For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்..!

|

இயற்கை வைத்தியம் என்பது இயற்கை சார்ந்த பொருட்களின் மூலம் பெறப்படும் முறையாகும். இது பல்வேறு நலன்களை தர கூடியது. ஏனெனில் இதில் பயன்படுத்தும் அனைத்து விதமான மூல பொருட்களும் இயற்கையில் விளைந்த பொருட்களை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்மில் பலர் இதனை பயன்படுத்தாமல் வேதி முறைகளை பின்பற்றி வருகின்றோம். இது எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

Natural ways To Get Healthy Hair

குறிப்பாக முடி பிரச்சினையை சொல்லலாம். முடி பிரச்சினைக்கு ஏராளமான வேதி பொருட்களை உபயோகித்து முடியின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக கெடுத்து வருகின்றோம். இதற்கு மாற்றாக இருக்க கூடிய பல இயற்கை முறைகளை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமில்லாத முடியா..?

ஆரோக்கியமில்லாத முடியா..?

உங்கள் முடி ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான ஒரு சில அறிகுறிகள் முடியிலே தென்படும். அந்த வகையில் முடி உதிர்தல், நரை முடி வருதல், பொடுகு, பேன் தொல்லை, முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் அடங்கும். இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் உங்கள் முடி ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்.

சுரைக்காய் முறை

சுரைக்காய் முறை

முடி கொட்டாமல் நன்கு வளர வேண்டுமென்றால் அதற்கு இந்த சுரைக்காய் முறை பயன்படும். சுரைக்காயை நன்கு அரைத்து கொண்டு, அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தலைக்கு தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை நின்று, நன்றாக வளரும்.

முட்டை

முட்டை

உடலுக்கு முட்டை எவ்வளவு ஆரோக்கியமோ அதே போன்று இது முடிக்கும் நன்மை தருமாம். முடி உடைதல், வறண்ட முடி ஆகிய பிரச்சினைக்கு முட்டை சிறந்த தீர்வு. முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொண்டு அதனை தலைக்கு தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி உடையாமல் நலமாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் உள்ளன. குறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் உள்ளன. இதனை தேனுடன் கலந்து நன்கு மசித்து தலைக்கு தடவி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும், முடியில் உள்ள சிதைவடைந்த செல்களை குணப்படுத்தும்.

MOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..!

வெந்தயம்

வெந்தயம்

சிறந்த மருந்தாக உள்ள இந்த வெந்தயம், முடியின் பிரச்சினைக்கு உதவுகிறதாம். 2 டேபிள்ஸ்பூம் வெந்தயத்தை எடுத்து கொண்டு இரவு முழுக்க ஊற வைக்கவும். பிறகு இதனை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை நின்று விடும்.

பொலிவான முடியை பெற

பொலிவான முடியை பெற

முடி பார்ப்பதற்கு அழகாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும். இதனை அடைய இந்த ஸ்ட்ராவ்பெர்ரி குறிப்பு உதவும். ஸ்ட்ராபெரியில் பலவித நன்மைகள் முடிக்காக உள்ளது.

தேவையானவை :-

ஸ்ட்ராவ்பெர்ரி 6

முட்டை 1

எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்

 செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஸ்ட்ராவ்பெரியை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து முட்டையை நன்கு அடித்து கொண்டு இவற்றுடன் சேர்க்கவும். இந்த கலவையுடன் எலுமிச்சை சாற்றை இறுதியாக சேர்த்து தலைக்கு தடவி குளித்தால் முடியின் பொலிவு அதிகரிக்கும். மேலும், பளபளப்பான முடியையும் இது தரும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இந்த ஆலிவ் எண்ணெய்க்கு முதன்மையான பங்கு உள்ளது. இது நரை முடி முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை அனைத்திற்கும் தீர்வை தரும்.

தேவையானவை :-

ஆலிவ் எண்ணெய் 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன்

தேன் 3 டீஸ்பூன்

MOST READ: கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

செய்முறை :-

செய்முறை :-

ஆலிவ் எண்ணெய்யை இரு வகையாக நாம் பயன்படுத்தலாம். முதல் முறையை செய்ய, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தடவி குளிக்கலாம். இது முடி உதிர்வு, வறட்சி, அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும். மற்றொரு முறையானது, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரைகள் அற்ற ஆரோக்கியமான முடியை பெறலாம்.

நெல்லி

நெல்லி

நரைகளை தடுக்க நெல்லிக்காய் நன்கு பயன்படும். இதில் உள்ள வைட்டமின் சி முடிக்கு அதிக நலனை தரும். மிகவும் உறுதியான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமானால் நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural ways To Get Healthy Hair

Follow these easy and simple beauty tips for hair to give that lustre and shine, and flaunt your hair like the models do...
Desktop Bottom Promotion