For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்... இளநரையும் போயிடும்...

|

பெண்களை பொருத்த வரை மிக முக்கியமான பராமரிப்பு என்றால் அது கூந்தல் பராமரிப்பு தான். காரணம் கூந்தல் தான் பெண்களுக்கு அதிக அழகை கொடுக்கிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு இது போன்ற பிரச்சினைகளைக் காட்டிலும் இளநரை உண்டாகுவது பெண்களை மிகவும் கவலைப்பட வைத்து விடுகிறது.

இந்த இளநரையை அவர்களும் மறைக்க என்னென்வோ கலரிங் முறைகள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் எதுவும் ஒரு நிரந்தர தீர்வை தருவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு

தீர்வு

இதற்கான ஒரே தீர்வு இயற்கை முறைகள். இயற்கை முறைகளைக் கொண்டு இந்த இளநரையை மாற்றி விடலாம். மேலும் எந்த வித கெமிக்கல்களும் இல்லாத முறை என்பதால் கூந்தலுக்கு எந்த வித பாதிப்பும் நேராது. இதுவரை இளநரைக்கு நாம் நிறைய முறைகள் கேள்விபட்டிருந்தாலும் இந்த ஆர்கன் ஆயில் மிகவும் சிறந்தது. இந்த ஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை போக்கி கூந்தல் பராமரிப்பு க்கும் சிறந்து விளங்குகிறது. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

MOST READ: பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்?

இளநரை ஏன் ஏற்படுகிறது?

இளநரை ஏன் ஏற்படுகிறது?

விட்டமின்களின் குறைபாடுகள்

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம்

சுற்றுப்புற மாசுக்கள்

தலை மற்றும் கூந்தலை சுத்தமாக வைக்காமல் இருத்தல்

மன அழுத்தம்

கூந்தலை ஸ்டைல் பண்ண பயன்படுத்தும் வெப்பமான கருவிகள், கூந்தலுக்கு அடிக்கடி கலரிங் செய்தல்.

ஆர்கன் ஆயில்

ஆர்கன் ஆயில்

ஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை மாற்றி கூந்தலுக்கு புத்துயிர் கொடுக்கிறது.

கூந்தலுக்கு ஈரப்பதம் தருகிறது

கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது

பளபளப்பாக, மென்மையாக கூந்தல் ஜொலிக்ு உதவுகிறது.

கூந்தல் சிக்கில்லாமல் வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது

பொடுகை போக்கி வறண்ட மற்றும் அரிப்பை தடுக்கிறது.

உடைந்த முடிகளை ரிப்பேர் செய்கிறது

கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து கூந்தலை காக்கிறது.

MOST READ: உங்கள் சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்... எதோடு கலந்து அப்ளை செய்யணும்?

இதை எப்படி பயன்படுத்துவது?

இதை எப்படி பயன்படுத்துவது?

வீட்டிலேயே இந்த ஆர்கன் ஆயில் கொண்டு கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்த வேண்டும். இதை ஒவ்வொரு தடவையும் சாம்பு போட்டு குளித்த பிறகு தேய்த்து வந்தால் இளநரை மாறிவிடும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் மோரோக்கன் ஆர்கன் ஆயில்

2 டேபிள் ஸ்பூன் ஷி பட்டர்

1 டேபிள் ஸ்பூன் டீ ட்ரி ஆயில்

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்.

1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

MOST READ: தினமும் காலையில சீக்கிரமா எழுந்திருக்கணுமா? நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் இதுதான்...

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் மோரோக்கன் ஆர்கன் ஆயில் மற்றும் ஷி பட்டர் இரண்டையும் இணைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு டீ ட்ரி ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

இறுதியில் கொஞ்சம் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்பொழுது உங்கள் கூந்தலை சல்பேட் இல்லாத மைல்டு சாம்பு கொண்டு அலசி ஆர்கன் ஆயில் கண்டிஷனரை அப்ளே செய்யுங்கள்.

கொஞ்சம் அளவு கண்டிஷனரை எடுத்து தலையில் வேர்க்கால்களில் படும் படி தேய்த்து 15-20 நிமிடங்கள் காய வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Argan Oil Really Effective In Treating Grey Hair?

Argan oil has a number of benefits attached to it. While it is largely used for treating dull, damaged, and grey hair, it also has other benefits that might surprise you.
Story first published: Tuesday, October 30, 2018, 11:10 [IST]
Desktop Bottom Promotion