அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு, கெமிக்கல் கலந்த ஷாம்புக்கள், மோசமான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை போன்றவற்றால் தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிர ஆரம்பித்து எலி வால் போன்று பலருக்கு ஆகிவிடுகிறது.

Here is How To Apply Castor Oil To Grow Luscious, Thick and Enviable Hair!

தலைமுடி உதிர்வதை நினைத்தே நிறைய பேர் அதிக கவலைக்குள்ளாகிறார்கள். அதோடு தலைமுடி உதிர்வதைத் தடுக்க கடைகளில் விற்கப்படும் பல எண்ணெய்கள் மற்றும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைத்தபாடில்லை.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரித்து, தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைத் தடுக்கும். அதில் ஒரு அற்புதமான பொருள் தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெயில் உள்ள மருத்துவ குணத்தால், சேதமடைந்த தலைமுடி மீண்டும் வளரும் என்றால் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களான பல்வேறு மசாஜ் எண்ணெய் மற்றும் மருந்துகளில் முக்கியப் பொருளாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் விளக்கெண்ணெயை சரியான அளவில் உட்கொண்டால், குடலில் உள்ள புழுக்கள் அழிவதோடு, மலச்சிக்கலில் இருந்தும் விடுபடலாம்.

தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது?

தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது?

விளக்கெண்ணெய் தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த வல்லது. அதற்கு இதனைக் கொண்டு அடிக்கடி தலைமுடியைப் பராமரிக்க வேண்டும். கீழே எந்த பிரச்சனைக்கு விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொடுகு நீங்க...

பொடுகு நீங்க...

ஏராளமானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் பொடுகு. இதிலிருந்து விடுபட ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு நீங்கும்.

நீளமான கண் இமைகளைப் பெற...

நீளமான கண் இமைகளைப் பெற...

நீளமான கண் இமைகள் வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய் கண் இமைகளில் தடவுங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளரும்.

முடி வெடிப்புகள் நீங்க...

முடி வெடிப்புகள் நீங்க...

முடி வெடிப்புக்கள் அதிகம் இருப்பின், விளக்கெண்ணெயை முடியின் முனைகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.

அடர்த்தியான முடியைப் பெற...

அடர்த்தியான முடியைப் பெற...

விளக்கெண்ணெயில் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும். அதற்கு வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

குறிப்பு

குறிப்பு

விளக்கெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here is How To Apply Castor Oil To Grow Luscious, Thick and Enviable Hair!

Want to know how to apply castor oil to grow luscious, thick and enviable hair? Read on to know more...
Story first published: Saturday, December 9, 2017, 15:30 [IST]
Subscribe Newsletter