முடியை பராமரிக்க டைம் இல்லையா? இந்த நிமிடக் குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஆரோக்கியமான அழகான கூந்தல் தான் உங்கள் உடலின் மொழி. பயாலஜிக்கல் ரீதியாக பார்த்தால் அழகான கூந்தல் எல்லாராலும் கவரப்படுகிறதாம் .

ஆரோக்கியமான கூந்தல் எல்லாருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுக்கள், தவறான பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், அடிக்ஸ்சன்ஸ் , கெட்ட உணவுப் பழக்கம் மற்ற சில காரணங்கள் உங்கள் கூந்தலையும் சருமத்தையும் பாழ்படுத்துகிறது.

இயற்கையாகவே ஹேர் ஒரு அசிடிக், தலைக்கு தடவும் எண்ணெய்கள் மேல் தோலுக்கு ஈரப்பதத்தையும், மினரல்ஸ் அடங்கிய சுடுநீர் இவைகள் தான் முடிக்கு நல்லது. ஹேர் கலரிங், ஹேர் பியூட்டி பொருட்கள் எல்லாம் முடிகளை பாதித்து விடும் .

Quick Hair Packs For Hair Growth

கூந்தலுக்கு இதுவரை என்ன தேய்த்தும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது அல்லவா . எனவே தான் உங்களுக்காக இந்த இயற்கையான நிமிடப் பொழுது ஹேர் பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.

முட்டையின் மஞ்சள் கரு பேக்ஸ் :

ஒரு முட்டையின் கருவை எடுத்து கொண்டு அதனுடன் கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ மாத்திரைகளை இதனுடன் கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு பிரஷ் அல்லது காட்டன் துணியை கொண்டு தலை மற்றும் முடியில் மாஸ்க் போட்டு 45 நிமிடங்கள் கழித்து pH சமமளவுள்ள ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.

குறிப்பு:முட்டையின் வெள்ளைகருவை தவிர்த்திடுங்கள். இது உங்களுக்கு பொடுகு தொல்லையை ஏற்படுத்தி விடும்.

Quick Hair Packs For Hair Growth

வெங்காயம் மற்றும் பூண்டு பேக் :

சல்பர் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இது அதிகமாகவே வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ளது. வெங்காயம் மற்றும் பூண்டை கொண்டு சரியான பதத்தில் பேஸ்ட் தயாரித்து தலை மற்றும் முடியில் தடவிக் கொள்ளவும்.

வறண்ட கூந்தலாக இருந்தால் இதனுடன் கொஞ்சம் விளக்கெண்ணெய்யும், எண்ணெய் பசை கூந்தலாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை முன்னாடியே தடவி பிறகு விளக்கெண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தவும். 45 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு நீரில் அலச வேண்டும்.

Quick Hair Packs For Hair Growth

கடலை மாவு மற்றும் தேன் பேக் :

2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேனுடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சரியான பதத்தில் வைத்துக் கொண்டு தலை மற்றும் முடியில் தடவி 45 நிமிடங்கள் கழித்து அலசினால் அழகான பள பளக்கும் கூந்தலோடு முடியும் நன்றாக வளருமாம்.

Quick Hair Packs For Hair Growth

பப்பாளி பேக் :

நன்றாக பழுத்த பப்பாளியை எடுத்து வெட்டி நன்றாக பிசைந்து கொண்டு அதனுடன் கொஞ்சம் எதாவது க்ரீம் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி 45 நிமிடங்கள் கழித்து அலசவும். வேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யை இதனுடன் சேர்த்து கொள்ளலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக நீண்ட வளர்ச்சியடைந்த கூந்தல் கிடைக்கும்.

பழுத்த வாழைப்பழம் மற்றும் மயோனைஸ் பேக் :

பழுத்த வாழைப்பழங்களை மயோனைஸ் உடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சரியான பதத்திற்கு வந்த பிறகு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யை அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். விட்டமின் ஈ ஆயில் சேர்த்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Quick Hair Packs For Hair Growth

இதை தலை மற்றும் முடியில் தடவி 45 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். இந்த பேக் வறண்ட மற்றும் உடைந்த முடி களுக்கு ஏற்றது. இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம்.

என்னங்க இந்த அதிசயக்கும் ஹேர் பேக்ஸ்களை பயன்படுத்தி அதிசயக்கும் முடியின் வளர்ச்சியை இப்போதிருந்தே பெறுங்கள்.

English summary

Quick Hair Packs For Hair Growth

Quick Hair Packs For Hair Growth
Story first published: Friday, July 14, 2017, 7:00 [IST]