பேன் தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு பொருளை உடனே வாங்குங்க!! பக்க விளைவு இல்லாதது!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

தலையில் ஊறிடும் பேன்களால் அரிப்பு ஏற்படும். பேன் தொல்லை எல்லா வயதினரையும் பாதிக்கும். எப்போதும் தலையை சொரிந்து கொன்டே இருப்பது சமூகத்தில் நம் மேல் இருக்கும் அபிப்ராயத்தை மாற்றும்.

ஆகவே இந்த பேன் தொல்லையை போக்க டீ ட்ரீ எண்ணெய்யை பயன்படுத்தி சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

Home remedies using tea tree oil to get rid of Lice and nits

டீ ட்ரீ எண்ணெய், சருமத்திற்கு குறிப்பாக பருக்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். இவை பேன்களை போக்குவதற்கும் உதவுகின்றன.

இந்த எண்ணெய், பலவிதமான பாக்டீரியா, பூஞ்சை, கிருமி போன்றவற்றை அழிக்கும் திறன் கொண்டது. ஆகையால் தலையில் இருக்கும் பேனையும் போக்கும் திறன் இதற்கு உண்டு. பெரிய பேன்களை மட்டுமில்லாமல், அதன் முட்டைகளாகிய ஈர்களையும் போக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டீ ட்ரீ எண்ணெய்:

டீ ட்ரீ எண்ணெய்:

  • தேவை - டீ ட்ரீ எண்ணெய் மற்றும் பஞ்சு
  • டீ ட்ரீ எண்ணெய்யை பஞ்சால் நனைத்து உச்சந்தலையில் தேய்க்கவும். பின்பு தலை முழுதும் ஒரு துண்டால் மூடவும். இரவு முழுதும் அப்படியே விடவும்.
  • வாரத்திற்கு இரண்டு முறை பேன் மற்றும் ஈர் குறையும் வரை செய்யலாம்.

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் ஷாம்பு:

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் ஷாம்பு:

தேவை :

ஷாம்பு மற்றும் டீ ட்ரீ எண்ணெய்

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சிறிதளவு டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து தலையில் ஊற்றி குளியுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.

பேன் இல்லாதவர்களும் பொதுவாகவே இந்த முறையை சில வாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் பேன் தொல்லை அறவே நீக்கப்படுகிறது.

டீ ட்ரீ எண்ணெய் ஸ்பிரே :

டீ ட்ரீ எண்ணெய் ஸ்பிரே :

தேவை :

100 மிலி தண்ணீர், ஸ்பிரே பாட்டில் , டீ ட்ரீ எண்ணெய்

தண்ணீர் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து பாட்டிலில் ஊற்றவும். நன்றாக குலுக்கி விட்டு, தலையில் ஸ்பிரே செய்யவும். ½ மணி நேரம் கழித்து ஷாம்பூவால் தலையை அலசவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம். குழந்தைகளுக்கும் இதனை பயன்படுத்தலாம்.

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்:

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்:

தேவை :

2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில துளி டீ ட்ரீ எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து தலையில் நன்றாக தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலையை அலசவும்.

வாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:

தேவை;

2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 5-6 துளி டீ ட்ரீ எண்ணெய்

2 எண்ணெய்யையும் நன்றாக கலந்து தலையில் தேய்க்கவும். 1 மணிநேரம் கழித்து தலையை அலசவும். பேன் தொல்லை தீரும்வரை வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தவும்.

மயோனைஸ் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:

மயோனைஸ் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:

2 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் சில துளி டீ ட்ரீ எண்ணெய் , ஒரு ஷவர் கேப்

மயோனீஸுடன் இந்த எண்ணெய்யை கலந்து தலையில் தடவவும். ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடவும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பூவால் தலையை அலசவும்.

வாரத்தில் 3 அல்லது 4 முறை இதனை செய்யலாம்.

மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம். இன்றே முயற்சியை தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies using tea tree oil to get rid of Lice and nits

Home remedies using tea tree oil to get rid of Lice and nits
Story first published: Monday, October 9, 2017, 8:15 [IST]