Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
ஆண்களே! உங்கள் வழுக்கைக்கு காரணம் நீங்கள் தெரியாமல் செய்ய கூடிய இந்த செயல்கள்தான் காரணமாம்..!
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் முடி மிக முக்கியமானதாக கருதப்படும். முடி கொஞ்சம் கொட்டினால் கூட பலரால் பொருத்து கொள்ள முடியாது. இப்படி இருக்கையில் முடி கொத்து கொத்தாக கொட்டினால் என்னவாகும். அதுவும் முடி தொடர்ந்து கொட்டியதால் முடியில் வழுக்கை ஏற்பட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள். நாம் எதையுமே செய்யாமலா இந்த முடி இப்படி கொட்டுகிறது..?

உண்மை என்னவெனில், நீங்கள் செய்கின்ற ஒரு சில பழக்க வழக்கங்கள் தான் உங்கள் முடி உதிர்வுக்கு முழு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தவிர்த்து விட்டாலே எளிதாக முடி கொட்டும் பிரச்சினைக்கு எண்ட் காட் போட்டுவிடலாம். மேலும், வழுக்கையில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். சரி, இனி நாம் செய்கின்ற என்னென்ன செயல்களால் இந்த முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏன் கொட்டுகிறது..?
நமது முடி கொட்டுவதற்கு ஒரு சில முக்கிய காரணிகள் உள்ளன. ஊட்டசத்து குறைபாடு, அன்றாட பழக்க வழக்கங்கள், சீரற்ற உணவுகள், சுற்றுப்புற சூழல் போன்றைவை முதல் காரணமாக உள்ளன. இதனை சரி செய்து விட்டாலே எளிதாக உங்களின் முடி பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.

அதிக சூடா..?
பொதுவாகவே தலைக்கு குளிக்கும் போது சுடு நீரில் குளிக்க கூடாது. இது பலவித பாதிப்பை நமக்கு ஏற்படுத்தும். இந்த சுடு நீர் குளியல் முடியின் ஈரப்பதத்தை குறைத்து அதிக வறட்சியை தரும். இது தான் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

முடி வெட்டுவதை தவிர்க்காதீர்கள்..!
நம்மில் பலர் இதுலயும் சோம்பல் கொள்வோம். அதாவது முடியை வெட்டாமலே காடு மாதிரி வளர்த்து விடுவோம். இது நமது முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, மாதம் 1 அல்லது 2 முறை முடி வெட்டுவது நல்லது.

அதிக வேதியா..?
கண்ட கண்ட ஷாம்பூக்களை பயன்படுத்தினால் இந்த பாதிப்பு இயல்பாக வர கூடும். அதாவது, அதிகம் வேதி பொருட்கள் கலந்த ஷாம்பூ அல்லது கண்டிஷனர் பயன்படுத்தினால் முடி கொத்து கொத்தாக கொட்டும். எனவே, இயற்கை வழியாக தயாரித்த சிகைக்காய் அல்லது குறைந்த வேதி பொருட்கள் கலந்து ஷாம்புக்களை பயன்படுத்துங்கள்.

தலை வருவதே இல்லையா..?
பொதுவாக தலை வாராமல் இருந்தாலும் இந்த முடி கொட்டும் பிரச்சினை வர கூடும். எனவே, தினமும் உங்கள் தலையை வாரி கொள்ளுங்கள். அத்துடன் அவ்வப்போது எண்ணெய்யும் தடவுங்கள்.

ஹேர் கலரிங்
வெள்ளை முடி வருவதால் அதனை கலர் செய்வது இயல்பு தான். என்றாலும் அமோனியா அதிகமாக உள்ள கலரிங் ஏஜெண்டுகளை பயன்படுத்தினால் முடி வெள்ளை ஆகுதோ இல்லையோ, அதிக அளவில் முடி கொட்டி விடும்.

நோ ட்ரயேர்ஸ்..!
முடி ஈரமாக இருக்கிறதென்று ட்ரயேர்ஸ் பயன்படுத்தினால் அவ்வளவு தான். இது நேரடியாக உங்கள் முடியை பாதிக்க செய்து கொட்ட வைத்து விடும். மேலும், ஈரமாக இருக்கும் போது தலையை வாராதீர்கள். இதுவும் பெரிய அளவில் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

மறந்து விடாதீர்கள்..!
தலைக்கு குளிக்காமல் இருந்தாலும், தினமும் தலைக்கு குளித்தாலும் முடி கொட்டி விடும். எனவே 3 நாட்களுக்கு ஒரு தலைக்கு குளியுங்கள். இல்லையேல் முடியில் அழுக்குகள் சேர்த்து பொடுகு தொல்லைக்கு ஆரம்ப புள்ளியை வைத்து விடும். இதுவே உங்கள் முடி கொட்டும் பிரச்சினைக்கு வழி வகுக்கும்.



Click it and Unblock the Notifications
