For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே பழம்...முடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!

தக்காளியில் வைட்டமின் எ,பி,சி, இப்படி எண்ணற்ற வைட்டமின்கள் இருகிறது. உங்களின் முடி கொட்டும் பிரச்சனை, பொடுகு அதிகம் சேருவது இப்படி எல்லாவற்றையும் குணப்படுத்த நம்ம வீட்டிலேயே இருக்கும் இந்த தக்காளி அத

|

தலையில் வழுக்கையா..? முடி அதிகமாக கொட்டுகிறதா..? தலையில் பொடுகு இருப்பதால் பேன்களும் வருகிறதா..? இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு பழம் போதும். அது என்ன பழம்னு தெரிஞ்சிக்கணுமா...' அதுதான் தக்காளி..! ஆமாங்க இந்த தக்காளிதான் உங்கள் முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவதற்கான ஒரு எளிமையான வழி.

beauty

தக்காளியில் வைட்டமின் எ,பி,சி, இப்படி எண்ணற்ற வைட்டமின்கள் இருகிறது. உங்களின் முடி கொட்டும் பிரச்சனை, பொடுகு அதிகம் சேருவது இப்படி எல்லாவற்றையும் குணப்படுத்த நம்ம வீட்டிலேயே இருக்கும் இந்த தக்காளி அதிகம் பயன்படுகிறது. தக்காளியை வைத்து செய்யும் சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 ஹேர் ஸ்பா

#1 ஹேர் ஸ்பா

தக்காளியில் ஹேர் ஸ்பாவா...! அப்படினு ஆச்சரியமா பாக்கிறீங்களா..? ஆமாங்க தக்காளியிலும் ஹேர் ஸ்பா செய்ய முடியும். இந்த ஹேர் ஸ்பா உங்கள் முடியை மிக மென்மையாகவும், முடி உடைவதில் இருந்தும் காப்பாற்றும்.

தேவையானவை :-

- தக்காளி

- ஆலிவ் எண்ணெய்

- மிதமான சுடு தண்ணீர்

- முல்தானி மட்டி

- தயிர்

செய்முறை :-

2 தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி மிக்சியில் நன்றாக பியூரி போல அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு 2 டீஸ்பூன் தக்காளி பியூரி, 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணேய் ஆகியவற்றை நன்கு கலந்து தலையில் ஒவ்வொரு பகுதியாக தடவி மசாஜ் செய்யவும். இந்த ஹேர் ஸ்பாவை 15 நிமிடம் வரை அப்படியே விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மிதமான சுடு தண்ணீர் எடுத்து கொண்டு அதனுடன் காட்டன் துணியை அதில் நனைத்து கொண்டு தலையில் அந்த துணியை 10 நிமிடம் வரை கட்டிவிடவும். அடுத்து 3 டீஸ்பூன் முல்தானி மட்டி, 3 டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் தக்காளி பியூரி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு அந்த துணியை கழட்டிவிட்டு இந்த பேஸ்டை தலையில் ஒவ்வொரு அடுக்காக அப்ளை பண்ண வேண்டும். 15 நிமிடம் கழித்து சிறிது ஷாம்பூ சேர்த்து தலையை அலசினால் மிகவும் மென்மையான, ஆரோக்கியமான கூந்தலை பெறுவீர்கள். இந்த டிப்ஸை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே முடி உதிர்வதையும், உடைவதையும் தடுத்து பளபளப்பான முடியை பெற முடியும்.

#2 வேர்கள் உறுதி பெற

#2 வேர்கள் உறுதி பெற

தேவையானவை :-

- தக்காளி

- பாதம் எண்ணெய்

- கற்றாழை

செய்முறை :-

மிக்சியில் 2 தக்காளியை சிறிது சிறிதாக கட் செய்து போட்டு பியூரி போல எடுத்து கொள்ளவும். அடுத்து இதனை வடிகட்டி 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 3 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து தலை முழுவதும் நன்றாக அப்ளை பண்ணவும். 30 நிமிடம் கழித்து கற்றாழை சாற்றை 3 டீஸ்பூன் எடுத்து கொண்டு தலை முழுவதும் தடவி மசாஜ் பண்ண வேண்டும். பிறகு மிதமான சூடு தண்ணீரில் உங்கள் தலையை அலசி விடவும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் உங்கள் முடி உறுதியாக இருக்கும். சென்சிடிவ் ஹேர் உள்ளவர்கள் கற்றாழையை தவிர்க்கவும்.

#3 பொடுகு போக

#3 பொடுகு போக

தேவையனவை :-

- தக்காளி

- செம்பருத்தி இதழ்கள்

- தேங்காய் எண்ணெய்

- ஆலிவ் எண்ணெய்

செய்முறை :-

முதலில் தக்காளியை பியூரி போல அரைத்து கொண்டு 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். 10 நிமிடம் சென்று தலையில் அப்ளை செய்யவும். பிறகு 10 செம்பருத்தி இதழ்களை எடுத்து கொண்டு அதனை சிறிது ஆலிவ் எண்ணெயோடு சேர்த்து மிக்சியில் அரைத்து கொண்டு தலையில் தடவி விடவும். பின்பு மிதமான சுடு தண்ணீரில் தலையை அலசவும். இந்த டிப்ஸ் உங்கள் தலையில் உள்ள பொடுகுகளை போக்கி, முடி கொட்டுவதையும் தவிர்க்கும்.

#4 ஹேர் மாஸ்க்

#4 ஹேர் மாஸ்க்

தேவையனவை :-

- தக்காளி

- தேன்

செய்முறை :-

இந்த ஹேர் மாஸ்க் வறண்ட தலையை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதற்கு முதலில் தக்காளி பியூரியை 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். பிறகு தலையில் தடவி 20 நிமிடம் கழித்து வெண்ணீரில் கழுவவும்.மேலும் இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலையின் அமில தன்மையை சீராக வைக்க உதவும்.

#5 கருகரு முடி வளர

#5 கருகரு முடி வளர

தேவையனவை :-

- தக்காளி

- ஆம்லா பவுடர்

செய்முறை :-

தக்காளி பியூரியை 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் ஆம்லா பவ்டரை சேர்த்து கொண்டு பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். பிறகு இதனை தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருகருவென வளர செய்யும்.

#6 நரை முடி நீங்க

#6 நரை முடி நீங்க

தேவையனவை :-

- தக்காளி

- ஆலிவ் எண்ணெய்

- மிதமான சுடு தண்ணீர்

- மருதாணி பவுடர்

செய்முறை :-

2 டீஸ்பூன் தக்காளி பியூரி, 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணேய் ஆகியவற்றை நன்கு கலந்து தலையில் ஒவ்வொரு பகுதியாக தடவி மசாஜ் செய்யவும். இந்த ஹேர் ஸ்பாவை 15 நிமிடம் வரை அப்படியே விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மிதமான சுடு தண்ணீர் எடுத்து கொண்டு அதனுடன் காட்டன் துணியை அதில் நனைத்து கொண்டு தலையில் அந்த துணியை 10 நிமிடம் வரை கட்டிவிடவும். பிறகு அந்த துணியை கழட்டிவிட்டு மருதாணி ப்வடரை பேஸ்ட் போல தண்ணீரில் கலந்து நரை இருக்கும் இடத்தில் அப்ளை பண்ணவும். இவ்வாறு செய்தால் உங்கள் நரை முடி மறைந்து போகும்.

# தக்காளியின் பயன்கள்

# தக்காளியின் பயன்கள்

தக்காளி தலைக்கு மட்டும் பயன் தர கூடியது அல்ல. முகம், தோல், என அனைத்து வகையிலும் உடலுக்கு அழகு சேர்க்க அதிகம் உதவுகிறது. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் எப்போதுமே உங்களை ஆரோக்கியத்துடனும் பொலிவுடனும் காட்ட செய்யும். மேலும் இது உடலின் ph அளவை சீராக வைக்க பெரிதும் பயன்படுறது. தினமும் 1/2 கிளாஸ் தக்காளி ஜூஸை குடித்தால் உங்கள் முடி,தோல், முகம் இவை அனைத்தும் அழகாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tomato for all hair problems

Just this one fruit is more enough for all your hair problems..!
Story first published: Friday, July 20, 2018, 12:16 [IST]
Desktop Bottom Promotion