Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செம்பருத்தி பொடியைக் கொண்டு தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
இங்கு செம்பருத்தி பொடியைக் கொண்டு தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், மாசடைந்த சுற்றுச்சூழலால் தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக நார் போன்று காணப்படும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, நெல்லிக்காய், செம்பருத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்போது நாம் அதில் செம்பருத்தியின் பொடியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என காணலாம். தற்போது நகர்புறத்தில் செம்பருத்தி செடியைக் காண்பது என்பது அரிதாக உள்ளது. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் செம்பருத்தி பொடியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தலைமுடியின் வலிமையை அதிகரிக்க...
தலைமுடி பலவீனமாக இருந்தால் தான் உதிர ஆரம்பிக்கும். ஆகவே இதன் வலிமையை அதிகரிக்க, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையாக இருக்கும்.

எண்ணெய் பசை நீங்க...
செம்பருத்தி பவுடர் நல்ல ஹேர் கிளின்சராகவும் பயன்படுகிறது. அதற்கு செம்பருத்தி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும்.

பொடுகு நீங்க...
வெந்தயத்தை இரவு முழுவதும் மோர் மற்றும் செம்பருத்திப் பொடியுடன் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலையில் இக்கலவையை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகில் இருந்து விடுபடலாம்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க...
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு செரும்பருத்தி பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு ஊற வைத்து பின் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க...
செம்பருத்தி பூ மற்றும் இலையை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் நீர் சேர்த்து கலந்து, தலைமுடியின் முனை வரை தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

நரைமுடியைப் போக்க...
செம்பருத்தி பொடி மற்றும் மருதாணி பொடியை ஒன்றாக கலந்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து அலச, நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
