Just In
- 6 min ago
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 3 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 6 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 14 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Finance
இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்க தலைமுடி பிரச்சனைகளை முற்றிலும் தீர்க்க... இந்த 3 வெற்றிலை ஹேர் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!
பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் விழாக்களின் போது கடவுளுக்கு மரியாதையின் அடையாளமாக வெற்றிலையை சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஒரு பெரிய விருந்து மற்றும் அசைவ உணவு விருந்திற்கு பிறகு வெற்றிலையை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதய வடிவிலான இந்த வெற்றிலை உங்கள் முடி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், முடி உதிர்தல், அளவு இழப்பு மற்றும் பொடுகு பிரச்சனை ஆகிய பல்வேறு முடி பிரச்சனைகளை தீர்க்க வெற்றிலை உங்களுக்கு உதவும். மேலும் இவை அனைத்தும் உங்கள் தலைமுடிக்கு கொஞ்சம் கவனம் தேவை என்பதற்கான வெளிப்படையான அறிகுறிகளாகும்.
வெற்றிலையை பான் என்றும் அழைப்பார்கள். பான் அல்லது வெற்றிலையைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். எனவே, முடி வளர்ச்சிக்கு வெற்றிலையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வெற்றிலை ஹேர் மாஸ்கின் நன்மைகள்
வெற்றிலை முடி உதிர்வதைத் தடுக்கும், ஏனெனில் இதில் உங்கள் தலைமுடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது அதிக ஈரப்பதம் கொண்டது, இது உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடியைத் தடுக்க உதவுகிறது. வெற்றிலையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை மேம்படுத்தவும் உதவுகிறது. பான் உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும், நோய்த்தொற்று இல்லாமல் வைத்திருக்க உதவும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது. மேலும், இவை பொடுகை கட்டுப்படுத்தவும் உதவும். பான் முடியை சீரமைத்து, உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்றும்.

முடி வளர்ச்சிக்கு பான்
பான் அல்லது வெற்றிலையில் பொட்டாசியம், நிகோடினிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, பி1, பி2 மற்றும் சி மற்றும் தேவையான பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கூடுதலாக, இது ஏராளமான ஆண்டிமைக்ரோபியல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்து முடி உதிர்வதைத் தடுக்கும் மூலப்பொருளாக செயல்படுவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பான் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- 4-5 வெற்றிலை இலைகள்
- தேங்காய் எண்ணெய் 1-2 தேக்கரண்டி
- 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
- சில துளிகள் தண்ணீர்
- 4-5 வெற்றிலை இலைகள்
- எள் எண்ணெய் 1-2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
- சில துளிகள் தண்ணீர்
- 4-5 வெற்றிலை இலைகள்
- நெய் 1-2 தேக்கரண்டி
- தேன் 1 தேக்கரண்டி
- சில துளிகள் தண்ணீர்
செயல்முறை:
வெற்றிலைகளை அரைத்து, மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். ஒரு பாத்திரத்தில் பான் பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் துளிகள் தண்ணீர் சேர்க்கவும். இது ஒரு மென்மையான நிலைத்தன்மையை அடையும் வரை நன்கு கலக்கவும். அந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் நன்கு தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின்னர், 30 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு முடியை அலச வேண்டும்.

பான் மற்றும் எள் எண்ணெய் முடி மாஸ்க்
தேவையான பொருட்கள்
செயல்முறை
எள் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் வெற்றிலைகளை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். மென்மையான பேஸ்ட்டை உருவாக்க நீங்கள் சில துளிகள் தண்ணீரையும் சேர்க்கலாம். இப்போது தயாரான பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் சரியாக தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்னர், லேசான ஷாம்பு போட்டு உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

பான் மற்றும் நெய் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
செயல்முறை:
ஒரு பேஸ்ட் தயாரிக்க, கிரைண்டரில் வெற்றிலை, தண்ணீர், நெய் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இப்போது, உங்கள் ஹேர் மாஸ்க் தயார். அந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியில் தடவி 5-7 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். ஷவர் கேப் மூலம் முடியை மூடி, 15-20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர், உங்கள் தலைமுடியை ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவவும்.