For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் எத்தனை வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்..! அப்படி வெட்டுவதால் பலன் என்ன..?

|

ஒவ்வொருவருக்கும் முடி மிக முக்கியமான உறுப்பாகும். ஆனால், இன்று பலருக்கு முடியில் இருக்க கூடிய பிரச்சினைகளே அதிகம். முடியை பற்றிய கவலையில் மன உளைச்சலுக்கு ஆளானோர் பலர். முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, முடி உடைவு இப்படி ஏராளமான பிரச்சினைகள் முடியில் உள்ளன.

ஆண்கள் எத்தனை வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்..! அப்படி வெட்டுவதால் பலன் என்ன..?

முடி பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்த முடி வெட்டுதலுக்கும் பங்குண்டு. நீங்கள் ஒரு சில கால இடைவெளியில் முடியை வெட்டி வந்தால், உங்களின் முடி பிரச்சினைகள் குணமாக வாய்ப்புகள் உள்ளன என ஆய்வுகள் சொல்கின்றது. இது எப்படி சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடியிலும் பிரச்சினையா..?

முடியிலும் பிரச்சினையா..?

இப்போது உள்ள வாழ்க்கை பிரச்சினைகளை விட முடி சார்ந்த பிரச்சினைகள் தான் அதிகம். அதிலும் இதை மிக பெரிய சந்தையாகவே பல கார்ப்பரேட்டுகள் மாற்றி விட்டன. முடியை வைத்து செய்யும் வியாபாரங்களும் கொடி கட்டி பறக்கிறது. இந்த முடி பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்.

சுருட்டை முடியா..?

சுருட்டை முடியா..?

உங்களின் முடி சுருட்டை சுருட்டையாகவும், அடர்த்தியாகவும் உள்ளதா..? அப்போ நீங்கள் 6 முதல் 8 வாரத்திற்கு ஒரு முறை முடியை வெட்ட வேண்டும். இல்லையென்றால் முடி உடைய ஆரம்பித்து விடும். மேலும், உங்களுக்கு சீக்கிரமாகவே முடி வளர்ந்து விட்டால் இந்த கால இடைவெளிக்கு முன்னரே முடி வெட்டலாம்.

நேரான முடிகளா..?

நேரான முடிகளா..?

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே. நீங்கள் 5-6 வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்டலாம். இந்த வகை முடியினருக்கு முடியில் வெடிப்பு இருக்க கூடும். ஆதலால் இந்த கால இடைவெளி முக்கியம்.

நீளமான முடிகளா..?

நீளமான முடிகளா..?

இந்த வகை காரர்களுக்கு முடி அதிக நீளமாகவும் பல லேயர்களும் இருக்கும். இவர்கள் 6 முதல் 8 வார கால இடைவெளியில் முடியை வெட்டலாம். மேலும், இவர்கள் சிறிதாக முடி வெட்டினால் இதன் வளர்ச்சி விரைவிலே அதிகரிக்க கூடும்.

MOST READ: காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்ய கூடாது..! மீறி செய்தால் ஆபத்து அதிகம்...

சிறிய முடியா..?

சிறிய முடியா..?

உங்களின் முடி எப்போ வெட்டினாலும் சிறிய அளவிலே வளர்கிறதென்றால் நீங்கள் இந்த கால இடைவெளியில் முடி வெட்ட வேண்டும். குறிப்பாக 4 வாரத்திற்கு 1 முறை இவர்கள் முடியை வெட்ட வேண்டும். அப்போதுதான், முடியின் வளர்ச்சி அதிகரிக்க செய்யும்.

பாப் கட்டிங்கா..?

பாப் கட்டிங்கா..?

சில ஆண்கள் அல்லது பெண்கள் டீ.ர்-ரை போன்ற பாப் கட்டிங்க் செய்து கொள்வார்கள். இவர்கள் 6 வாரத்திற்கு ஒரு முறை முடியை வெட்டலாம். மேலும், இந்த இடைவெளி முடியின் அடர்த்தியை அதிகரித்து, அழகான பொலிவை தரும்.

அதிகம் பாதிக்கபட்ட முடியா..?

அதிகம் பாதிக்கபட்ட முடியா..?

கெமிக்கல் பொருட்களின் பயன்பட்டால் அதிகமாக உங்கள் முடி சிதைவடைந்துள்ளதா..? அப்போ நீங்க 4 வாரத்திற்கு ஒரு முறை உங்களின் முடியை வெட்ட வேண்டும். அப்போதுதான் உங்களின் முடி விரைவாகவே குணமாகும். அத்துடன் முடியின் வேரையும் இது சரி செய்து விடும்.

மெல்லிய முடியா..?

மெல்லிய முடியா..?

சிலருக்கு முடி அதிகமாக கொட்டியதாலும், மரபு ரீதியாகவும் முடி மெல்லிதாக இருக்க கூடும். இந்த பிரச்சினையை தீர்க்க முடியை இந்த இடைவெளியில் வெட்டினாலே சிறந்தது. 4 முதல் 6 வார இடைவெளியில் வெட்டினால் மெல்லிய முடி அடர்த்தியாக தெரிய கூடும்.

இது போன்ற புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவருடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ:டாக்டர் கிட்ட போகறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமாம்..! ஏன்னு தெரியுமா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Often Should You Get A Haircut?

This is the article about, that how often should you get a haircut.
Story first published: Tuesday, December 18, 2018, 17:39 [IST]
Desktop Bottom Promotion