For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்ங்க..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

|

தலையில் பொடுகு தொல்லை இருந்தால் அவ்வளவு தான். இது நமது முழு முடியையும் விழ வைத்து விடும். பலருக்கு மண்டை சொட்டையாக மாறியதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த பொடுகுதான். பொடுகு தொல்லையை ஒழிக்க பல வகைகள் இருந்தாலும் இஞ்சியை கொண்டு செய்யும் முறை மிகவும் அற்புதமாக வேலை செய்கிறது.

பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்ங்க..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

இஞ்சியின் ஆற்றல் பொடுகை முற்றிலுமாக போக்க கூடியதாம். மேலும், முடி உதிர்வையும் இது தடுக்க உதவும் என ஆய்வுகள் சொல்கிறது. எவ்வாறு இஞ்சியை கொண்டு பொடுகை போக்குவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்தி வாய்ந்த இஞ்சி..!

சக்தி வாய்ந்த இஞ்சி..!

இஞ்சியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வீட்டில் இருக்கும் ஒரு அற்புத மருந்து இந்த இஞ்சி தான். இதனை நாம் பல வகையான மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் பல நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

பயன்கள் பல...

பயன்கள் பல...

இதனால் எந்த அளவிற்கு நமது உடல் ஆரோக்கியம் அதிகம் பெறுகிறதோ, அதே போன்று தலை முடியின் ஆரோக்கியமும் அழகும் அதிகரிக்க செய்யும். குறிப்பாக தலையில் உருவாக கூடிய பொடுகை இது முற்றிலுமாக குறைக்க கூடும்.

எளிய வழி...

எளிய வழி...

பொடுகை முழுமையாக ஒழிக்க இந்த இஞ்சி வைத்தியம் ஒன்றே போதும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முடியில் உள்ள பொடுகை போக்கி விடலாம்.

தேவையானவை :-

இஞ்சி சாறு 2 ஸ்பூன்

நெல்லி சாறு அல்லது நெல்லி எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

இஞ்சியை நன்றாக அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு, நெல்லிக்காய் சாற்றையும் தனியாக எடுத்து கொள்ளவும். இவை இரண்டையும் கலந்து தலைக்கு தேய்க்கும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் பொடுகு தொல்லை பறந்து போய்விடும்.

MOST READ: இவற்றையெல்லாம் இன்றே நிறுத்தி கொள்ளுங்கள்..! இல்லையென்றால், உங்களுக்கு மரணம் கூட நேரலாம்..!

உடனடி தீர்வுக்கு...

உடனடி தீர்வுக்கு...

பொடுகை உடனே ஒழித்து கட்ட இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் போதும். உடனே பொடுகை போக்கி விடலாம்.

தேவையானவை :-

ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன்

இஞ்சி சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் இஞ்சியை சாறு போன்று எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலைக்கு தேய்த்து, 15 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இஞ்சி மற்றும் ஆமணக்கு உங்கள் பொடுகை ஒழிக்க ஒரு சிறந்த வழியாகும்.

கற்றாழை வைத்தியம்

கற்றாழை வைத்தியம்

பொடுகை விரைவில் விரட்டி அடிக்க இந்த குறிப்பு நன்றாக வேலை செய்யும்.

தேவையானவை :-

கற்றாழை ஜெல் 3 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

இஞ்சி சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கற்றாழை செல்லை தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் இஞ்சி சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலைக்கு தேய்க்கவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை சட்டென போக கூடும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ: நாம் பயந்து நடுங்கும் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படிப்பட்டவைனு தெரியுமா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Dandruff Using Ginger?

Follow these easy and simple beauty tips for hair to get rid out dandruff.
Story first published: Saturday, October 27, 2018, 16:42 [IST]
Desktop Bottom Promotion