For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்

நீங்கள் இது வரையிலும் உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்து விடீர்களா? நீங்கள் என்ன முயற்சியை கை கொண்டாலும் அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போது மீண்டும் பழைய நிலைக்கு

|

நீங்கள் இது வரையிலும் உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்து விடீர்களா? நீங்கள் என்ன முயற்சியை கை கொண்டாலும் அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறதா? நீங்கள் முடியை மென்மையாக்குதல், அல்லது பல கண்டிஷ்னர் உபயோகித்து பார்த்து இருப்பிர்கள் ஏதும் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லையா, இந்த முயற்சி உங்கள் முடியை கண்டிப்பாக ஸ்ட்ரைட் ஆக்க உதவும்.

Get Naturally Straight Hair With Milk In Just few Steps

இந்த முறையில் நீங்களே உங்கள் முடிக்கு தேவையானவற்றை தேர்வுசெய்து செய்வதால் இது உங்களுக்கு நல்ல பதிலை கொடுக்கும். கூந்தலுக்கான பாலின் பல நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் இவற்றை எவ்வாறு செய்வது என்ற முறையை பின்பற்றி உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

முதலில் மூன்று கப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் நீங்கள் தேங்காய்ப்பால் எடுப்பது நல்லது. இரண்டில் எது உங்களுக்கு கிடைக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் சிறிதளவு ஸ்ட்ராவ்பெர்ரி அல்லது வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களிடம் இருந்தால் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் தேவையில்லை. உங்களிடம் பால் இல்லையென்றால் நீங்கள் பால் பவுடர் கூட எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு சுத்தமான ஸ்பிரே டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் சீப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நோ ஷாம்பூ

நோ ஷாம்பூ

உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய வேண்டுமானால் முதலில் ஷாம்பூ இல்லாமல் நன்றாக அலசிக்கொள்ளுங்கள். உங்கள் முடியை நன்றாக அலசி காய வைத்த பிறகு, ஸ்பிரே டப்பாவில் பாலை ஊற்றி மேலும் உங்களுக்கு தேவையானால் வாழைப்பழம் அல்லது ஸ்டர்வ்பெர்ரி போட்டுக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முடியின் வேரில் இருந்து ஸ்பிரே செய்யுங்கள். இது உங்கள் முடியின் வேர் வரை செல்கிறதா என்பதையும் உங்கள் முடியின் எல்லா பகுதிகளிலும் படுகிறதா என்பதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

மசாஜ்

மசாஜ்

உங்கள் முடியின் எல்லா பகுதிலும் பால் உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு மசாஜ் செய்ய தொடங்குங்கள். சீப்பினை கொண்டு நேராக சீவி மசாஜ் செய்யுங்கள். உங்கள் முடியில் உள்ள சுருக்கங்கள் செல்லும் வரை சீவி மசாஜ் செய்யுங்கள்.

அலசுதல்

அலசுதல்

மசாஜ் செய்து முடித்த பிறகு அப்படியே 20 நிமிடங்கள் வரை காய வையுங்கள். பால் நன்றாக உங்கள் தலையில் ஊறிவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்பு ஒரு நல்ல ஷாம்பூ கொண்டு முடியை அலசுங்கள். பால் வாசனை அகற்றுவது கடினம் தான். எனவே நன்றாக ஷாம்பூ பயன்படுத்தி அலசுவது அவசியம்.

குளிர்ந்த தண்ணீர்

குளிர்ந்த தண்ணீர்

நீங்கள் ஷாம்பூ பயன்படுத்தி அலசும் போது சூடான நீரில் அலசக்கூடாது. இது உங்கள் முடியை சேதத்திற்கு உள்ளாக்கும். எனவே குளிர்ந்த நீரில் தான் அலச வேண்டும். முடியாத சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசிக் கொள்ளலாம்.

பளபளப்பான கூந்தல்

பளபளப்பான கூந்தல்

அலசி முடித்த பின்பு நீங்களே மாற்றத்தை உணருவீர்கள். உங்கள் முடி மிகவும் பளபளப்பாக மற்றும் நேராக இருப்பதை உணருவீர்கள். முடியை ஸ்ட்ரைட்னிங் செய்வதற்கு பால் சிறப்பாக செயல்ப்படும் என்பதை உணருவீர்கள். இதனை நீங்கள் அடிக்கடி செய்து வந்தால் இயற்கையான நேரான முடியை நீங்கள் விரைவிலையே பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Naturally Straight Hair With Milk In Just few Steps

you’ve tried every anti-frizz serum in the catalogue but still wake up every morning looking like a mythical monster. Donot worry about it milk may help you to get natural straight hair from your home.
Story first published: Saturday, August 10, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion