For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களது தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது?

உங்கள் தலை முடிக்கு நீங்கள் கலரிங் செய்யும் போது அது தவறாகி விட்டதெனில் மிக வருத்தம் தான். ஆனால் இப்போது அதற்கு தீர்வு வந்து விட்டது. எனவே, நீங்கள் வறுத்த பட தேவையில்லை. அதிலும் நீங்கள் வீட்டில் இருந்

|

அனைவருக்கும் தங்கள் முடியை கலரிங் செய்ய பிடிக்கும். இப்போது அது பேஷனாக மாறிவிட்டது. உங்கள் தலைமுடிக்கு நீங்கள் கலரிங் செய்யும் போது அது தவறாகி விட்டதெனில் மிக வருத்தம் தான். இப்போது அதற்கு தீர்வும் வந்துவிட்டது. எனவே, நீங்கள் வறுத்தப்பட தேவையில்லை.

Remove Your Hair Color With Baking Soda

அதிலும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பேக்கிங் சோடா மூலம் மிக எளிமையான முறையில் உங்களது ஹேர் கலரிங்கை நீங்கி விடலாம். பேக்கிங் சோடா என்பது எளிதில் கிடைக்க கூடிய பொருளாகும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைகளில் இவை கிடைக்கும். பேக்கிங் சோடாவுடன் இன்னும் சில பொருட்களைச் சேர்த்து எவ்வாறு ஹேர் கலரிங்கை நீக்கலாம் என்று பார்ப்போம்.

நாம் இப்போது பார்க்கப்போவது தற்காலிகமாக முடியின் நிறத்தை மாற்றியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிரந்தரமாக முடியின் நிறத்தை மாற்றியவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம். நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடியை அலசுதல்

முடியை அலசுதல்

இரண்டு தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடாவை ஒன்றரை கப் தண்ணீருடன் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியை நனைத்து விட்டு இந்த கலவையைத் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். பின்னர், ஒரு தேக்கரண்டியளவு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஐந்து துளி தேங்காய் எண்ணெய் எடுத்து கலக்கி தேய்த்து அலசிவிடுங்கள். இதனை நீங்கள் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் செய்யலாம். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் உங்கள் முடியை சற்று வறட்சியடைய வைக்கும். ஆனால் இவை உங்கள் முடியின் கலரிங்கை விரைவில் மங்கச் செய்யும்.

டிஷ் சோப்பு

டிஷ் சோப்பு

மூன்று தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா நான்கு தேக்கரண்டியளவு பொடுகு நீக்கும் ஷாம்பூ ஒரு தேக்கரண்டியளவு பாத்திரம் தேய்க்கும் சோப்பு எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். உங்களது முடியில் நன்றாக நனையும் வரை தேயுங்கள். பின்னர், பிளாஸ்டிக் பையைக் கொண்டு 20 நிமிடங்கள் வரை தலையை சுற்றிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசுங்கள். இதை வாரத்தின் இரண்டு முதல் மூன்று நாட்கள் செய்யுங்கள். பாத்திரம் தேய்க்கும் சோப்பு மிக கடுமையான கறைகளை அகற்றுவதால் உங்கள் தலைமுடியின் கலரிங்கை மங்க செய்யவும் உதவும்.

ஷாம்பூ

ஷாம்பூ

ஒரு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா ஒரு தேக்கரண்டியளவு பொடுகு நீக்கும் ஷாம்பூ எடுத்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்னர் சூடான நீரில் உங்கள் முடியை நனைத்து சோடா மற்றும் ஷாம்பூ கலவையை தேய்த்து 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். இறுதியில் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். பொடுகு நீங்கும் ஷாம்பூ சோடாவுடன் சேரும் போது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

இரண்டு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா எடுத்துக் நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலையை நீங்கள் கலரிங் செய்த இடங்களில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் கொண்டு அலசுங்கள். எலுமிச்சைக்கு நல்ல நிறம் இழக்கச் செய்யும் சக்தி இருப்பதால் இது உங்கள் ஹேர் கலரிங் நீங்குவதற்கு சிறந்ததாக அமையும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

ஒரு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா, ஒரு தேக்கரண்டியளவு எப்சம் உப்பு, ஒரு கப் தண்ணீர் எடுத்து எப்சம் உப்பு கரையும் வரை நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் செய்து அலசி கொள்ளுங்கள். இதை வாரத்தின் இரண்டு முதல் மூன்று நாட்கள் செய்யுங்கள். எப்சம் உப்பானது உங்கள் தலைமுடியில் இருந்து கலரிங்கை அகற்றுவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

இரண்டு தேக்கரண்டியளவு பொடுகு நீக்கும் ஷாம்பூ 5-10 வைட்டமின் சி மாத்திரைகள் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா எடுத்து மாவு போன்று வரும் வரை கலக்கி கொள்ளுங்கள். உங்கள் முடியில் நன்றாக பரவும் வரை பரப்பி விடுங்கள். இந்த கலவையை தலையில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை விட்டு ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் பயன்படுத்தி அலசுங்கள். இதை வாரத்தின் பெராக்ஸைடு ஒரு சிறந்த நிறம் இளக்கியாக செயல்படுகிறது. இவற்றுள் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து உங்களது தலை முடியின் கலரிங்கை நீங்கி மகிழுங்கள்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஆறு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா மூன்று தேக்கரண்டியளவு ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு தேக்கரண்டியளவு கண்டிஷ்னர் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முடியின் மேல் தேய்த்து பிளாஸ்டிக் பை அல்லது ஷவர் கேப் கொண்டு சுற்றி 60 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் கொண்டு அலசுங்கள். இதனை வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை செய்யலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு சிறந்த நிறம் இலக்கியாக செயல் படுகிறது. இவற்றுள் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து உங்களது தலை முடியின் கலரிங்கை நீக்கி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remove Your Hair Color With Baking Soda

Nothing is worse than a dye-job gone wrong. Washing your hair to get a result that is the farthest thing from what you wanted, can throw you, head-first, into panic mode. But calm down. Now, take a deep breath because there is a solution – Baking soda.
Story first published: Monday, July 29, 2019, 12:59 [IST]
Desktop Bottom Promotion