ஷாருக்கானின் ஸ்டைலான முடியின் இரகசியம் என்ன தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

உலக மக்களால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ஷாருக்கான், மில்லியன் கணக்கான மக்களை தனது நடிப்பு திறனாலும், ஸ்டைலான தோற்றத்தாலும் ஈர்த்து வைத்திருக்கிறார்.

Shah Rukh Khan Hair Care Secret

இவரது ஸ்டைலான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது இவரது மினுமினுப்பான, ஷைனிங்கான, ஆரோக்கியமான முடி தான். இவர் தனது முடியை பராமரிக்க எந்த ஒரு கெமிக்கல் பொருட்களையும் உபயோகிப்பதில்லை.

இந்த பகுதியில் ஷாருக்கானின் ஐக்கானாக திகழும் அவரது அழகிய மற்றும் ஆரோக்கியமான முடியின் இரகசியம் என்ன என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாழாக்கும் கெமிக்கல்:

பாழாக்கும் கெமிக்கல்:

நான் நிறைய கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகிப்பதால் தான் நமது முடி பெரும்பாலும் சேதமடைகிறது. ஏன் நாம் இன்று தலைக்கு உபயோகிக்கும் தண்ணீரில் கூட அதிகபட்சமான கெமிக்கல்கள் அடங்கியுள்ளன.

வித்தியாசமான ஸ்டைல்:

வித்தியாசமான ஸ்டைல்:

ஷாருக்கான் தனது படங்களில் தனது தலைமுடிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கிறார். ஒரே படத்தில் பல வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களில் தோற்றமளிப்பார். இதற்கு அவரது முடி வலிமையாகவும், நீளமாகவும் இருப்பது தான் காரணமாகும்.

ஷாருக்கான் ஹேர் ஸ்டைல் வேணுமா?

ஷாருக்கான் ஹேர் ஸ்டைல் வேணுமா?

நீங்கள் ஷாருக்கான் போன்று ஹேர் ஸ்டைல் செய்து கொள்ள விரும்பினால், கெமிக்கல்களை தலைமுடிக்கு உபயோகித்து தலைமுடியின் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அவர் இயற்கையான பொருட்களை கொண்டு, குளிர்ந்த நீரில் தான் குளிப்பாராம்.

சீகைக்காய் குளியல்

சீகைக்காய் குளியல்

சீகைக்காய் பல இயற்கையான ஷாம்புகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. இது முடியின் ஆரோக்கியத்திற்காக காலம் காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் தேவைக்கேற்ப சீகைக்காயுடன், பூந்திக்கொட்டையை அரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

மிதமான சூடுள்ள நீரில் உங்களது முடியின் நீளத்திற்கேற்ப சீகைக்காயை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு பூந்திக்கொட்டை அல்லது உங்களுக்கு தேவையான இயற்கை பொடிகளை கூட சேர்த்துக்கொள்ளலாம். நீரின் சூடு ஆறிய உடன் இதனை தலைக்கு உபயோகப்படுத்தலாம்.

ஆயில் மசாஜ்:

ஆயில் மசாஜ்:

நீங்கள் இரவு தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலால் நீங்கள் நன்றாக தலைமுடி மற்றும் முடியின் வேர்கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்து, துணியால் முடியை கவர் செய்து கொள்ள வேண்டும். காலையில் சீகைக்காயால் தலைமுடியை அலச வேண்டும். முடி அலைபாயவும், மின்னல் போன்று பளபளப்பாகவும், நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகரால் தலைமுடியை அலசிக்கொள்ளுங்கள்..!

பிளாஸ்டிக் சர்ஜரி:

பிளாஸ்டிக் சர்ஜரி:

ஷாருக்கான் தனது முடி நெற்றியின் மீது சரிந்து விழாமல் இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shah Rukh Khan Hair Care Secret

Shah Rukh Khan Hair Care Secret
Story first published: Thursday, July 20, 2017, 13:30 [IST]
Subscribe Newsletter