முடி உதிர்தலை தடுக்க நீங்கள் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

தலைமுடியின் வளர்ச்சிக்கு குறுக்கு வழியெல்லாம் எதுவுமே இல்லை. தலை முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்தால் மட்டுமே அவை உதிராமல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

Vitamins for hair fall

ஆரோக்கியமானதாகவும், முடி கொட்டாமல் இருக்க, விட்டமின் ஏ,பி, சி,டி, இ போன்ற விட்டமின் சத்துக்கள் அவசியம். வெளியில் என்ன எண்ணெய் தேய்த்தாலும் முடிக்கான போஷாக்கு அதில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் ஏ :

விட்டமின் ஏ :

முடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ. இது தலையில் இருக்கும் சீபம் உற்பத்தியை துரிதப்படுத்தும். சிபாசியஸ் க்ளாண்ட்டில் தான் சீபம் உற்பத்தியாகும். இவை நம் தலையின் சருமத்தில் அதாவது தலைமுடி வளரும் இடத்தில் இருக்கும். இவை வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இதற்கு ஆரஞ்சுப் பழம், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், ப்ரோக்கோலி,முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

விட்டமின் பி :

விட்டமின் பி :

முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விட்டமின் பி குறைபாடு தான். குழந்தைப் பருவத்தில் பி12 பற்றாக்குறை இருந்தால் நரைமுடி வர வாய்ப்புகளும் உண்டு. இதனைத் தவிர்க்க மீன்,ஆட்டுக்கறி,பால், முட்டை போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்கள், தக்காளி,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்,பெர்ரீ பழங்கள் போன்றவற்றில் விட்டமின் சி கிடைக்கும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.

விட்டமின் டி :

விட்டமின் டி :

செல்களின் வளர்ச்சிக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானது. விலங்குகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் விட்டமின் டி குறைபாடுடைய விலங்குகளுக்கு முடிகளின் ஆரோக்கியம் மிகவும் குறைவாக காணப்பட்டது. தற்போது மனிதர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.

மாட்டுக்கறி, மீன்,சீஸ் போன்றவற்றில் விட்டமின் டி இருக்கிறது.

விட்டமின் இ :

விட்டமின் இ :

நாம் பயன்படுத்துகிற காஸ்மெட்டிக்ஸ் ஐட்டம்ஸ் பலவற்றிலும் விட்டமின் இ கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்கும். மற்ற பாதிப்புகளை விட, சூரிய ஒளி தாக்குதலினால் பாதிப்படையும் போது, ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு பிரச்சனை எதிர்கொள்கிறவர்களுக்கு விட்டமின் இ மிகவும் அவசியமானது. நட்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகளில் விட்டமின் இ இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vitamins for hair fall

Vitamins for hair fall
Story first published: Saturday, August 26, 2017, 13:38 [IST]
Subscribe Newsletter