Latest Updates
-
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கப்போகுதாம் -
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க -
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம்
ஹேர் அயர்னிங் செய்யும் போது செய்யக்கூடாதவை
முடியின் வடிவத்தை மாற்றிடும் ஹேர் அயர்னிங்கை பலரும் விரும்பிச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.
கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் வீட்டிலேயே செய்துவிடலாம். அப்படிச் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி காண்போம்.

முடி அதிகமாய் உதிரும் :
ஒருதடவை ஹேர் அயர்னிங் செய்தால் அடுத்து வரும் நாட்களில் முடி அதிமாய் உதிரும். தலை அரிப்பு பொடுகுத் தொல்லை, அதிக வறட்சி ஆகியவைகள் உங்கள் கூந்தலில் ஏற்படும்.
அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் சரியான முறையில் ஹேர் அயர்னின் செய்யவில்லை என்று அர்த்தம்.

அவசரம் கூடாது.
கடைசி நேரத்தில் அவசரமாக தலைக்கு குளித்தபின் ஈரத்துடனே ஹேர் அயர்னிங் செய்யாதீர்கள். அதனை சரியாக காய விடாமல் ஹேர் அயர்னிங் செய்வது மிகவும் தவறு.

வலுவிலக்கும் தலைமுடி :
கூந்தலில் ஈரம் பட்டவுடன் கூந்தல் மிகவும் மென்மையாக மாறிவிடும். அந்த சமயத்தில் அதிக வெப்பம் கொண்ட கருவியினை உபயோகப்படுத்தினால்,
தலைமுடி வலுவிழந்து மோசமான விளைவை தரும். அதிகமாய் முடி உதிர்தல் ஏற்படும்.

வெப்ப நிலை
ஹேர் அயர்னிங் கருவியில் 300 டிகிரிக்கு மேல் வெப்ப நிலையை அமைக்கக் கூடாது. கூந்தலுக்கு இது மிகவும் கேடு தரும். மிக அதிக வெப்பம், முடியினால் தாங்க இயலாது. வறட்சி ஏற்பட்டு கூந்தலை பாழ்படுத்திவிடும்.

கருவியை சுத்தம் செய்திடுங்கள் :
ஹேர் அயர்னிங் செய்யும்போது கருவியில் அழுக்கு, தூசு, கூந்தலிலிருந்து வரும் எண்ணெய், ஆகியவை உள்ளே தங்கியிருக்கும். இதனை அப்படியே மறுமுறை உபயோகப்படுத்தும்போது கூந்தலில் பொடுகுத் தொல்லை, வறட்சி தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும்.
இந்த கருவிக்கென்ற பிரத்யோகமாக கிடைக்கும் ஆயிலைக் கொண்டு ஹேர் அயர்னிங் கருவியை கண்டிப்பாக சுத்தப்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications
