தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும்!

Written By:
Subscribe to Boldsky

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களும், உதடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கண்களின் புருவங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் இருந்தால் தான் அழகு... சிலர் என்ன தான் அழகாக இருந்தாலும், அவர்களுக்கு கண் புருவங்கள் இருக்கின்ற இடமே தெரியாத அளவிற்கு இருக்கும். இவர்களுக்கு கண் இமைகளும், கண்களின் புருவங்களும் சற்று அழகாக இருந்தால் அது முகத்திற்கு மேலும் அழகூட்டும். இந்த கண் புருவங்களை வளர வைக்க நீங்கள் அதிக நேரமோ அல்லது அதிக செலவோ செய்ய தேவையில்லை.. ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரம் தான் இதனை பராமரிக்க தேவைப்படும். இந்த பகுதியில் கண் புருவங்களை வளர செய்யும் இயற்கையான வழிகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரம்:

சீரம்:

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான முடி வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ ஊட்டச்சத்தினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது. இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை தராமல் போகும். இந்த சீரத்தை எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

விட்டமின் ஈ ஆயில் - அரை டீஸ்பூன்

விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

மஸ்காரா பிரஷ் - 1

 பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள். தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள் பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து, புருவத்தை அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

விளக்கெண்ணெயை சிறிது சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டன் கொண்டு துடைக்க வேண்டும். இதனை செய்து வந்தால் அடர்த்தியான புருவத்தை பெறலாம்.

பாதம் எண்ணெய்

பாதம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே பாதாம் எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்தால் புருவங்களின் வளர்ச்சியைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆலிவ் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலும் புருவங்களின் வளர்ச்சியையும், அதன் அடர்த்தியையும் அதிகரிக்கும். அதற்கு தேங்காய் பாலை புருவங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், அதுவும் புருவங்களின் அடர்த்தி மற்றும் கருமையை அதிகரிக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புருவங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பால்

பால்

தினமும் இரண்டு முறை பாலைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

உங்களது புருவங்களுக்கு தினமும் இரவு தூங்க போகும் போது வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை இரவில் தடவி மசாஜ் செய்து விட்டால், புருவங்கள் ஒரே மாதத்தில் அழகாகவும், அடத்தியாகவும் மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get attractive eyebrows

How to get attractive eyebrows
Story first published: Friday, October 27, 2017, 10:14 [IST]