உடைந்த முடிய வெட்ட வேண்டாம். இதோ இரண்டே வாரத்தில் சரி செய்ய சில டிப்ஸ்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நீளமான அடர்த்தியான கூந்தல் இருந்தாலும் கூட முடியின் நுனிப்பகுதி உடைந்து காணப்பட்டால் நன்றாக இருக்காது. இந்த முடி உடைதல் பிரச்சனை பெரும்பான்மையான பெண்களை பாதித்துள்ளது. ரசாயன அழகுப் பொருட்களை உபயோகிப்பதாலும், சரியான ஊட்டச் சத்து இல்லாததாலும் முடி வலுவிழந்து போகும். அதிகப்படியான மாசு, காற்றினாலும் முடி உடைய சந்தர்ப்பம் உண்டு.

தரமான கண்டிஸ்னரை பயன்படுத்துங்கள். மேலும், முடி உடைந்து விட்டால் வெட்டாமல் எப்படி உடைந்த முடியை சரி செய்வது என பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. குளியல் பொடி

1. குளியல் பொடி

சிகைக்காய் 500 கிராம், பச்சைப்பயறு 200 கிராம், வெந்தயம், கார்போக அரிசி, ரோஜா இதழ், செண்பக மொட்டு, வெட்டி வேர், பூந்திக்காய் இவை அனைத்தும் சேர்ந்து 300 கிராம்.

இவைகளை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது அரிசி கஞ்சியுடன் கலந்து, தலையில் தேய்த்து அலசவும், இதனால் முடி உடையாமலிருக்கும். கஞ்சி சேர்த்துக் குளிப்பதால் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

2. மஞ்சள் கரு

2. மஞ்சள் கரு

முட்டை தலைமுடிக்கு அதிக பலன்களை தருகிறது. முட்டையின் வெள்ளை கருவை தலைமுடிக்கு பயன்படுத்துவது பற்றி தெரியும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு பிளவுபட்ட முடிகளை சரி செய்யும் என்பது தெரியுமா?

முட்டையின் மஞ்சள் கருவுடன் ஆலிவ் ஆயில், பாதம் ஆயில் ஆகியவற்றை இரண்டு டிஸ்பூன் அளவிற்கு கலந்து இந்த கலவையை 30-45 நிமிடங்கள் தலையில் மாஸ்க் போடுங்கள். இதை வாரம் இருமுறை செய்தால் முடி உடையாதிருக்கும்.

3. பீர்

3. பீர்

பீரில் உள்ள சக்கரை மற்றும் புரோட்டின் உடைந்த முடிகளை சரி செய்ய உதவுகிறது. நுரை இல்லாத பீரை முடியை அலசிய பின்னர் அப்ளை செய்து 2-3 நிமிடங்கள் விட்டு பின்னர் முடியை அலசிவிட வேண்டும்.

4. பப்பாளி

4. பப்பாளி

பப்பாளியில் உள்ள ஃபோலிக் ஆசிட் வேர்களில் உள்ள வறட்சியை போக்கி முடிக்கு ஊட்டம் அளிக்கிறது. இதனால் முடி வேரிலிருந்து நுனி வரை நன்றாக இருக்க முடிகிறது.

பப்பாளியுடன் யோகார்ட் சேர்த்து பேஸ்டாக கலந்து தலைக்கு மாஸ்க் போட்டு 30-45 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முடியை அலசிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி பளபளப்பாக இருப்பதுடன் வெடிப்புகளும் நீங்கும்.

5. தேங்காய் எண்ணெய்

5. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் காலம் காலமாக தலைமுடி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மிதமாக காய்ச்சி ஆற வைத்து முடியின் வேர் முதல் நுனி வரை தடவி மசாஜ் செய்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் விட்டு தலையை அலச வேண்டும்.

6. கற்றாளை

6. கற்றாளை

கற்றாளை ஒரு சிறந்த அழகு சாதனப்பொருள். இது முடி பிரச்சனைகளை அண்ட விடமால் தடுப்பதிலும் உதவுகிறது. கற்றாளையின் ஜெல்லை முடியில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் 2-3 மணி நேரங்கள் கழித்து மிதமான ஷேம்புவின் மூலம் தலைமுடியை அலசினால், முடி மிருதுவாகவும், பொடுகு பிரச்சனைகள் இல்லாமலும், பிளவுகள் இல்லாமலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

natural home remedies for split ends

here are the some natural home remedies for split ends
Story first published: Friday, June 2, 2017, 19:00 [IST]