For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா மூலிகை எண்ணெய்!! அரிய மூலிகை வகை!!

தலைமுடி நரைத்தலைத் தடுக்கும் அரிய மூலிகை கரும்பலாவைப் பற்றிய குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி செம்பட்டையாகி, முழுதும் நரைத்து விடுகிறது.

இளைஞர்கள் தங்கள் மொபைலுக்கு, தங்கள் வாகனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தங்கள் தலைமுடிக்கு அளிக்க மறந்ததன் விளைவே, இந்த பாதிப்புகள் யாவும். பாதிப்புகள் வந்த பின்னர், அதைப் போக்க அதிக விலையுள்ள கிரீம்கள், மருந்துகள் வாங்கி, அதிலும் பலன்கள் கிடைக்காமல், மனதளவில் சோர்ந்து விடுகிறார்கள்.

How to use blackberry fruits to turn grey hair into black

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால், விருப்பமில்லாத எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது, இக்காலம்.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன. கெமிக்கல் நிறைந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களும் அடக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் :

சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் :

சனிக்கிழமை வருகிறது என்றாலே வீடுகளில், சிறுவர்கள் அக்காலங்களில் பயந்து உடல் நலம் இல்லாதது போலவும், வேறு எதோ முக்கியமான பள்ளி வேலைகள் இருப்பது போலவும், பாசாங்கு செய்து, அன்று அவசியம் செய்யவேண்டிய எண்ணைக்குளியலைத் தவிர்க்க முயல்வார்கள். பழம் தின்று கொட்டை போட்ட, தாத்தா பாட்டியிடம் இந்த பாசாங்கு, கதையாகுமா? அத்துடன் தந்தை வந்தால், முதுகு தோல் உரிந்துவிடுமே, என்ற பயத்தில் சிறுவர்கள், உடலெங்கும் தாத்தாவோ அல்லது பாட்டியோ தேய்த்துவிட்ட எண்ணை காய, வெயிலில் அமர்ந்திருப்பார்கள்.

நன்மைகள் :

நன்மைகள் :

காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தேய்த்து ஊற வைத்து குளித்து வர, உடல் சூடு விலகும், உடல் சூடு விலகி, உடலில் தன்மை இயல்பானாலே, பெரும்பாலான வியாதிகள் உடலை விட்டு நீங்கி விடும். உடலின் வியாதி எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, பிள்ளைகளுக்கு அடிக்கடி வரும் சளித்தொல்லைகள் விலகும், மேலும், கண் பார்வை தெளிவடையும், இத்துடன் தலையில் உள்ள பொடுகு போன்றவை நீங்கி, முடி உதிர்வு கட்டுப்பட்டு, முடிகள் கறுத்து வளரும்

நரைமுடி ஏற்படக் காரணமான உடல் பாதிப்புகள். :

நரைமுடி ஏற்படக் காரணமான உடல் பாதிப்புகள். :

புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இல்லாத, ஊட்டச்சத்தற்ற உணவுவகைகளை சாப்பிடுவது ஒரு பாதிப்பென்றால், வைட்டமின் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் வெண் படை தேமல் போன்ற சரும பாதிப்புகள், சர்க்கரை பாதிப்பு மற்றும் புகைப்பழக்கமும் மற்ற காரணங்களாகின்றன. சிலருக்கு பரம்பரை ஜீன்களாலும் தலைமுடி நரைத்து விடுகிறது. தலையில் ஏற்படும் பொடுகும், வேர்க்கால்களை பாதித்து, முடியை நரைக்க வைக்கின்றன. பொடுகை அழிக்க தடவிக் குளிக்கும் ஷாம்பூக்களில் உள்ள இரசாயனங்களும், தலைமுடி நரைக்க காரணமாகின்றன.

இளநரை ஏற்பட காரணம்:

இளநரை ஏற்பட காரணம்:

தலைமுடிகளில் மெலனின் எனும் நிறமி அழிவதால், தலைமுடியின் இயல்பான நிறம் மாறி, தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது.

மெலனின் அழிவிற்கு காரணங்கள்தான், நாம் மேலே பகிர்ந்த அனைத்தும். நரைத்த முடிகளை வேருடன் பிடுங்குவதன் மூலமும், மெலனின் பாதித்த அணுக்கள் தலை முழுதும் பரவி, மற்ற முடிகளின் வேர்க்காலில் கலந்து நரையை தலையெங்கும் பரப்பிவிடுகிறது. இதனால்தான், பெரியோர் சொல்வார்கள், நரைத்த முடியை வேருடன் பிடுங்கக் கூடாது என்று.

நரைத்த ஒற்றை முடியைக் கண்டவுடன், வயது முதிர்ந்து மூப்பு வந்ததைப் போல பயந்து நடுங்கி, நரை முடியை வேரோடு பிடுங்கி விட்டால், அவை மீண்டும் வராது என்ற சுய தீர்மானத்தில் செய்யும் காரியம், அவர்களுக்கே, பாதிப்பைத் தந்து விடுகிறது

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..

தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

 கருமையாக மாறும் மாயம் :

கருமையாக மாறும் மாயம் :

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

இந்த எண்ணையை, வெயிலில் வைக்காமல், காய்ச்சியும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, எண்ணைகளை காய்ச்சி பயன்படுத்துவதைப் போல, சூரியப்புடம் எனும் முறையில் பயன்படுத்துவது, வேறொரு முறையாகும்.

கரும்பூலா மூலிகை :

கரும்பூலா மூலிகை :

அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது.

பொதுவாக கருப்பு நிறங்களில் கிடைக்கும் மூலிகைகளை உயர்வாகக் குறிப்பிடுவார்கள் முன்னோர்கள். கருந்துளசி, கருநொச்சி, கருநெல்லி போன்றவை மிகமிக அரிதானவை. அந்த வகையில் அரிதான ஒன்றுதான், கரும்பூலா மூலிகை.

கரும்பூலாவின் ஆற்றல் மற்றும் மருத்துவ தன்மைகள் கருதி, நகரங்களில் விதைகள் மூலம் கரும்பூலாவை, வளர்த்து வருகிறார்கள். கரும்பூலாவை, கிராமங்களில் புல்லாந்தி என்று அழைக்கிறார்கள்.

சரும வியாதிகள் :

சரும வியாதிகள் :

நரைத்த தலைமுடிகளை வளமாக்கி, கருப்பு நிறத்தை அடைய வைப்பது மட்டுமன்றி, கரும்பூலா பல அரிய மருத்துவ நன்மைகளையும் அளிக்க வல்லது.

கரும்பூலாவின் இலைகள், இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும், இலையை இட்டு காய்ச்சிய குடிநீர், சரும வியாதிகள், மூல பாதிப்புகள் மற்றும் பற்களின் பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

உடல் பொலிவாக்கும் :

உடல் பொலிவாக்கும் :

கரும்பூலாவின் பழங்கள் உடல் இரத்த நாளங்களை வலுவாக்கி, உடலை பொலிவாக்கும் தன்மை மிக்கது. கரும்பூலா வேர்களும், மருத்துவ பலன்கள் மிக்கவை.

கரும்பூலா, ஆன்மிகம் தவிர்த்த விஷயங்களிலும், அதிகஅளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகையாகும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use blackberry fruits to turn grey hair into black

Tips to use blackberry fruits to turn grey hair into black
Story first published: Wednesday, January 17, 2018, 11:34 [IST]
Desktop Bottom Promotion