For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகு அதிகமா இருக்கா? இதோ சீக்கிரம் குணமாக கைவைத்தியம்!!

தலையிலுள்ள பொடுகைப் போக்க எளிய அழகுக் குறிப்புகளிய இன்டஹ் கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

அலுவலகத்தில் பார்ட்டி. நேர்த்தியாக உடையணிந்து, அதற்கேற்ற முறையில் அழகாக தலையை அலங்கரித்து, மேட்சிங் ஜுவெல்லரி அணிந்து கிளம்பும் போது, தோளில் ஏதோ வெள்ளை துகள்கள். வேறு ஒன்று இல்லை; பொடுகுதான். அதனை பார்த்தவுடன் உங்கள் அழகில் ஒரு அவ நம்பிக்கை உருவாவது நிச்சயம்.

simple remedies to treat dandruff

தலை வறண்டு காணப்படும்போது பொடுகு தோன்றும் . அல்லது தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும்போது பொடுகு தோன்றும். இதனை நீக்க ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு பயன்படுத்தலாம். அனால் அவற்றை பயன்படுத்தும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள இரசாயன பொருட்களால் தலை முடிக்கு பல்வேறு பிரச்சனைகள் தோன்றும்.

பொடுகை போக்க எளிதான சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி நிச்சயமாக போடு தொல்லையை போக்கலாம். வாருங்கள், அவற்றை பற்ற அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆ ப்பிள் சீடர் வினிகர்:

ஆ ப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர், இரண்டு வகையில் தலை முடி பராமரிப்பில் உதவுகிறது. ஒன்று, பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சை தொற்றுக்களை அழிக்கிறது. மற்றொன்று, தலையில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றுகிறது. இதனால் தலை முடி பளபளப்பாக மாறுகிறது. ஆப்பிள் சீடர் வினீகருடன் சம அளவு வெந்நீர் சேர்த்து கலக்கவும். ஷாம்புவால் தலையை அலசியவுடன் இந்த கலவையைக்கொண்டு தலையை அலசவும். 5 நிமிடம் கழித்து வெந்நீரால் மறுபடி தலையை அலசவும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

இரசாயனக் கலவையில்லாமல் பொடுகை பூக்க மற்றொரு எளிதான வழி எலுமிச்சை சாறு . எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் , பூஞ்சையை அகற்றி இறந்த செல்களை நீக்குகிறது. எலுமிச்சை சாறை தண்ணீர் சேர்க்காமல் தலையில் தடவி 2 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு இன்னும் கொஞ்சம் எலுமிச்சை சாறில் தண்ணீர் சேர்த்து அந்த நீரால் தலையை அலசவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா, ஒரு சிறந்த எஸ்போலியன்டாக செயல்பட்டு, பூஞ்சையை வெளியேற்றுகிறது. இது சிறந்த முறையில் தலையில் உள்ள பொடுகை போக்குகிறது. 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 கப் தண்ணீரை சேர்த்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு தலையை அலசவும். இதனை தினமும்செய்து வந்தால் பொடுகு விரைவில் மறையும்.

 வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலையை பயன்படுத்தி பொடுகை எளிமையாக போக்கலாம். அவற்றில் பூஞ்சையை அழிக்கும் தன்மை உண்டு. மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பையும் தடுக்கிறது. இவை இரண்டும் பொடுகு ஏற்பட முக்கிய காரணங்களாகும். 2 கை நிறைய வேப்பிலையை எடுத்து 4 கப் வெந்நீரில் இரவு முழுதும் ஊற வைக்கவும். மறுநாள் அந்த அந்த இலையை வடிகட்டி அந்த நீரை மட்டும் தலையை அலச பயன்படுத்தவும். தொடர்ந்து இதனை சில முறை செய்தால் பொடுகு தொல்லை அறவே நீங்கும்.

 டீ ட்ரீ எண்ணெய்:

டீ ட்ரீ எண்ணெய்:

எண்ணெய்களில் சில வகை எண்ணெய், பொடுகு தொல்லைக்கு சிறந்த தீர்வை தருகிறது. அவற்றுள் முக்கியமானது டீ ட்ரீ எண்ணெய். இந்த ஈனிக்கு பூஞ்சைகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது. வறண்ட மற்றும் அரிக்கும் முடிக்கு நல்ல பொலிவை தர இந்த எண்ணெய் பயன்படுகிறது. டீ ட்ரீ எண்ணெய்யை ஒரு கப் வெந்நீருடன் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். ஸ்பிரே பாட்டில் வழியாக இந்த கலவையை தலையில் தெளித்து நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு காற்றில் முடியை காய விடவும்.

 உப்பு:

உப்பு:

உப்பு சிறிதளவு எடுத்து உங்கள் தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் நீக்கப்படும். பொடுகை போக்க வேறு இயற்கை வஹிமுறைகளை பின்பற்றுவதற்கு முதல் படியாக இதனை செய்வதால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு:

பூண்டு:

பூண்டை தலையில் தடவவும் போது அதன் வாசனை பாலார்க்கும் பிடிக்காது. ஆனால் பூண்டிற்கு பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உண்டு. விரைவில் பொடுகை குறைக்கும். 2-3 பற்கள் பூண்டை எடுத்து மசித்து தண்ணீரில் கலந்து தலையில் தெளித்து மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடம் கழித்து சாதாரண ஷாம்ப்பூ கொண்டு தலையை அலசவும்.

கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல், தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் தலையில் அரிப்பு நீங்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூவால் தலையை அலசவும்.

சூரிய ஒளி :

சூரிய ஒளி :

சூரிய ஒளி தலையில் படுவதால் பொடுகு குறைகிறதென்று பலரும் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளி, தலை முடியில் உள்ள அதிகமான எண்ணெய்த்தன்மையை உறிஞ்சி தலை முடியை பலமாக்குகிறது.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்:

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்:

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கொடு ஒரு மாஸ்க் செய்வதன் மூலம் பொடுகை விரட்டலாம். தேங்காய் எண்ணெய் பொடுகை ஒழிக்க ஒரு சிறந்த தீர்வாகும். தேன், பூஞ்சையை அழிக்க உதவும். 2 ஸ்பூன் தேங்காய் என்ன மற்றும் 2 ஸ்பூ தேனை ஒன்றாக கலந்து தலையில் தடவவும். மென்மையாக மசாஜ் செய்து ½ மணி நேரம் நன்றாக ஊறியவுடன் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

இவற்றில் எதாவது ஒரு முறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் பொடுகு தொந்தரவு எளிதில் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

simple remedies to treat dandruff

simple remedies to treat dandruff
Story first published: Saturday, October 21, 2017, 14:45 [IST]
Desktop Bottom Promotion