்மால் முடியாது. பெண்களுக்கு முடி உதிர்தல் என்று வரும்போது, இது கர்ப்பத்திற்குப் பிறகு அல்லது மாதவிடாய் காலத்தில் கூட ஏற்படலாம். முடி உதிர்தல் பிரச்சனைக்கு அம்மாக்களும் பாட்டிகளும் நமக்கு அளிக்கும் பொதுவான பரிந்துரைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

எண்ணெய்
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது உங்கள் அம்மா உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய முயன்றபோது நீங்கள் வெறுத்திருக்க வேண்டும். அறியாத வயதில் நீங்கள் வெறுத்திருக்கலாம். ஆனால், உண்மையில் எண்ணெய் மசாஜ் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும். மேலும், முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும். இரத்த ஓட்டம் சரியாக இருக்கும் போது, உங்கள் தலைமுடி நன்றாக வளர போதுமான ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

பாக்டீரியா
உங்கள் குழந்தை பருவத்தில் தேயிலை மர எண்ணெயை உங்கள் அம்மா உங்கள் தலைமுடியில் பயன்படுத்தியபோது நீங்கள் வருந்தியிருக்கலாம். இதையெல்லாம் ஏன் அம்மா செய்கிறார் என்று கோபமும் கூட இருக்கலாம். உண்மையில், இந்த எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளை திறம்பட கொல்லும் மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இதனால், உங்கள் முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாறும்.

மன அழுத்தம்
நம் முன்னோர்கள் முடி உதிர்வை அரிதாகவே சந்தித்ததற்கு முக்கியக் காரணம் அவர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே காரணம். இன்றைய காலகட்டத்தில் பெருவாரியான மக்களை ஆக்கிரமித்திருக்கிறது மனஅழுத்தம். நவீன வாழ்க்கை முறை, உறவுகள் பிரச்சனை என காலத்திற்கு ஏற்ப மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். மன அழுத்தம் முடி வளர்ச்சியைக் குறைக்கும் என்பது உண்மைதான்.

முடி கழுவுதல்
நீங்கள் ஒரு ஷாம்பூவைப் பயன்படுத்த விரும்பினால், லேசான ஒன்றைப் பயன்படுத்துங்கள். கடுமையான இரசாயனங்கள் நல்லதை விட தீங்கு விளைவிக்கும். இல்லையெனில், உங்கள் அம்மாவின் தலைமுடியில் பயன்படுத்திய 'ஷிகாகாய்' போன்ற மூலிகை மருந்தை நீங்கள் முயற்சி செய்யலாம். இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களை உங்கள் முடிகளுக்கு பயன்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும்.

செயற்கை முறைகள்
புதிய ஹேர் ஸ்டைலில் நீங்கள் அழகாக இருந்தாலும், ப்ளோ ட்ரையர் அல்லது அயர்ன் மூலம் உங்கள் தலைமுடியில் வெப்பத்தைப் பயன்படுத்துவது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. மேலும், உங்கள் முடியை இறுக்கமாக கட்டுவது பலவீனமடையலாம். ஆதலால், தலைமுடியை பராமரிக்கும் முறையை கவனமாக கையாள வேண்டும்.

உணவு
உங்கள் அம்மா உங்களை காய்கறிகளை உண்ணும்படி வற்புறுத்தும்போது, உங்களுக்கு எரிச்சலாக இருக்கலாம். அவை உங்க உடல் ஆரோக்கியத்திற்கும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நன்மையளிக்கும் என்பதால், வாறு வற்புறுத்தி இருக்கலாம். உங்கள் தலைமுடியின் ஆரோக்கியம் நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரிவிகித உணவை உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications