அடர்த்தியான கூந்தல் பெறனுமா? இதெல்லாம் சூப்பர் குறிப்புகள்!!

Written By:
Subscribe to Boldsky

கூந்தல் அடர்த்தியாக இருப்பதுதான் அழகு. அடர்த்தியான கூந்தல் பெற, பராமரிப்புடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் முடி உதிர்தலை கட்டுப்படுத்துவது.

ஏனென்றால் நீங்கள் என்னதான் அடர்த்தியாக எண்ணெய் மசாஜ் , ஹேர் மாஸ்க் செய்து கொண்டாலும், முடி உதிர்தல் தொடர்ந்து கொண்டிருந்தால் அடர்த்தி வராது. முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் அற்புத வழிகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது. படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டி :

ஐஸ் கட்டி :

முடி உதிர்தல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் அந்த இடத்தில் தினமும் ஐஸ் கட்டி தடவுங்கள். இதனல் வேகமாக முடி வளரும். முடி உதிர்தலும் நிற்கும்.

கசகசா மற்றும் பாசிப்பருப்பு :

கசகசா மற்றும் பாசிப்பருப்பு :

கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அதனுடம் பயித்தமாவுடன் கலந்து தலையில் தேய்க்கவேண்டும். 15 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் ஒமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

முடக்கத்தான் கீரை :

முடக்கத்தான் கீரை :

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளியுங்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை :

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை :

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக கலக்கி வையுங்கள். ஒரு நாள் ஊறிய பின் அந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் முடி உதிர்தல் நின்று கூந்தல் அடர்த்தியாக வளரும்

வெங்காயச் சாறு :

வெங்காயச் சாறு :

வெங்காயச் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கல். அருமையாக கூந்தலை வளரச் செய்யும். முடி அடர்த்தி பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to grow hair thicker and stronger

Home remedies to grow hair thicker and stronger
Story first published: Monday, January 23, 2017, 8:06 [IST]
Subscribe Newsletter