For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்டிஷ்னர் எதுவும் போடாமலே தலைமுடி பட்டுபோல பளபளக்கணுமா? அப்போ உடனே இத அப்ளை பண்ணுங்க...

|

புராண காலத்திலிருந்து இப்போது வரை கூந்தலுக்கு தனித்துவமான இடம் இருக்கிறது. சிவபெருமான் கூட மயிரை மையமாக வைத்துத்தான் திருவிளையாடல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

5 Amazing Hacks To Get Smooth Hair Without Using Conditioner

அதற்காக நெற்றிக்கண்ணால் நக்கீரனைப் பொசுக்கவும் அவர் தயங்கவில்லை. ஆதலால் தலைமுடி உங்கள் கபாலங்களில் இருந்து காலியாகிக் கொண்டிருக்கிறதா ? திருமணச் சந்தைகளில் சீண்டுவார் இல்லையா? அட பாவமே....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பளபளப்பான தலைமுடி

பளபளப்பான தலைமுடி

அழகின் தவிர்க்க முடியாத அங்கமாவிவிட்ட தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டாமா?. கண்டிஷனர்கள் இல்லாமலேயே உங்கள் கூந்தலை மெருகேற்ற முடியும் தெரியுமா?. ஹேர் மாஸ்க், ஹாட் ஆயில் மசாஜ், ஷாம்பூ ஆகியவை முடியை முறியாமலும், உதிராமலும் பேணிக்காக்கும் கேடயங்கள். கீழே கூறியுள்ள 5 வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள். பிறகு லட்சுமி என்ன, மகாலட்சுமியாவே அவதாரம் எடுப்பீங்க. ஏனெனில் தேவ பத்தினிகளுக்கு முடியலங்காரம் முக்கியமான ஒன்று.

MOST READ: வேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது...

கிளன்சர் பயன்பாடு

கிளன்சர் பயன்பாடு

தலைமுடியை பாதுகாத்துக் கொள்வதற்கு பகீரத பிரயத்தனங்களை எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. முடியின் தன்மைக்கு ஒத்துப்போகும் ஷாம்பூவை தேர்வு செய்து கொள்வது அவசியம். தலைமுடியை மென்மையாக்குவதற்கும், மெருகேற்றுவதற்கும் தகுந்த கிளீன்சர்களை பயன்படுத்தினால் போதுமானது.

ஊட்டச்சத்து என்ன வழி

ஊட்டச்சத்து என்ன வழி

உடல் வளர்ச்சிக்கு எப்படி ஊட்டச்சத்து தேவையோ அதேபோல முடி வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து அவசியமானதாகும். நியூட்ரியன்ஸ் மற்றும் விட்டமின் அடங்கிய ஹேர்பேக்கை பயன்படுத்த தொடங்குங்கள். வலிமையாகவும், நீளமாகவும் முடி வளர, வீட்டில் தயாரிக்கும் கலவைகள் அளப்பரிய பலன்களை வழங்கக்கூடியது.

MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

ஒரு டீ ஸ்பூன் தேன், 1 கனிந்த வாழைப்பழம், 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் கனிந்த வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும், பின்னர் ஆலிவ் ஆயிலை விட்டு மீண்டும் கலக்கவும். தொடர்ந்து சில சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பசையாக வரும் வரை கிண்டவும். அந்தப் பசையை முடியின் வேரில் சாரும்வரை தடவவும். அரைமணி நேரத்துக்குப் பிறகு மென்மையான ஷாம்பூ போட்டு முடியை நன்றாக கழுவவும். காற்றில் உலர்த்திய பின் உங்கள் கூந்தல் புதிய பொலிவு பெறும்.

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

நாள்தோறும் முடியை வாரி பராமரிக்கும் பட்சத்தில் வலிமையான, ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும். தவறும்பட்சத்தில் விளைவுகள் விரும்பத்துக்கு எதிராக அமையும். முடியின் வறட்சியைத் தடுக்க சரியான ஷாம்பூ உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்வது அவசியம். தலை முடியை இறுக்காமல் நெகிழுமாறும், காற்றை உள்வாங்க வசதியாகவும் விடுவிக்க வேண்டும். அன்றாடம் கபாலத்தை காயப்படுத்தாத சீப்பை வைத்து வாரிவிட வேண்டும்.

MOST READ: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

தரமான தயாரிப்புகளின் தேர்வு

தரமான தயாரிப்புகளின் தேர்வு

சந்தையில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் வாங்கி உபயோகப்படுத்தினால் சருமமும், தலைமுடியும் வீணாகிவிடும். ஆதலால் தரமான, தலைமுடிக்கு பொருத்தமான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இதனால் முடி வளர்ச்சியில் நல்ல பலனை பெற முடியும். சுருள் முடி கொண்டவர்கள் பிரிஷ் ப்ரீ தயாரிப்புகளையும், வறண்ட முடியை பெற்றவர்கள், ஈரப்பதத்தை பேணும் ஷாம்பூவையும் உபயோகப்படுத்த வேண்டும்

இறுக்கத்தை தளர்த்தல்

இறுக்கத்தை தளர்த்தல்

தூக்கத்தில் உடல் எந்த அளவுக்கு ஆழ்ந்த விடுதலையை விரும்புகிறதோ, அதேபோல தலைமுடியும் இரவு நேரத்தில் இறுக்கமில்லாமல் இருப்பது அவசியம். தலைமுடி முறிவதைத் தடுக்க ஈரமான தலையுடன், தூங்குவதை தவிர்த்தல் வேண்டும். அதேபோல தலைமுடியை தளர்த்திக் கொள்ளாவிட்டால் முடி உதிர்வதை தவிர்க்க இயலாது. தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்கக்கூடாது. முடியை சில்க் துணியில் மென்மையாக தலையில் கட்டிக்கொண்டு படுக்கைக்குச் செல்லலாம். இதனை உறுதி செய்து கொண்டால் உங்கள் தலைமுடிக்கு எந்த பாதிப்பும் நேர வாய்ப்பில்லை..

MOST READ: உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Amazing Hacks To Get Smooth Hair Without Using Conditioner

Listed below are five amazing hacks to get smooth and shiny hair without using a hair conditioner.
Story first published: Monday, October 15, 2018, 10:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more