புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது? நடிகைகளின் அட்வைஸ்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

புடவையில் எந்த பொண்ணா இருந்தாலும் ரொம்ப அழகா இருப்பாங்க... ஆனா புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். நகை எதுவும் போடமா இருந்தா கூட பிரச்சனையில்லை. ஆனால் ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின்.

நீங்க ஹீரோயின் மாதிரி தெரியனும்னா, ஹீரோயின் மாதிரியே ஹேர் ஸ்டைல் செய்யலாமே! நீங்க புடவை சில ஹீரோயின்களை பாக்கும் போது, அசந்து போயிருப்பிங்க... ஏன் அதே ஹேர் ஸ்டைலை நீங்களும் செய்ய கூடாது? அது எல்லாம் ரொம்ப கஷ்டம்னு நினைக்கறீங்களா? இல்லவே இல்லை.. வெறும் 5 நிமிஷம் போதும் ஈசியான ஹேர் ஸ்டைல்கள் தான்.

வாங்க! இப்போ நம்ம தமிழ் ஹீரோயின்கள் புடவை அணியும் போது என்ன ஹேர் ஸ்டைல் வச்சுக்கறாங்கனு பாக்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஒரு புற ஜடை!

1. ஒரு புற ஜடை!

நீங்க நயன்தாராவை பல படங்கள் மற்றும் விழாக்களில் பார்த்திருப்பீங்க. அவங்களோட ஹேர் ஸ்டைல் அனைவரையும் ஈர்த்திருக்கும். இது சிம்பிளான ஒரு புற ஜடை தான். ஆனா இது கொஞ்சம் லூசா இருந்தா சூப்பரா இருக்கும்.

2. ப்ரீ ஹேர்!

2. ப்ரீ ஹேர்!

நீங்க ரொம்ப நேரம் புடவையில் இருக்க வேண்டும் என்றால் ப்ரீ ஹேர்விடுவது சூப்பரா இருக்கும். ஆனா இது குறைவான முடி உள்ளவர்களுக்கு மட்டுமே செட்டாகும்.

3. நார்மல் ஜடை

3. நார்மல் ஜடை

நார்மல் ஜடை போட்டு தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பெண்கள் ஜிமிக்கி மற்றும் நெக்லஸ் போட்டால் சூப்பரா சர்வ லட்சணமும் பொருந்தின மாதிரி இருக்கும்.

4. கொண்டை

4. கொண்டை

புடவைக்கு ஏற்ற பாரம்பரிய ஹேர் ஸ்டைல் தான் இந்த கொண்டை. உங்கள் உயரத்திற்கு ஏற்ற மாதிரி உயரமான கொண்டையா அல்லது நார்மலான கொண்டையா என்பதை தேர்வு செய்யலாம். இதில் பூக்களை வைத்து அலங்கரித்தால் சூப்பராக இருக்கும்.

5. லேயர் ஹேர் ஸ்டைல்

5. லேயர் ஹேர் ஸ்டைல்

லேயர் ஹேரில் பேன்சியாக சில சிறிய கொண்டைகளை போட்டுக்கொண்டு சென்றால், நீங்கள் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பாக அமையும். ஆனால் இதற்கு உங்களுக்கு ஒரு எக்ஸ்பேர்ட்டின் உதவி தேவை.

6. போனி டெயில்

6. போனி டெயில்

போனி டெயிலை சற்று வித்தியாசமாக போட்டு சென்றால் நீங்கள் மாடர்ன் பெண் போல காட்சியளிப்பீர்கள். இது டிசைனர் புடவைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

celebrity inspired hairstyle with saree

here are the some celebrity inspired hairstyle with saree
Story first published: Tuesday, July 11, 2017, 12:40 [IST]