For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு வெள்ளை முடி வருவதற்கு இந்த 11 செயல்கள்தான் காரணமாம்..!

|

பொதுவாக ஆண்கள் என்றாலும் , பெண்கள் என்றாலும் முடியின் அழகை மிகவும் விரும்புவார்கள். எதர்ச்சியாக கண்ணாடி பார்க்கும் போதும், முடியை கோதிவிட்டு "நீ எவ்வளோ அழகு" என்று சொல்லி கொள்வது இயல்பான ஒன்றாகும். இத்தகைய ரசிப்பிற்குரிய முடியில் ஏதேனும் பிரச்சினை என்றால் அவ்வளவுதான்...! நாம் மிகவும் வேதனைக்குள்ளாவோம். பெண்களுக்கு முடியில் பிரச்சினைகள் ஏற்பட பல காரணிகள் இருக்கலாம்.

11 Bad Habits That Cause Gray Hair In Men

அதே போன்று ஆண்களுக்கு முடி உதிர வேறு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் நாம் செய்ய கூடிய தின செயல்கள் தான் நம் முடி பிரச்சினைக்கு மூல காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில் இளம் வயதில் ஏற்பட கூடிய நரைமுடி எந்தெந்த பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகை கூட்டும் முடி..!

அழகை கூட்டும் முடி..!

முடிகள் தான் ஒருவருக்கு அதிக அழகை கூட்டுகிறது. முடி இல்லையேல் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. எந்த ஒரு உயிரினத்திற்கும் இது இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக மனிதர்கள் அழகிற்கு பெரிதாக முக்கியதுவம் கொடுப்பது இயல்பே. முடிகள் உதிர்ந்தாலும் பிரச்சினை, அவை வெள்ளையானாலும் பிரச்சினைதான்.

தைரொய்ட் அளவு..!

தைரொய்ட் அளவு..!

பொதுவாக நாம் செய்யும் ஒரு சில முக்கிய செயல்கள்தான் நம் ஹார்மோன்களை சமநிலையில் வைக்காமல் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த தைராட் பிரச்சினையும். உங்களுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால் முடி இளமையிலே நரைத்து, உதிர தொடங்கும்.

அதிக உப்பு பழக்கமா..?

அதிக உப்பு பழக்கமா..?

நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்து கொண்டால், அது உங்கள் முடியை பெரிதும் பாதிக்குமாம். ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். இவற்றிற்கு அதிகமாக சேர்த்து கொண்டால், இளநரைகள் உருவாவதற்கு முதன்மையான காரணமாக மாறி விடும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

உங்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் இருக்கிறதா...? எதை கண்டாலும் எரிச்சல் அடைகிறீர்களா..? அப்போது உங்களுக்குத்தான் விரைவிலேயே முடிகள் நரைத்து விடும். கருமையான முடிகளை வெள்ளையாக மாற்ற கூடிய தன்மை இந்த மன அழுத்தத்திற்கு உள்ளது. எனவே, மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.

முடிக்கு எண்ணெய் வைக்கவில்லையா...?

முடிக்கு எண்ணெய் வைக்கவில்லையா...?

நம்மில் பலர் சில முக்கிய பழக்க வழக்கங்களை மறக்கடித்தே வருகின்றோம். அந்த வகையில் தலை முடிக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் முற்றிலுமாக மாறி விட்டது. தலையில் உள்ள முடிக்கு எண்ணெய் கட்டாயம் தேவைப்படும். இவை இல்லையென்றால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வறண்டு போகும். குறிப்பாக இளநரைகள் வர இதுவே முக்கிய காரணமாம்.

குளிர்பானங்கள் தரும் வெள்ளை..!

குளிர்பானங்கள் தரும் வெள்ளை..!

பொதுவாக குளிர்பானங்கள் உடல் நலத்தை முற்றிலுமாக பாதிக்க கூடும் அளவிற்கு பல்வேறு தீமைகளை கொண்டது. இவற்றில் அதிக அளவில் செயற்கை சர்க்கரைகளை சேர்ப்பதால் கொழுப்புக்களை அதிகரிக்க செய்யும். அத்துடன், வெள்ளை முடி உருவாவதற்கும் வழி வகிக்கும்.

இறைச்சி பழக்கம்..!

இறைச்சி பழக்கம்..!

உணவில் அதிகமாக விலங்குகளின் இறைச்சியை சேர்த்து கொண்டால் அவை பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவில் புரதம் இருப்பதால், விரைவிலேயே ஜீரணமாகாமல் போய்விடும். எனவே இவை யூரிக் அமிலத்தை உருவாக்க கூடும். இந்த அமிலம் உங்கள் முடியை நரையாக மாற்றும் தன்மை கொண்டது.

ஊட்டசத்துக்கள் அற்ற உணவுகள்..!

ஊட்டசத்துக்கள் அற்ற உணவுகள்..!

உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் முடியின் வளர்ச்சி நின்று விடும். குறிப்பாக வைட்டமின் பி6, பி12, பயோட்டின், வைட்டமின் ஈ, ஏ போன்றவை நரை முடியிற்கு முதல் காரணாமாக இருக்கிறது. இந்த ஊட்டசத்து குறைபாடு இளம் வயதிலே நரையை ஏற்படுத்தி, முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுமாம்.

புகை முடிக்கு பகை..!

புகை முடிக்கு பகை..!

புகை பழக்கம் அதிகம் உள்ளவர்கள் விரைவிலேயே நரை முடிகளை பெறுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது. இவற்றில் carcinogen என்ற புற்றுநோயை ஏற்படுத்த கூடிய மூல பொருட்கள் இருக்கிறது. குறிப்பாக முடியின் நரைப்பு தன்மைக்கு இந்த புகை பழக்கம்தான் முக்கிய காரணமாகும்.

வேதி வினைகள்..!

வேதி வினைகள்..!

முடியின் முழு ஆரோக்கியத்தையும் கெடுப்பது இந்த வேதி பொருட்கள்தான். தேவையற்ற ஷாம்புகள், டைகள், எண்ணெய்கள், ஜெல் போன்றவை முடியின் முழு நலனையும் கெடுத்து விடும். இவற்றில் உள்ள Hydrogen peroxide மிக கொடிய வேதி பொருளாகும். இவைதான் முடி உதிர்வுக்கும், வெள்ளை முடியிற்கும் காரணமாகும்.

இனிப்பு தரும் பாதிப்பு..!

இனிப்பு தரும் பாதிப்பு..!

உங்கள் உணவில் அதிகம் இனிப்பு இருந்தால், அவை கட்டாயம் முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். முடிகள் இளமையிலே நரைத்து போக இந்த இனிப்புகளும் முக்கிய காரணமாகும். குறிப்பாக இவற்றில் செயற்கை சர்க்கரை, வேதி பொருட்கள் சேர்ப்பதால் வெள்ளை முடிகளை உருவாக்க கூடும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Bad Habits That Cause Gray Hair In Men

As a person ages the content of melanin generation weakens and hence the hair looses its dark colour, and becomes colourless or gray.
Desktop Bottom Promotion