For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தலைமுடி நன்றாக வளர வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி எனத் தெரியுமா?

வீட்டிலேயே இயற்கை முறையில் ஷாம்பு தயாரிக்கும் முறையை இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

By Suganthi Ramachandran
|

இப்பொழுது நமக்கு தேவையான பியூட்டி பொருட்களை எல்லாம் வீட்டிலேயே உருவாக்கும் முறை வந்துவிட்டது. இதன் மூலம் நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை நமது சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது.

அதாவது முகத்திற்கான பேஸ் பேக்ஸ், மாஸ்க், ஆயில் மற்றும் பல வீட்டிலேயே தயாரிக்க முடிகிறது. எனவே இப்பொழுது உங்கள் கூந்தலுக்கான ஹெர்பல் ஷாம்புவை வீட்டிலேயே தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

Recipe: Homemade Herbal Shampoo With All-Natural Ingredients

முதலில் மார்க்கெட்டிற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை சரியான அளவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்க வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஹெர்பல் ஷாம்புவை வீட்டில் தயாரிப்பதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நிறுத்தும் ஓர் அற்புத வழி!

1) குறைந்த செலவு

இந்த ஹெர்பல் ஷாம்புவிற்கு வாங்கக் கூடிய பொருட்கள் எல்லாம் நமது பட்ஜெட்டில் அடங்கக்கூடியவை. ஒரு பாட்டில் ஷாம்பு தயாரிக்க 100 ரூபாய் போதுமானது.

2. எளிதாக கிடைக்கும்

இதில் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் எளிதாக மார்க்கெட்டில் கிடைக்கக் கூடியவை. எனவே நீங்கள் எப்பொழுது எல்லாம் ஷாம்பு தயாரிக்க நினைக்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் பொருட்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று அதற்கு முன்னரே தயாராக வேண்டிய நிலை இல்லை.

3 . தினமும் பயன்படுத்துவதற்கு சிறந்தது

தினமும் ஷாம்பு பயன்படுத்துதல் நல்லது. சுற்றுச்சூழல் மாசுக்கள் மற்றும் தூசிகள் போன்றவற்றால் நமது முடி அழுக்காகி விடும். எனவே தினமும் ஷாம்பு பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நீங்கள் வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.

தேவையான பொருட்கள் :

வெந்தயம்
உலர்ந்த சிகைக்காய்
உலர்ந்த நெல்லிக்காய்
ரீத்தா (பூந்தி கொட்டை)
தண்ணீர்
இப்பொழுது ஒவ்வொரு பொருட்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளவோம்

தயாரிக்கும் முறை :

வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பு
2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
1/2 கப் உலர்ந்த நெல்லிக்காய்
1/2 கப் உலர்ந்த சிகைக்காய்
10 பூந்தி கொட்டை
1.5 லிட்டர் தண்ணீர்

செய்முறை :

1. முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.
2. மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
3. இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

கவனத்தில் வைக்க வேண்டியவை :

நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் பண்ணி பயன்படுத்த வேண்டுடாம்.
இந்த ஹெர்பல் ஷாம்பு எல்லா வகையான கூந்தலுக்கும் சிறந்தது.
என்ன யோசிக்கிறீங்க இப்பொழுதே இந்த ஹெர்பல் ஷாம்புவால் உங்கள் கூந்தலை அழகாக்கி மற்றவர்களை பொறாமையில் ஆழ்த்துங்கள் .

English summary

Recipe: Homemade Herbal Shampoo With All-Natural Ingredients

Recipe: Homemade Herbal Shampoo With All-Natural Ingredients
Story first published: Tuesday, July 11, 2017, 16:07 [IST]
Desktop Bottom Promotion