முடி உதிர்வால் அவதியா? உடனடி பலன் தரும் இந்த குறிப்பை யூஸ் பண்ணிப் பாருங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

முடி உதிர்தல் என்பது இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை. ஹெல்மெட் அணிவதால் ஆண்களுக்கு முடி இழப்பு ஏற்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.

அதனால் தலையில் ஒரு துணியை கட்டி அதன் மீது ஹெல்மெட் அணிவது இன்று ஒரு பழக்கம் ஆகி விட்டது. பெண்களும் இதனையே பின்பற்றி வருகின்றனர். வெளியில் இருக்கும் மாசு மற்றும் தூசு முடி உதிர்தலுக்கு ஒரு முக்கிய காரணம்.

Effective home remedies to control hair fall

எது எப்படி இருந்தாலும், நமது தலை முடியை சரியாக பராமரிப்பது நமது கடமை ஆகும். தலை முடி உதிர்வதை தடுக்க சில இயற்கை வழிமுறைகள் இங்கே கொடுக்க பட்டுள்ளது. இவற்றை படித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் பால்:

தேங்காய் பால்:

1 கப் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பிரஷ் கொண்டு தேங்காய் பாலை தலை முழுதும் தடவவும்.

பின்பு ஒரு துண்டால் தலை முழுதும் கட்டி கொள்ளவும்.

20 நிமிடம் கழித்து துண்டை எடுத்து விட்டு தலையை அலசவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

கற்றாழை:

கற்றாழை:

தலையை நன்றாக அலசி தூய்மையாக வைத்து கொள்ளவும்.

கற்றாழையில் இலையில் இருக்கும் அந்த ஜெல்லை எடுத்து தலையில் தடவவும்.

சூழல் வடிவில் நன்றாக மென்மையாக மசாஜ் செய்யவும்.

15 நிமிடம் கழித்து மறுபடி தலையை அலசவும்.

தலைக்கு குளித்தவுடன் வாரத்திற்கு 3 முறை இதனை செய்யவும்.

கவனிக்க வேண்டியது:

கவனிக்க வேண்டியது:

செடியில் இருந்து கற்றாழை இலையை எடுக்கும்போது மஞ்சள் நிறத்தில் பால் வெளிப்படும். இது சில சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகையால் இலைகளை பறித்தவுடன் சிறிது வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு அந்த சாறை எடுத்து தடவுவதன் மூலம் அதன் நச்சு அகற்றப்பட்டுவிடும்.

வேப்பிலை:

வேப்பிலை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் 10-12 வேப்பிலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.

அந்த நீர் பாதியாகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

பிறகு அந்த நீரை நன்றாக ஆற விடவும்.

எப்போதும் போல் ஷாம்பூவால் தலையை அலசவும்.

கடைசியாக வேப்பிலை நீரை கொண்டு தலையை அலசவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

கவனிக்க வேண்டியது:

கவனிக்க வேண்டியது:

வேப்பிலை நீர் கண்களில் பட்டால் கண்கள் எரியும். அதனால் இதனை கவனமாக கையாளவும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காய்:

4-5 நெல்லிக்காயை எடுத்து மசித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் அதே அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த கலவையை தலையில் தடவவும்.

நன்றாக காய்ந்தவுடன் தலையை அலசவும்.

வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

 கிரீக் யோகர்ட்:

கிரீக் யோகர்ட்:

1 கிண்ணத்தில் 1 ஸ்பூன் யோகர்ட் செக்கவும்.

இதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இந்த கலவையை பேஸ்ட் போல் செய்யவும்.

அதனை தலையில் வேர்க்கால்களில் படும்படி பிரஷ் பயன்படுத்தி தடவவும்.

30 நிமிடம் கழித்து தண்ணீரால் தலையை அலசவும்.

வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

பீட் ரூட் :

பீட் ரூட் :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சில பீட்ரூட் இலைகளை போட்டு கொதிக்க விடவும்.

அந்த நீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

அந்த இலைகளுடன் சிறிது மருதாணி இலைகளை சேர்த்து அரைக்கவும்.

அந்த விழுதை தலையில் தடவவும்.

20 நிமிடம் கழித்து தலையை அலசவும்.

வாரத்திற்கு 3 முறை இதனை செய்யலாம்.

வெங்காயம்:

வெங்காயம்:

1 வெங்காயத்தை அறிந்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பஞ்சை அந்த சாறில் நனைத்து தலையில் தடவவும்.

வேர்க்கால்களில் படும்படி நன்றாக தடவவும்.

30 நிமிடங்கள் கழித்து தலையை குளிர்ந்த நீரால் அலசவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

 க்ரீன் டீ :

க்ரீன் டீ :

வெந்நீரில் க்ரீ டீ பேக்கை போட்டு வைக்கவும்.

10 நிமிடம்கழித்து நீர் குளிர்ந்ததும் தலையில் அந்த நீரை தெளித்து நன்றாக மசாஜ் செய்யவும்.

பின்பு தலையை தண்ணீரால் அலசவும்.

கடைசியாக டீ தண்ணீரால் ஒரு முறை தலையை அலசவும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி கொள்ளவும்.

எண்ணெய் குளிர்ந்தவுடன் அதனை தலையில் தடவவும்.

30 நிமிடம் கழித்து தலையை அலசவும்.

இரவு உறங்க செல்வதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் கூட தலைக்கு குளிக்கலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்யலாம்.

குறிப்பு:

குறிப்பு:

தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் தலை முடியின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது .இதனால் முடி உடையாமல் தடுக்கப்படுகிறது. பாதாம் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடியை வலிமையாக்குகிறது.

முடி உதிர்விற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், சரியான பராமரிப்பின் மூலம் முடி உதிர்வை குறைக்கலாம். ஆகவே இந்த குறிப்புகளை பயன்படுத்தி முடி உதிர்வை கட்டுப்படுத்தி அழகான , அடர்த்தியான , நீளமான கூந்தலை பெற எங்கள் வாழ்த்துகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective home remedies to control hair fall

Effective home remedies to control hair fall
Story first published: Friday, October 27, 2017, 8:30 [IST]
Subscribe Newsletter