For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி அதிகமா கொட்டுதா? முடியின் அடர்த்தி குறையுதா? இதோ அதைத் தடுக்கும் வழிகள்!

தலைமுடி உதிர்வதை நிறுத்தி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முடி உதிர்வது நிற்கும்.

|

அழகு என்று வரும் போது அதில் தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் தற்போது கொரோனா பரவுவதைப் பார்க்கும் போது, பலருக்கும் மனதில் ஒருவித பயம் அதிகரிக்கிறது. அதோடு கொரோனா ஊடரங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியிருக்கிறது. இப்படி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பலருக்கும் ஒருவித அழுத்தம் மனதில் ஏற்படுகிறது. மன அழுத்தம் அதிகரித்தால் அது தலைமுடி உதிர்வை உண்டாக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால், நாம் மன அழுத்தமின்றி சந்தோஷமாக இருக்க வேண்டும்.

Everyday Ingredients to Get Thicker and Dense Hair

அதோடு தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு முயலாமல் இருந்தால், பின் உங்கள் முடி எலிவால் போன்றோ, ஆங்காங்கு வழுக்கையாகவோ தென்பட ஆரம்பித்துவிடும். தலைமுடி உதிர்வதை நிறுத்தி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் அடர்த்தியாகும். இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டையில் முடியை வலிமையாக்க உதவும் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அதோடு முட்டை தலைமுடியை பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஒரு டேபிள் பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காயச் சாறு தலைமுடியை அடர்த்தியாக்க பெரிதும் உதவக்கூடியது. அதற்கு வெங்காயச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு

தலைமுடியின் அடர்த்தியை அதிகமாக்க உதவும் மற்றொரு சிறப்பான பொருள் உருளைக்கிழங்கு சாறு. உருளைக்கிழங்கில் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. உருளைக்கிழங்கை சாறு எடுத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் உள்ளது. இத்தகைய ஆளி விதையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்போது ஜெல் போன்று வரும். அந்த ஜெல்லை சேகரித்து, தலைமுடியில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடி உதிர்வது குறைந்து, முடி அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசினால், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, தலைமுடி மெலிவது தடுக்கப்படும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

இந்தியாவின் பெரும்பாலானோரது வீட்டில் வளர்க்கப்படும் ஓர் அற்புதமான செடி கற்றாழை. இந்த கற்றாழையின் ஜெல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இத்தகைய கற்றாழை தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் திறன் கொண்டது. அதற்கு கற்றாழையின் ஜெல்லை இரவு தூங்கும் முன் தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடி நன்கு அடர்த்தியாக வளர்ச்சி பெறும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ரிசினோலியிக் அமிலம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு விளக்கெண்ணெயுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ

ப்ளாக் டீயில் காப்ஃபைன் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் குடிக்கும் காபியை விட ப்ளாக் டீயில் காப்ஃபைன் அதிகமாக உள்ளது. இத்தகைய காப்ஃபைன் தலைமுடி உதிர்வதற்கு காரணமான ஹார்மோனைத் தடுத்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு ப்ளாக் டீயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் முடியை அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyday Ingredients to Get Thicker and Dense Hair

In this article, we listed some everyday ingredients to get thicker and dense hair. Read on...
Story first published: Thursday, May 27, 2021, 18:51 [IST]
Desktop Bottom Promotion