For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிரலை தடுத்து அடர்த்தியாக புதிய முடிகளை வளர செய்ய ஒரே தீர்வு எலுமிச்சை!

எலுமிச்சையை நீளமான முடியை பெற எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்

By Lakshmi
|

அனைவருக்குமே தனக்கு அழகான நீளமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கூந்தல் உதிர்வதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கூந்தல் உதிர்வது சாதாரணம் தான் என்றாலும் கூட, அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது உங்களது கூந்தலின் அடர்த்தியை குறைத்துவிடும்.

கூந்தல் உதிர்வு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்பதையே நீங்கள் உங்களது கூந்தலில் பாதியை இழந்த பிறகு தான் உணர்வீர்கள்.. அதன் பின்னர் விலை உயர்ந்த எண்ணெய்கள், ஷாம்புகள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை...

How to use lemon for hair fall

முடி உதிரும் காலத்திலேயே சுதாகரித்துக் கொண்டு, நீங்கள் மிக எளிமையான இந்த முறைகளை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். இந்த பகுதியில் முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்

1. எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் கலந்து கொள்ளவும்.

இந்த மிக்ஸ் செய்த எண்ணெய்யை கொண்டு உங்களது முடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள் இதனால் உங்களது முடி உதிர்வை தடுக்கலாம்.

2. எலுமிச்சை மற்றும் விளக்கெண்ணை

2. எலுமிச்சை மற்றும் விளக்கெண்ணை

2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.

உங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் உங்களது தலைமுடியை அலசுங்கள்..

இதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் உங்களது தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது விட்டால் போதும் என்று ஓடிப்போய்விடும்.

3. எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய்

3. எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய்

பூண்டை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். மசித்த பூண்டுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, அதனுடன் இரண்டும் டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை கொண்டு உங்களது கூந்தலின் வேர்க்கால்களை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை முப்பது நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் தலைமுடியை அலசுங்கள்.

இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்தாலே உங்களது முடி உதிர்தல் பிரச்சனை தீரும்.

4. எலுமிச்சை மற்றும் கற்றாழை ஜெல்

4. எலுமிச்சை மற்றும் கற்றாழை ஜெல்

2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நன்றாக உங்களது முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலசிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு தடவைகள் செய்வதன் மூலமாக உங்களது தலைமுடி உதிர்வு பிரச்சனை தீரும்.

5. எலுமிச்சை மற்றும் இளநீர்

5. எலுமிச்சை மற்றும் இளநீர்

இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறும் மூன்று டீஸ்பூன் அளவிற்கு இளநீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பின்னர், இந்த எலுமிச்சை, இளநீர் கலவையை உங்களது கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் கழித்து உங்களது கூந்தலை அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் கழுவ வேண்டும்.

இந்த எலுமிச்சை மற்றும் இளநீர் கலவையானது உங்களது கூந்தலை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வு குறையும்.

6. எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய்

6. எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய்

இரண்டு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் எண்ணெய்யுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இதனை உங்களது தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும், இதனால் உங்களது முடி உதிர்வு பிரச்சனையானது குறையும்.

7. எலுமிச்சை மற்றும் வெங்காய சாறு

7. எலுமிச்சை மற்றும் வெங்காய சாறு

இரண்டு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காய சாறை எடுத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு கலவையும் தலைமுடியில் போட்டு நன்றாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து மையில்ட் ஷாம்புவினால் கழுவ வேண்டும். இதனை மாதத்தில் ஒரு முறை செய்வதால் முடி உதிர்வு நிறுத்தப்படும்.

8. எலுமிச்சை மற்றும் முட்டை

8. எலுமிச்சை மற்றும் முட்டை

இரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் மையில்ட் ஷாம்புவை கொண்டு வாஷ் செய்ய வேண்டும். இதனால் விரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

9. எலுமிச்சை மற்றும் யோகார்ட்

9. எலுமிச்சை மற்றும் யோகார்ட்

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் அளவு யோகார்ட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இதனை தலையில் அப்ளை செய்வதற்கு முன்னர் தலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து உங்களது தினசரி ஷாம்புவை கொண்டு கூந்தலை அலசிக்கொள்ள வேண்டும்.

10. மருதாணி மற்றும் எலுமிச்சை

10. மருதாணி மற்றும் எலுமிச்சை

மருதாணியை வைத்து தலைக்கு பேக் மாதிரி போடுவதற்கு, முதலில் மருதாணி பௌடரில் 2-3 டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை உங்களது தலைக்கு பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து உங்களது தலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும்.

இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கண்கூடாக தெரியும்.

11. கூந்தல் தைலம்

11. கூந்தல் தைலம்

வெட்டிவேர் - 10 கிராம், சுருள் பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், விளாம் மர இலை - 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.

12. ஆவாரம் பூ

12. ஆவாரம் பூ

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.

13. கருமையான கூந்தலுக்கு..

13. கருமையான கூந்தலுக்கு..

டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.

14. பொடுகுத்தொல்லை

14. பொடுகுத்தொல்லை

ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும். பொடுகும் கூட முடி உதிரலுக்கு ஒரு காரணம் தான். எனவே உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால், அதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.

15. வாரத்தில் ஒருமுறை

15. வாரத்தில் ஒருமுறை

வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது

16. கருகரு கூந்தல்

16. கருகரு கூந்தல்

ஒரு கொத்து கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.

17. கற்றாழை

17. கற்றாழை

கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use lemon for hair fall

How to use lemon for hair fall
Story first published: Friday, November 24, 2017, 16:02 [IST]
Desktop Bottom Promotion