Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
வெள்ளை முடிகளை குறைக்கும் புதுவித முட்டை எண்ணெய்..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..?
முடி பிரச்சினை பெரிய பிரச்சினையாக இன்று பலருக்கு உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடு என்பதே இல்லை. முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு தொல்லை, அடர்த்தி குறைதல் போன்ற பலவித பிரச்சினைகள் முடியில் ஏற்படுகிறது. இவற்றில் சற்று மோசமானதாக கருதப்படுவது இளம் வயதிலே வெள்ளை முடி வருதல்.

வெள்ளை முடி பிரச்சினைகளை தீர்க்க என்னென்னவோ செய்வோம். ஆனால், அவற்றில் எந்த பலனும் கிடைக்காது. இந்த முட்டை எண்ணெய் முடியில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளையும் தீர்த்து விடும். எப்படி என்பதை இனி பார்ப்போம்.

முட்டை எண்ணெய்..!
பெயரே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதேன்னு நினைக்கிறீங்களா..? இது உண்மைதாங்க. முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பலவித நன்மைகளை கொண்டதாம். முடியில் இருக்க கூடிய பொதுவான பிரச்சினைகளை இது சரி செய்ய வல்லது.

என்னென்ன கலவைகள்..?
இந்த முட்டை எண்ணெய்யில் முக்கியமான சில மூல பொருட்கள் உள்ளன. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், EFA போன்றவை நிறைந்துள்ளன. இவை மண்டையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடியை நன்கு வளர செய்யும். மேலும், இளநரையை தடுக்க கூடிய ஆற்றலும் இந்த முட்டை எண்ணெய்யிற்கு உள்ளதாம்.

கண்டிஷ்னராக செயல்படும்...
இந்த முட்டை எண்ணெய் சிறந்த கண்டிஷனராக செயல்படுமாம். மேலும், முடி கொட்டிய இடத்தில் செல்களை மறு உற்பத்தி செய்ய இந்த எண்ணெய் உதவுகிறது. இவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் வறண்ட மண்டையை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும். பொலிவான முடியை பெற வேண்டுமென்றால் இந்த முட்டை எண்ணெய்யே அதற்கு போதும்.

நரைகளை போக்க
உங்களின் நரைகளை போக்குவதற்கு இந்த எண்ணெய் மிகவும் உதவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள்...
ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன்
முட்டை 3

எவ்வாறு தயாரிப்பது..?
இந்த முட்டை எண்ணெய்யை தயாரிப்பது மிக எளிமையான ஒன்றாகும். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் இதனை போட்டு கொண்டு, ஆலிவ் எண்ணெய்யை இவற்றில் சேர்த்து கொள்ளவும். நன்கு கலக்கி கொண்டே இருக்க வேண்டும். அதன்பின் 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

எவ்வாறு பயன்படுத்துவது..?
இந்த முட்டை எண்ணெய்யை ஆறிய பிறகு பயன்படுத்த வேண்டும். முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து கொண்டு இந்த எண்ணெய்யை தலை முழுக்க தடவவும். 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் கொடுத்த பிறகு, 3 மணி நேரம் அப்படியே விட்டு சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.

முக பொலிவிற்கு
முகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள இந்த எண்ணெய் நன்கு உதவும். பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள், வெடிப்புகள், சூடுபட்ட புண்கள், ஆகியவற்றை குணப்படுத்தும். மேலும், நீண்ட நாட்கள் இளமையான முகத்தை இந்த முட்டை எண்ணெய் தரும். வறண்ட முக சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த எண்ணெய் உதவுகிறது.

நகம் உடைகிறதா..?
பலருக்கு நகங்கள் அடிக்கடி உடைதல் ஏற்படும். இதற்கு மாத்திரைகளை சாப்பிடுபவர்களும் உண்டு. ஆனால், இந்த முட்டை எண்ணெய்யை பயன்படுத்தி எளிதில் நகம் உடைதல் பிரச்சினைக்கு தீர்வை அடையலாம். மேலும், நகத்தில் கருப்பாக இருந்தால் அதனையும் இது சரி செய்து விடும்.



Click it and Unblock the Notifications
