Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆண்களே..! உங்களின் வழுக்கையில் முடி வளர வைக்க ஆப்பிளை இப்படி பயன்படுத்தினால் போதும்..!
எங்கேயும் முடி..எதிலும் முடி..! எப்போ பார்த்தாலும் உங்களின் முடி கொட்டி கொண்டே இருக்கா..? முடி கொட்டும் பிரச்சினையே உங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துதா..? இப்படி முடியை பற்றிய எக்கசக்க கேள்விக்கும் உங்களின் பெரும்பாலான பதில் "ஆமாம்" என்பதே. இப்போதெல்லாம் மற்ற பிரச்சினைகளை காட்டிலும் முடியை பற்றிய தொல்லையே பெரும் பாடாக உள்ளது. ஒரு சிலருக்கு முடி உதிரும் அளவிற்கே முடி வளரவும் செய்யும். ஆனால், பலருக்கும் இது தலை கீழாகவே நடக்கும்.

முடி கொட்டுமே தவிர வளர செய்யாது. அந்த இடத்தில் வழுக்கை என்கிற புதிய பிரச்சினை உருவாகி இருக்கும். இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து தப்பிக்க மிக எளிதான வைத்தியம் உள்ளது. இந்த முறையை பல ஆயிரம் வருடமாக நமது முன்னோர்களே பயன்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வளவு சிறப்புமிக்க முறையை பற்றியும், முடியினால் ஏற்படுகின்ற மற்ற பிரச்சினைகளையும் எவ்வாறு குணப்படுத்துவது என்பதையும் இனி பார்ப்போம்.

ரொம்ப முக்கியம்..!
ஒருவரின் தோற்றத்தை மிக இயல்பாகவே அழகாக காட்ட, முடி நன்கு உதவும். முடியின் ஆரோக்கியம் என்பது நமது உடல் ஆரோக்கியத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. முடி அதிக அளவில் கொட்டினால் அது பலவித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். இனி ஆப்பிளை வைத்து எப்படி முடி பிரச்சினைகளை தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

பொடுகை போக்க
தலையில் உள்ள பொடுகை முழுவதுமாக போக்குவதற்கு இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை...
ஆப்பிள் 1
ஓட்ஸ் 2 ஸ்பூன்

செய்முறை :-
ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு, அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஓட்ஸை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலைக்கு தேய்த்து 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.

முடியை பொலிவாக்க...
முடி உதிர்வை நிறுத்துவது போன்று முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்வதும் மிக முக்கியமானதாகும். இதை செய்வதற்கு இந்த குறிப்பே போதும்.
தேவையான பொருட்கள்...
ஆப்பிள் 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
சோள மாவு 1ஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினீகர் 2 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் ஆப்பிளை அரிந்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை வடி கட்டிய பின் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர், சோள மாவு ஆகியவற்றை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் குளிக்கவும். இவ்வாறு 2 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முடி பொலிவு பெறும்.

மீண்டும் முடி வளர
உங்கள் வழுக்கையில் முடி வளர வைக்க இந்த குறிப்பு ஒன்றே போதும். இதற்கு தேவையான பொருட்கள்..
முட்டை 1
ஆப்பிள் 1

செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொண்டு நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆப்பிளை அரைத்து கொண்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.

பளபளவென மாற
உங்களின் முடி மிகவும் பளபளப்பாக இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையானவை :-
தேன் 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
ஆப்பிள் 1

செய்முறை :-
ஆப்பிளை அரிந்து கொண்டு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தென் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முடியில் தடவவும். 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி பளபளவென மின்னும்.



Click it and Unblock the Notifications
