பெண்களுக்கான இப்ப ட்ரெண்ட் ல இருக்கிற லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்ஸ் என்னென்ன?

By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விஷயம் உங்கள் ஹேர் ஸ்டைல் அழகு தான். எந்த விதமான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தாலும் உங்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர் கட் மற்றும் ஸ்டைல் தான் உங்கள் அழகை முழுமையடையச் செய்யும்.

என்ன தான் நீங்கள் அழகுக் கலை நிபுணர்களிடம் சென்று ஹேர் கட் மற்றும் ஸ்டைல் செய்தாலும் உங்கள் விருப்பத்தை அவர்களுக்கு புரிய வைப்பது என்னவோ சிரமமாக தான் இருக்கும் அல்லவா.

கொஞ்சம் 40 யை தாண்டினால் போதும் உங்கள் அழகை பற்றிய பராமரிப்புக்கும் வயதாகி விடுகிறது. அதன் மேல் அக்கறை இல்லாமல் போய் விடுகிறீர்கள்.

ஆனால் உங்கள் 40களிலும் நீங்கள் ஒரு அசத்தும் ஸ்டைலை மேற்கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் தமிழ் போல்டு ஸ்கை இங்கே அட்டகாசமான ஹேர் ஸ்டைல் ட்ரெண்டை வழங்க உள்ளது.

கண்டிப்பாக இந்த ஹேர் ஸ்டைல்கள் உங்கள் வயதை குறைத்து இளமையை துள்ளவிடும் என்பது தான் உண்மை. இந்த ஹேர் ஸ்டைல்யை பின்பற்றி அழகு பாருங்கள் அப்புறம் தெரியும் நீங்களும் ஒரு தேவதை தான் என்பது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஷோல்டர் லென்த் ஹேர் ஸ்டைல் :

ஷோல்டர் லென்த் ஹேர் ஸ்டைல் :

நீங்கள் தேவதை போல் காட்சியளிக்க வேண்டும் என்று உங்கள் அழகுக் கலை நிபுணர்களிடம் கேட்டாலே அவர்கள் பரிந்துரைப்பது தோள்பட்டையை தழுவும் ஹேர் ஸ்டைல்லை தான். இது தாங்க இப்போ புது ட்ரெண்ட். இந்த ஹேர் ஸ்டைல் 30 வயதுள்ள பெண்களுக்கு பொருத்தமானது. இது உங்கள் தோற்றத்தை பத்து வயது குறைத்து காட்டும்.

 லேயர்ஸ் ஹேர் ஸ்டைல்

லேயர்ஸ் ஹேர் ஸ்டைல்

உங்கள் முடி குட்டையாக இருந்தால் உங்கள் நீளத்தை பராமரிக்க ஏற்ற ஹேர் ஸ்டைல் லேயர்ஸ். இதற்கு சாஃப்ட் லேயர்ஸ் பயன்படுத்தினால் போதும். நேரான மற்றும் ப்ளண்ட் கட் உங்களை வயது முதிர்ச்சியாக காட்டும். அதுவே நீங்கள் அடர்த்தி குறைந்த கூந்தல் பெற்று இருந்தால் இந்த லேயர் கட் உங்கள் அடர்த்தியை அதிகரித்து அழகாக காட்டும்.

பங்ஸ்

பங்ஸ்

பங்ஸ் உங்களுக்கு இளமையை சேர்க்கும் ஹேர் ஸ்டைல் ஆகும். அதன் முடிவில் லேயரிங் பண்ண வேண்டும். பங்ஸ் ஹேர் ஸ்டைல் வேகமாக வளர்ந்து விடக் கூடியது எனவே இதை அடிக்கடி பராமரிக்க வேண்டும்.

நீங்கள் அடர்த்தி குறைந்த முடியை பெற்று இருந்தால் உங்கள் நெற்றியில் பங்ஸ் வைக்கும் போது உங்கள் அடர்த்தியை அதிகப்படுத்தி காட்டும். இந்த நெற்றியில் இருக்கும் பங்ஸ் உங்கள் ஹேர் ஸ்டைல்யை முழுமைபடுத்தி காட்டும்.

 நீளமான பாப்

நீளமான பாப்

20 மற்றும் 30 காலத்தில் பார்த்தால் குட்டையான பாப் ஹேர் ஸ்டைல் மேற்கொண்டனர். இப்பொழுது நீளமான பாப் புது ட்ரெண்ட்டாக வந்துள்ளது. இது உங்கள் தோற்றத்தை இளமையாகவும் தேவதை போலவும் மாற்றி விடும்.

இந்த ஹேர் ஸ்டைல் எல்லா முக வடிவத்திற்கும் புகழ்ச்சியை தேடித் தரும். கொஞ்சம் குட்டையான ஹேர் கட் முன்னாடியும், இரண்டு பக்கவாட்டிலும் பாப் கட்டுடன் நடந்து சென்றால் நீங்கள் தேவதை தான்.

 கலரிங் ஹேர்

கலரிங் ஹேர்

உங்கள் வயதை குறைக்க விரும்பினால் உங்கள் கூந்தலுக்கு லைட் கலரிங் செய்யலாம். அழகான பிரவுன் கலரிங் ஹேர் உடன் செஸ்ட்நெட் ஹேர் ஸ்டைல் கொண்டு சென்றால் நீங்கள் அழகி ஆகி விடுவீர்கள்.

உங்கள் கலரை ஹைலைட் செய்ய ஆழமான சமமான கலரிங்கை மேற்கொள்ளுங்கள், அதே நேரத்தில் சாலிட் கலர் உங்களுக்கு ரெம்ப பளிச்சென்ற லுக்கை கொடுக்கும்.

உங்கள் சரும நிற கலரில் ஹேர் கலரிங் செய்யாதீர்கள். அது உங்களுக்கு ஒரு வித்தியாசத்தை கொடுக்காது. கொஞ்சம் உங்கள் சரும நிறத்திற்கு அடர்ந்த நிறங்களில் இரண்டு ஷேடிங்காவது கொடுக்க வேண்டும். இன்னும் புதுமையான கலர் கொண்டு ஹைலைட் செய்தால் தேவதை ஆகிவிடுவீர்கள

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Trends That Will Make You Feel Like A Diva

Hair Trends That Will Make You Feel Like A Diva
Story first published: Monday, August 28, 2017, 13:32 [IST]
Subscribe Newsletter