For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் வருவதுபோல் தாடியிலும் பேன் வருமா? இரண்டு பேன்களும் ஒன்றா? வேறா?

தலைமுடி பிரச்சினை பற்றியும் குறிப்பாக, தாடியில் பேன் வருவது குறித்தும் இங்கு விவாதிக்க இருக்கிறோம்.

|

ஆண்களுக்கு தாடி ஒரு வித அழகைக் கொடுக்கிறது என்று ஒரு சிலர் கூறுவார்கள். காதல் தோல்வியின் அடையாளமாக பார்க்கப்படுவது தாடி என்று வேறு ஒரு சிலர் கூறுகின்றனர்.

Can You Get Lice in Your Beard?

தாடி வைத்துக் கொள்வதில் பல்வேறு அபிப்ப்ராயங்கள் இருக்கவே செய்கிறது. எது எப்படி இருந்தாலும், ஒரு சிலருக்கு ஷேவ் செய்வதில் சோம்பேறித்தனம் காரணமாக தாடி வளர்ப்பார்கள். அவர்களுக்கு தாடியில் பேன் இருப்பதற்கான அனுபவம் கூட இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாடியில் பேன்

தாடியில் பேன்

பெடிகுலஸ் ஹ்யுமனஸ் கபிடிஸ் என்னும் வகை பேன் உச்சந்தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி முட்டையிடும் பேன் வகை ஆகும். இது பொதுவாக தலையில் காணப்படும் பேன் வகையாகும். இந்த வகை பேன் தாடியில் வளர்வதில்லை. முகத்தில் இருக்கும் முடி மிகவும் சொரசொரப்பாக இருப்பதும், முடி வளர்வதற்கான இடைவெளி அதிகமாக இருப்பதும் இந்த வகை பேன் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

ஆனால் க்ராப் பேன் என்னும் வகை பேன்கள் கழுத்து பகுதி போன்ற இடங்களில் அல்லது சுருள் முடி இருக்கும் இடத்தில வளர்கின்றன. கண் புருவம், மார்பு முடி, அக்குள் பகுதி, கண் ரப்பை, போன்ற இடங்களில் கூட இத்தகைய பேன்களை காண முடியும். ஆனால் இதன் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

MOST READ: மாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்னென்ன அறிகுறிகள் வரும்?

உற்பத்தி

உற்பத்தி

இத்தகைய பேன்கள் கிராப் (Crab) என்று அழைக்கப்படுகின்றன. இதன் பாதிப்பு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறிய விஷயமாக இருப்பதில்லை. 2 மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தில் இருக்கும் இந்த பூச்சிகள் ஒப்பீட்டளவில் பெரிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன, இவை மனித உடலில் முட்டை இடுவதற்கு உதவியாக உள்ளன. அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 3மில்லியன் பேன்கள் முட்டை இடுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகின்றது.

எப்படி பரவும்?

எப்படி பரவும்?

உடல் தொடர்பு வழியாக, உடலுறவு, பால் புகட்டுதல், ஒரு துண்டு அல்லது போர்வை போன்றவற்றை பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலமாக இது பரவுகிறது. இவை முடியில் வந்து படிந்தவுடன் அதனைப் போக்குவது மிகவும் கடினமாகிறது.

MOST READ: உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க...

எப்படி உருவாகிறது?

எப்படி உருவாகிறது?

வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் முட்டை இடுவது பேன்களுக்கு மிகவும் இஷ்டம். இந்த வெப்பமயமான இடத்தில் அதன் உணவான இரத்தம் எளிதில் கிடைக்கும். மக்களுக்கு எக்சிமா அல்லது அதிகமான அரிப்பு ஏற்படும் வரை பேன்கள் இருப்பதன் அறிகுறி தென்படுவதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித ஒவ்வாமையை பேன்கள் உண்டாக்குகின்றன.

தாடியில் இருந்து பேன்களை அகற்றுவது எப்படி?

தாடியில் இருந்து பேன்களை அகற்றுவது எப்படி?

பேன்கள் மற்றும் அதன் முட்டையை தாடியில் இருந்து அகற்ற மெல்லிய பற்களைக் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். மிக அதிக பாதிப்பு இருந்தால், ஒரு சதவிகிதம் பெர்மேத்ரின், அல்லது பைத்ரின்ஸ், மற்றும் பைபரான்ய்ல் படாக்சைடு உள்ள மருந்து, லோஷன் அல்லது ஷாம்பூ பயன்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த ரசாயனம் உங்கள் முகத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். குறிப்பாக இத்தகைய பொருட்களை உங்கள் உதடு, கண்கள் போன்ற பகுதிகளுக்கு அருகில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று LiceSquad.com,.

MOST READ: பேக்கிங் சோடாவை வைத்து எப்படி ஈஸியா கருவளையத்தை போக்கலாம்?

சீப்பு - எண்ணெய் குளியல்

சீப்பு - எண்ணெய் குளியல்

தாடிகளில் உள்ள பேன்களைப் போக்க மெல்லிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தலாம் அல்லது தாடியை ஷேவ் செய்து விடலாம் என்று அறிவுறுத்துகிறார் முக்கி. என்சைம் ஷாம்பூ, மினரல் கண்டிஷனர், எண்ணெய் குளியல் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் சிறந்த தீர்வுகள் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார். சந்தையில் விற்கும் பொருட்களை பயன்படுத்துவதை விட இவை மேலானவை என்று கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can You Get Lice in Your Beard?

here we are discussing about hair care problems particularly lice problems on beard.
Story first published: Wednesday, November 14, 2018, 11:04 [IST]
Desktop Bottom Promotion